惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
有赞技术团队
有赞技术团队
Hugging Face - Blog
Hugging Face - Blog
罗磊的独立博客
S
SegmentFault 最新的问题
D
Docker
博客园 - 司徒正美
雷峰网
雷峰网
V
Visual Studio Blog
云风的 BLOG
云风的 BLOG
G
Google Developers Blog
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - Franky
月光博客
月光博客
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
The Blog of Author Tim Ferriss
Google DeepMind News
Google DeepMind News
MyScale Blog
MyScale Blog
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே மக்களவையில் 2/3 மெஜாரிட்டி பெற பா...
மோகன் கணபதி · 2026-06-24 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: அரசியலமைப்பை திருத்தும் நோக்கத்துடனேயே மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற பாஜக முயல்வதாகவும், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே அதன் இறுதி இலக்கு எனவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது குறித்து, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியது: “அரசியலமைப்பு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு முறையை முடிவுக்குக் கொண்டு வருவதே அவர்களின் (பாஜக) இறுதி நோக்கம். பிரதமர் நரேந்திர மோடி என்ன சொன்னாலும், இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளிப்படையாகக் கூறியிருப்பதையும், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

தொகுதி மறுவரையறை மூலம் பெண்கள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த பாஜக விரும்புகிறது. பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதில் மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் 2029 பொதுத் தேர்தலில் தற்போதைய மக்களவை இடங்களின் (543) அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

பெண்கள் இட ஒதுக்கீடு மற்றும் மக்களவை இடங்களின் விரிவாக்கம் தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவைதானே தவிர பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவை அல்ல.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன. காங்கிரஸ் கட்சியால்தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று பிரதமர் விமர்சித்தார். ஆனால், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

மக்களவையில் பாஜகவின் பலத்தை அதிகரிக்க எதிர்க்கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரப்படுத்தி உள்ளார். இதற்குக் காரணம், கடந்த ஏப்ரல் 17 அன்று மக்களவையில் அவர் சந்தித்த அவமானம்தான்.

தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்காக பிரதமர் மோடியிடம் அவர் உறுதி அளித்திருந்தார். ஆனால், அவரால் மக்களவையில் 298 வாக்குகளுக்கு மேல் திரட்ட முடியவில்லை. அன்று அவர் சந்தித்த அவமானத்துக்கு பழிவாங்க அவர் முடிவு செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அதனால்தான் அவர் இப்போது கட்சிகளை உடைக்கும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.

மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் நோக்குடன் அமித் ஷா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை உடைத்தார். இப்போது சிவசேனாவையும் உடைத்து வருகிறார். 2024 தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசப்பட்டதை நீங்கள் இப்போது காண்கிறீர்கள். இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் செய்யவே அவர்கள் 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும் என்று கோரினர். 400-க்கு மேல் என்ற முழக்கத்தின் பின்னணியில் இருந்த முழு நோக்கமும் அதுதான். அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் முயற்சியில்தான் அவர் இந்த கட்சிகள் அனைத்தையும் உடைத்து வருகிறார்.

ஆனால், மக்களவையில் அவர்களுக்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எதிர்காலத் தேர்தல்களிலும் அவர்களுக்கு இத்தகைய பெரும்பான்மை கிடைக்காது” என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.