惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
腾讯CDC
Y
Y Combinator Blog
L
LangChain Blog
B
Blog
U
Unit 42
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
Vercel News
Vercel News
雷峰网
雷峰网
T
The Blog of Author Tim Ferriss
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்’ -...
2026-04-22 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: ‘தேர்தல் நாளில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலின் விவரம்: ‘திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டுமென நம்மைவிட தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்திருப்பதாலும், மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாலும், அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டால் அது நேரடியாக பாஜகவுக்குச் செல்லும் என்பதாலும் திமுக கூட்டணிக்கே வாக்கு அளிப்போம் என்பதே தமிழக வாக்காளர்களின் உறுதியான முடிவாகும்.

தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளிலும் நமது கட்சியினர் கடுமையாக உழைக்கின்றனர். இந்த உழைப்பு வாக்குப்பதிவு நாளன்றும் (ஏப்.23) தொடர வேண்டும். இத்தனை நாட்களை விட அதிக விழிப்புடன் இன்று பணியாற்ற வேண்டும். அறிவாலயத்தில் உள்ள தேர்தல் பணி கண்காணிப்பகத்தின் மூலமாக உங்களுக்கு தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்படும். சட்டத்துறை சார்பில் கண்காணிப்பகத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பூத் ஏஜென்ட்கள் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். வாக்குப்பதிவன்று பிஎல்ஏ-2 மற்றும் பிஎல்சி, பிடிஏ ஆகியோர் தங்கள் வாக்கை முதலில் பதிவுசெய்ய வேண்டும். அதன்பின், தங்களது பாகத்தில் உள்ள ஆதரவு, தோழமைக் கட்சிகளின் வாக்குகளையும், விரைந்து பதிவு செய்யவும், ஒருவர்கூட விடுபடாதபடி நிர்வாகிகள் பணிபுரிய வேண்டும். பூத் ஏஜென்ட்கள் எக்காரணத்தை முன்னிட்டும் ஆரம்பத்தில் தேர்தல் அலுவலர் தரும் 17-சி படிவத்தில் கையொப்பமிடக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே, கையொப்பமிட்டு நகலைப் பெற வேண்டும்.

வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், வாக்குப்பதிவை சரிபார்க்கும் காகிதங்கள் நிறைந்த விவிபேட் ஆகியவை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு, சீல் சேதமடையாமல் அவை சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்ய வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்போது, மிகவும் கவனமாக அதில் கழகத்தின் பூத் ஏஜென்ட் பங்கேற்பதுடன், விவிபேட் சீட்டுகளை இவிஎம் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகு அவை அழிக்கப்பட வேண்டும். அப்போது இயந்திரத்தில் ஜீரோ என்று காட்டுவதை உறுதிசெய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு சீட்டுகளை தனியாக பிங்க் கவரில் வைத்து சீலிடப்பட்டு தேர்தல் அதிகாரியுடன் முகவரும் கையொப்பமிட வேண்டும்.

வாக்குப்பதிவுக்காக வழங்கப்பட்ட காகித முத்திரைகளின் வரிசை எண் மற்றும் எண்ணிக்கை இயந்திரங்களில் ஏதேனும் ஒன்று மாற்றம் செய்யப்பட்டால் அதன் விவரத்தையும் வாக்குப்பதிவு முடிந்தபிறகு குறிப்புப் பட்டியலில் பதிவிட்டு, தலைமை அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பமிட வேண்டும்.

வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் தருணத்தில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இறுதியாக படிவம் 17-சி நகல் பெற்று அனைத்து இயந்திரங்களும் சீலிடப்பட்டு, அவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் படிவம் 17-சி நகலை தவறாமல் பெற்று அதன் அசலை வேட்பாளர் வசம் சேர்க்க வேண்டும். இதில் எந்த ஒன்றையும் தவறவிடாமல் விழிப்புடன் இருந்து கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடியில் கட்சி நிர்வாகிகள் கண்ணியமான முறையிலும், கவனமாகவும் தங்கள் பணியை மேற்கொண்டு, நமக்கு ஆதரவான ஒரு வாக்குகூட விடுபடாதபடி செயல்பட வேண்டும்.

இத்தேர்தல் தமிழகத்தின் வளர்ச்சி, உரிமைகளைக் காப்பதற்கான களம். தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்களையும், அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் ஒருசேர வீழ்த்துகிற களம். விழிப்புடன் பணியாற்றி ஒன்றாக வெல்வோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.