惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
宝玉的分享
宝玉的分享
L
LangChain Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
M
MIT News - Artificial intelligence
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学
B
Blog RSS Feed
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - Franky
B
Blog
V
V2EX
J
Java Code Geeks
D
Docker
博客园 - 叶小钗
The Cloudflare Blog
量子位
博客园_首页
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கடகம், சிம்மம், கன்னி: மே மாத பலன்கள்
2026-05-01 · via hindutamil

Updated on

4 min read

கடகம்:

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சனி - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள் இருக்கும். சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டும். முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இருந்த வந்த மனக் கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும்.

தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்ப வேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும். மாணவர்கள் பாதியில் விட்ட படிப்பை தொடருவீர்கள். படிப்பில் சாதனைகள் புரிய முயற்சி மேற்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்களுக்கு தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

பூசம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும்.

ஆயில்யம்: இந்த மாதம் பிள்ளைகளின் உடல் நிலையில் கவனம் தேவை. திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மனோதைரியம் கூடும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மேற்கொள்ளுங்கள் சென்று வருவது நன்மை தரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: மே 11, 12 | அதிர்ஷ்ட தினங்கள்: மே 26, 27 |

சிம்மம்:

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: மற்றவர்கள் வார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன் கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலைமையும் மெல்ல மெல்ல மாறும். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகள். தாய், தாய் வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்துவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் பேசும் போதும் கவனமுடன் பேசவும். தேவையில்லாதவற்றை பேச வேண்டாம். தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேல் அதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். பாராட்டுகளும், பரிசுகளும் குவியும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்தி சாதுரியத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத் துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். தந்தையாருடன் தர்க்கம் கூடவே கூடாது. நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம்.

மகம்: இந்த மாதம் வீண் குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பூரம்: இந்த மாதம் கவன தடுமாற்றம் உண்டாகலாம். பண வரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்களுக்கு நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: மே 13, 14 | அதிர்ஷ்ட தினங்கள்: மே 01, 02, 28, 29, 30 |

கன்னி:

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: செய்யும் தொழிலில் அதிக விருப்பம் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும். சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தினாலும் அதை சமாளித்து விடுவீர்கள். தைரியமாக எதையும் எதிர் கொள்வீர்கள். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், வேலைப் பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மேலிடம் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் தாய், தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப் பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் தூர தேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சின்ன சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனைகளை பார்க்கலாம்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் தாய், தந்தையரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். மன தெளிவு உண்டாகும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

அஸ்தம்: இந்த மாதம் பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: முடிந்தவரை பெருமாள் ஆலயத்தை வலம் வந்தால் நல்லது | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: மே 15, 16 | அதிர்ஷ்ட தினங்கள்: மே 03, 04, 05, 31 |

<div class="paragraphs"><p><em>இந்த மாதம் கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த மாதம் கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.