惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
美团技术团队
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
D
Docker
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Google DeepMind News
Google DeepMind News
腾讯CDC
Vercel News
Vercel News
Engineering at Meta
Engineering at Meta
U
Unit 42
The Cloudflare Blog
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
爱范儿
爱范儿
Recent Announcements
Recent Announcements
博客园 - 聂微东
博客园 - 叶小钗
H
Help Net Security
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக உடன் காங்கிரஸ் விரைவாக கூட்டணி அமைத்தது ஏன்? - மாணிக...
2026-05-24 · via hindutamil

Updated on

2 min read

சிவகாசி: பாஜக ஆணைப்படி திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதாக தகவல் வந்ததை அடுத்தே, தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததாக அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “எதிர்கட்சித் தலைவராக பொறுப்புடன் செயல்படவேண்டிய உதயநிதி பொறுப்பு இல்லாமல் பேசி உள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்துக் கொண்டு இளைஞரணி கூட்டத்தை கூட்டி காங்கிரசுக்கு எதிராக பேசி உள்ளார். அவரை துணை முதல்வராக தோளில் சுமந்தது காங்கிரஸ்.

பாஜக ஆணைப்படி அதிமுக, திமுக கூட்டணி அமைப்பதாக தகவல் வந்ததை அடுத்துதான் தவெக உடன் கூட்டணி அமைத்தோம். விஜய் முதல்வராக கூடாது என பாஜக நினைத்தது. மே 4- ம் தேதி மாலை பாஜக மூத்த தலைவர் பேசி அதிமுக, திமுக கூட்டணி அமைக்க கனெக்டிங் கால் போட்டுள்ளார்.

இதை அறிந்து தான் மே 5- ம் தேதி டெல்லியில் உயர்நிலை கூட்டத்தை கூட்டி, 6-ம் தேதி தவெக கூட்டணி என்ற முடிவை அறிவித்தோம்.

அதிமுக - திமுக கூட்டணிக்கு முயற்சி நடந்தது என்பதை சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி, விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் உறுதி செய்துள்ளனர். திமுக தனது பொய் நாடகங்களை நிறுத்த வேண்டும். திமுக, அதிமுகவுடன் சேர்ந்து வெகு விரைவாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும்.

திமுகவின் கொள்கைகளை உதயநிதி குழி தோண்டி புதைத்துக் கொண்டிருந்தார். அதிமுக உடன் கூட்டணி அமைக்க துள்ளி குதித்தவர் உதயநிதி. நாடாளுமன்றத்தில் தனியாக இடம் கேட்கும் திமுக மெல்ல பாஜக அருகில் சென்று விடும். 2029 பாராளுமன்ற தேர்தலை அதிமுக, திமுக, பாஜக இணைந்து சந்திக்கும்.

இந்த தேர்தலில் போதை பொருள், பெண்கள் பாதுகாப்பு முக்கிய பிரச்சினையாக இருந்தது. மகளிர் பாதுகாப்பு தான் முக்கியம் என முதல்வர் கூறி உள்ளார். இன்னும் அதிகாரிகளை கூட முழுமையாக மாற்றவில்லை. அரசுக்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும்.

இண்டியா கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. திமுக விலகி விட்டது, அதற்கு பதிலாக தவெக இணைந்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை நனவாகி உள்ளது. அமைச்சரவையில் இடம் பெற்றதன் மூலம் கூட்டணி மேலும் உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும். விரைவில் தவெக கூட்டணிக்கு பெயர் அறிவிக்கப்படும்.

பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டால் 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3 முறை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும். பாஜகவை வீழ்த்த ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ அசோகன், வழக்கறிஞர் குப்பையாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.