惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
云风的 BLOG
云风的 BLOG
IT之家
IT之家
人人都是产品经理
人人都是产品经理
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
博客园 - 【当耐特】
T
Tailwind CSS Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
宝玉的分享
宝玉的分享
博客园 - Franky
F
Fortinet All Blogs
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
GbyAI
GbyAI
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
D
Docker
博客园 - 聂微东
C
Check Point Blog
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம்: அறக்கட்டளைக்கு ல...
ஆர்.ஷபிமுன்னா · 2026-06-19 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலுக்கான வரவு மற்றும் செலவு தணிக்கை கணக்கில் தவறுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் விவரம் கேட்டு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி சுதாகர் சிங், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ராமர் கோயில் காணிக்கை திருட்டு புகார்களில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் செயல்பாடுகள் மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இப்புகார்கள் மீதான விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரை பல்வேறு தரப்பினர் புகார் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, உ.பி அரசின் சார்பில், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நீதிமன்றங்களின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பிஹாரின் பன்ஸர் தொகுதி எம்பி சுதாகர் சிங், அறக்கட்டளையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீஸ், மூன்று நாட்களில் விளக்கம் கேட்டு அறக்கட்டளையின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் கோயிலின் நன்கொடைகள், தணிக்கை அறிக்கைகள், வங்கிக் கணக்குகள் மற்றும் நிலக் கொள்முதல் குறித்த முழுமையான விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

நோட்டீஸ் அனுப்பிய காரணம் குறித்து எதிர்கட்சி எம்பியான சுதாகர் சிங் குறிப்பிடுகையில், “இது, இந்திய அறக்கட்டளைகள் சட்டம் 1882, வருமான வரிச் சட்டம் 1961, உத்தரப் பிரதேச பொது அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 ஆகியவற்றின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது.

பொது மத அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் துல்லியமான கணக்குகளைப் பராமரிக்கவும், அது குறித்த அறிக்கைகளை வழங்கவும் வேண்டும் என்ற கடமைகளை இச்சட்டங்கள் விதிக்கின்றன. பொது மத நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் அறங்காவலர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல.

மாறாக அவை சமூகத்தின் நலனுக்கானவை என்றும், தணிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கோருவதற்குச் சமூகத்திற்கு உரிமை உண்டு” என தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கப்படவில்லை எனில் நடவடிக்கை என்ன என்ற குறிப்புகள் இல்லை. இந்த நோட்டீஸில், சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பையும் (ஆர். திருமூருகன் எதிர் ஆர்.தென்னரசு மற்றும் பிறர், நவம்பர் 21, 2025) மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

பாபர் மசூதி-ராமர் கோயில் விவாதம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த நவம்பர் 19, 2029-ல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு பிப்ரவரி 5, 2020 அன்று ராமர் கோயிலுக்கான அறக்கட்டளையை அமைத்தது.

15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அறக்கட்டளையில் துறவிகள், நிர்வாக நிபுணர்கள், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் அரசு நியமனதாரர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது, மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச் செயலாளராகவும், சுவாமி கோவிந்த்தேவ் கிரி பொருளாளராகவும் உள்ளனர்.

நிருபேந்திர மிஸ்ரா கோயில் கட்டுமானக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். சுவாமி விஸ்வபிரசன்ன தீர்த்தா மத விவகாரங்களுக்கான குழுவின் தலைவராகவும், டாக்டர் அனில் குமார் மிஸ்ரா நிர்வாகப் பணிகளைக் கவனிப்பவராகவும் உள்ளனர்.

சிறப்பு அழைப்பாளராக, கோபால் ராவ் கோயில் நிர்வாகம் மற்றும் தரிசனம் - ஆரத்தி அனுமதிச் சீட்டு முறையைக் கண்காணிக்கிறார். எஸைடியின் விசாரணையில், பல்வேறு குழுக்கள் மற்றும் அவற்றின் பொறுப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.