惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
小众软件
小众软件
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
大猫的无限游戏
大猫的无限游戏
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - Franky
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
量子位
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கோரி பிரதமர் மோடியிடம் ...
வேட்டையன் · 2026-05-27 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய தெளிவுரை வழங்கக் கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் நீண்ட கடிதம் ஒன்றை வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது அவரிடம் முதல்வர் விஜய் கடிதம் அளித்தார். அதன் விவரம்:

சில அரசு விழாக்களின் போது தேசியப் பாடலைப் பாடுவது தொடர்பான, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 28.01.2026 நாளிட்ட ஆணை எண்: 14/2/2025- Public குறித்து கனிவான கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

தமிழக அரசும், தமிழக மக்களும் நாட்டுப்பண் மற்றும் தேசியப் பாடலுக்கு மிக உயரிய மரியாதையை அளித்து வருகின்றனர். அனைத்து தேசியச் சின்னங்களுக்கும் உரிய கண்ணியத்தையும், நன்மதிப்பையும் தமிழகம் தொடர்ந்து அளித்து வருவதுடன், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் திகழ்கிறது.

மேலும், தமிழகத்தில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடப்பட்டு வருவது குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். 1891-ஆம் ஆண்டில் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு வாழ்த்துப் பாடலாகும்.

கடந்த பல்லாண்டுகளாக தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு, கல்வி, பண்பாடு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இப்பாடல் பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழகத்தின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டு, மாநிலத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் என தமிழக அரசு முறையாக அறிவித்துள்ளது.

மேற்சொன்ன உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தொடர்ந்து, வந்தே மாதரம், நாட்டுப்பண் மற்றும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்ற வரிசைமுறையை மக்கள் மாளிகை பின்பற்றி வருகிறது. நாட்டுப்பண் பாடப்பட்ட பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடும் இந்த வரிசைமுறை, மாநிலத்தில் நீண்டகாலமாக அரசால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு மாறாக அமைந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் பொதுமக்களிடையே பெரும் கவலையையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மொழிப் பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து, மாநிலத்தின் வாழ்த்துப் பாடலாகத் தமிழகத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் மேற்படி ஆணையைத் தொடர்ந்து இந்த நடைமுறை சில குறிப்பிட்ட அரசு விழாக்களில் மாற்றப்பட்டுள்ளது. உள்துறை

அமைச்சகத்தின் ஆணையில் மாநில வாழ்த்துப் பாடலை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடுவதற்கு யாதொரு தடையும் விதிக்கப்படவில்லை. எனினும் அண்மைக் காலங்களில் மக்கள் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணைக்கு உரிய தெளிவுரை வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்தகைய தெளிவுரை, உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு இணக்கமாக மாற்றுவதுடன், நிர்வாக ரீதியிலான குழப்பங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிப்பதாகவும் அமையும். இவ்விவகாரத்தில் கனிவுடன், விரைந்து ஆவன செய்ய வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.