惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
GbyAI
GbyAI
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Google DeepMind News
Google DeepMind News
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
博客园 - 司徒正美
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Blog — PlanetScale
Blog — PlanetScale
B
Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
V2EX
L
LangChain Blog
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எது சுதந்திரம் | கதை
கீர்த்தி · 2026-06-24 · via hindutamil

Updated on: 

அந்த வீட்டுப் பாட்டி அழகான மஞ்சளும் பழுப்பு நிறமும் கலந்த கோழி ஒன்றை வளர்த்துவந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐந்து முட்டைகளை அடைகாக்க வைத்தார். முட்டைகள் பொரிந்து ஐந்து கோழிக் குஞ்சுகள் வெளியே வந்தன. அதில் தாய்க் கோழியைப் போல பழுப்பு நிறத்தில் இரண்டு குஞ்சுகளும் கறுப்பு நிறத்தில் இரண்டு குஞ்சுகளும் ஒரு வெள்ளைக் குஞ்சும் இருந்தன.

சில நாள்களிலேயே குஞ்சுகள் நடக்கத் தொடங்கி விட்டன. அவை தாய்க்கோழியுடன் சுற்றித் திரிந்தன. பொழுது விடிந்ததும் பஞ்சாரத்தில் அடைத்து வைத்திருக்கும் கோழியையும் குஞ்சுகளையும் பாட்டி வெளியேவிடுவார். அவை மாலைப் பொழுதுவரை தோட்டத்தில் மேயும். பிறகு வீட்டிற்குத் திரும்பி வரும்.

பஞ்சாரத்துக்குள் தாய்க்கோழியை வரச் சொல்வார் பாட்டி. தாய்க்கோழியும் உடனே சென்றுவிடும். குஞ்சுகளும் தாய்க்கோழி பின்னாலேயே சென்று பஞ்சாரத்திற்குள் அடைபடும். வெள்ளைக் கோழிக்குஞ்சுக்கு மட்டும் அப்படி அடைபட்டுக் கிடப்பதில் விருப்பம் இல்லை. அது இரவிலும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய விரும்பியது.

அன்றும் பாட்டி தாய்க்கோழியைப் பிடித்து பஞ்சாரத்திற்குள் அடைத்தார். கோழிக்குஞ்சுகளும் பஞ்சாரத்திற்குள் அடைந்தன. உடனே வெள்ளைக் கோழிக்குஞ்சு, “அம்மா, பகல் முழுவதும் நாம் சுதந்திரமாகத் தோட்டம் முழுவதும் சுற்றி வருகிறோம்.

மாலை வந்ததும் நீங்கள் ஏன் வீட்டிற்குள் வந்துவிடுகிறீர்கள்? பாட்டி கைநீட்டியதும் ஏன் கூடைக்குள் பதுங்குகிறீர்கள்? இரவு முழுவதும் ஏன் நாம் சிறைக்குள் இருக்க வேண்டும்?” என்று கேட்டது.

“இப்போது சொன்னால் உனக்குப் புரியாது. சற்று வளர்ந்ததும் நீயாகவே தெரிந்து கொள்வாய்” என்றது தாய்க்கோழி. அந்தப் பதில் வெள்ளைக் கோழிக் குஞ்சுக்குத் திருப்தியாக இல்லை.

அது தன் தாயைக் கோழை என்றே நினைத்துக் கொண்டது. ‘இன்று மாலை நான் அம்மா உடன் கூடைக்குள் வரப்போவதில்லை.பாட்டியின் கண்களில் படாதவாறு ஒளிந்துகொண்டால், கூடைக்குள் செல்ல வேண்டியதில்லை. இரவிலும் மகிழ்ச்சியாகச் சுற்றித் திரியலாம்’ என்று திட்டம் போட்டது வெள்ளைக் கோழிக்குஞ்சு.

மறுநாள் காலை முழுவதும் தோட்டத்தில் மேய்ந்த கோழியும் அதன் குஞ்சுகளும் மாலையில் வீட்டிற்குத் திரும்பின. வெள்ளைக் கோழிக்குஞ்சு மட்டும் வீட்டிற்கு வரவில்லை. பாட்டி தாய்க்கோழியை மட்டும் பிடித்து பஞ்சாரத் திற்குள் அடைத்தார்.

தாயை அடைத்துவிட்டால், தாயின் பின்னாலேயே எல்லாக் குஞ்சுகளும் பஞ்சாரத்திற்குள் அடைந்துவிடும் என்பதால் ஒரு குஞ்சு வீட்டிற்குத் திரும்பவில்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. வெள்ளைக் கோழிக்குஞ்சு தோட்டத்தில் இருந்தது.

‘ஆஹா, இன்று எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறது! இரவு முழுவதும் தோட்டத்தில் சுற்றித் திரியலாம்’ என்று நினைத்து அங்கும் இங்கும் ஓடியது. சற்று நேரத்தில் இருட்டிவிட்டது. அமாவாசை நாள் என்பதால் நிலா வெளிச்சமும் இல்லை. இப்போது கோழிக்குஞ்சுக்கு இருட்டில் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

அது குத்துமதிப்பாக நடந்து போனது. அப்போது திடீரென்று அதன் இறக்கையை யாரோ பற்றி இழுப்பது போலத் தோன்றியது. சட்டென்று கோழிக்குஞ்சு திரும்பிப் பார்த்தது. ஒரு பாம்பு. பதறிப்போன கோழிக்குஞ்சு சிறகுகளைப் படபடவென அடித்து முன்னோக்கிப் பறந்தது. அது சிறகையடித்த வேகத்தில் பாம்பின் வாயிலிருந்து தப்பிவிட்டது.

கோழிக்குஞ்சு ஒரு செடி மறைவுக்குப் போய், சிறிது நேரம் அமர்ந்திருந்தது. பாம்பு தன்னை விழுங்க வந்ததைக் கோழிக்குஞ்சு மறந்துவிட்டது. மெதுவாக மீண்டும் அங்கும் இங்கும் ஓடி விளையாடத் தொடங்கியது. அப்போது தன்னை நோக்கி யாரோ ஓடிவருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தது கோழிக்குஞ்சு. பூனை ஒன்று அதை நோக்கிப் பாய்ந்து வந்தது.

‘ஐயோ, இந்தப் பூனை பகல் பொழுதிலேயே நம்மைத் துரத்துமே. இப்போது நமக்குத் துணையாக யாரும் இல்லையே’ என்று நினைத்துப் பயந்து வேகமாக ஓடியது. பூனையும் பின்னால் துரத்திக்கொண்டு வந்தது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஓர் எலி குறுக்காக ஓடிவந்தது. எலியைக் கண்ட பூனை கோழிக்குஞ்சை மறந்துவிட்டு எலியின் பின்னே பாய்ந்து சென்றது.

‘அப்பாடா, எப்படியோ பூனையிடமிருந்து தப்பித்தேன்’ என்று நிம்மதி அடைந்தது கோழிக்குஞ்சு. நடுஇரவிலும் தூங்காமல் இருந்த கோழிக்குஞ்சுக்குப் பசித்தது.

‘சரி, இனி நமக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்று நினைத்த கோழிக்குஞ்சு, ஏதாவது உணவு கிடைக்குமா என்று தோட்டத்தில் நடந்தது. அப்போது தென்னை மரத்தின் மீதிருந்து ஏதோ ஒரு விலங்கு மண்ணில் குதித்தது.

அதன் உருவத்தைப் பார்த்ததும் அதுதான் மரநாயாக இருக்கும் என்று கோழிக்குஞ்சுக்குப் புரிந்தது. ‘மரநாய் கோழிகளைப் பிடித்துத் தின்னும்’ என்று பாட்டியம்மா சொல்வதை அது ஏற்கெனவே கேட்டிருந்தது. கோழிக்குஞ்சின் உடல் நடுங்கியது. எதிர்பார்த்தது போலவே மரநாய் கோழிக்குஞ்சின் மீது பாய்ந்தது.

அங்கும் இங்கும் ஓடிய கோழிக்குஞ்சு, இறுதியாக மரத்தின் அடியில் இருந்த சிறிய பொந்துக்குள் ஒளிந்துகொண்டது. துரத்தி வந்த மரநாய் பொந்திற்குள் தலையை நுழைக்கப் பார்த்தது. ஆனால், நுழைக்க முடியவில்லை. கோழிக்குஞ்சு வெகுநேரம் மரப்பொந்துக் குள்ளேயே இருந்தது. மெதுவாகப் பொழுது புலரத் தொடங்கியது. தோட்டத்திற்குள் சூரிய வெளிச்சம் வந்தது.

சற்று நேரத்தில் வெளியே ‘கொக் கொக் கொக்’ என்று சத்தம் கேட்டது. வெள்ளைக் கோழிக்குஞ்சு மரப்பொந்துக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தது. அங்கே அதன் தாய்க்கோழியும் குஞ்சுகளும் வந்து கொண்டிருந்தன. வெள்ளைக் கோழிக்குஞ்சு தாயை நோக்கி ஓடியது. “இரவு முழுவதும் நீ எங்கே இருந்தாய்? உனக்கு ஆபத்து ஏதும் இல்லையே?” என்று தாய்க்கோழி பதற்றத்தோடும் அன்போடும் கேட்டது.

“அம்மா, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நேற்று பாட்டிக்குத் தெரியாமல் ஒளிந்துகொண்டேன். ஆனால், இரவு முழுவதும் ஆபத்துகளில் மாட்டிக்கொண்டேன். நல்லவேளை தப்பித்துவிட்டேன். எது சுதந்திரம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இனி இதுபோல தவறு செய்ய மாட்டேன்” என்று இரவில் நடந்தவற்றை, தாயிடம் சொன்னது வெள்ளைக் கோழிக்குஞ்சு. குஞ்சைக் கட்டி அணைத்துக்கொண்டது தாய்க்கோழி.