惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
博客园 - 三生石上(FineUI控件)
The Cloudflare Blog
博客园 - Franky
IT之家
IT之家
V
Visual Studio Blog
博客园 - 【当耐特】
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
量子位
罗磊的独立博客
小众软件
小众软件
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் குமார் மகன் உட்பட 32...
மோகன் கணபதி · 2026-05-07 · via hindutamil

முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பு.

Updated on: 

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பிஹார் அமைச்சரவை விரிவாக்கம் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில், முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் உட்பட 32 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பிற கூட்டணி கட்சிகளான எல்ஜேபி(ராம்விலாஸ்), ஹெச்ஏஎம்(எஸ்), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளும் கணிசமான வெற்றியை பதிவு செய்தன. இதையடுத்து, நவம்பர் 20-ம் தேதி நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக அவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

நிதிஷ் குமாரின் ராஜினாமாவை அடுத்து, பாஜகவின் சாம்ராட் சவுத்ரி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவருடன் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி மற்றும் பிஜேந்திர பிரசாத் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

<div class="paragraphs"><p>விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நிதிஷ் குமார் உள்ளிட்டோர்</p></div>

விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நிதிஷ் குமார் உள்ளிட்டோர்

இந்நிலையில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி தனது அமைச்சரவையை இன்று விரிவுபடுத்தினார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இதற்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி. நட்டா, பாஜக தலைவர் நிதின் நவீன், முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் உட்பட ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பாஜக சார்பில் 15 பேர் உள்பட மொத்தம் 32 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.