


























சென்னை: தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏ.,க்கள் உள்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தொடர்ந்து அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தமுறை கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித் துறை வழங்கப்பட்ட நிலையில் அவரது துறை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, கே.ஏ.செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் வசம் இருந்த நிதித்துறை மற்றும் ஓய்வூதியத் துறை மரிய வில்சனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பிற அமைச்சர்களுக்கான துறை பின்வருமாறு:
>> ஸ்ரீநாத் - மீன்வளத் துறை
>> எஸ்.கமலி - கால்நடை வளர்ச்சித் துறை
>> சி.விஜயலக்ஷ்மி - பால்வளத்துறை
>> ஆர்.வி.ரஞ்ஜித்குமார் - வனத்துறை
>> வினோத் - வேளாண் துறை
>> ராஜீவ் - சுற்றுசூழல், மாசுகட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்
>> பி.ராஜ்குமார் - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை
>> வி.காந்திராஜ் - கூட்டுறவுத் துறை அமைச்சர்
>> மதன்ராஜ்.பி - குறு,சிறு,நடுத்தரத் தொழில்துறை
>> ஜெகதீஸ்வரி.கே - சமூக நலத்துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை
>> ராஜேஷ்குமார்.எஸ். - சுற்றுலா துறை
>> எம்.விஜய் பாலாஜி - நெசவு, கைத்தறித் துறை
>> லோகேஷ் தமிழ்ச்செல்வன் - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
>> விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்துத் துறை
>> ரமேஷ் - இந்து சமய அறநிலையத் துறை
>> பெ.விசுவநாதன் - உயர்க் கல்வித் துறை
>> குமார்.ஆர் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், இணைய சேவை துறை
>> தென்னரசு.கே - அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை
>> வி.சம்பத் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துற
>> முகமது ஃபர்வாஸ் - தொழிலாளர் நலன் துறை
>> டி.சம்பத் குமார் - மனிதவள மேம்பாட்டுத் துறை
>> விக்னேஷ்.கே - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。