惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
月光博客
月光博客
大猫的无限游戏
大猫的无限游戏
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
I
InfoQ
Last Week in AI
Last Week in AI
Vercel News
Vercel News
博客园 - Franky
Stack Overflow Blog
Stack Overflow Blog
P
Proofpoint News Feed
A
About on SuperTechFans
Engineering at Meta
Engineering at Meta
腾讯CDC
D
DataBreaches.Net
有赞技术团队
有赞技术团队
宝玉的分享
宝玉的分享
Jina AI
Jina AI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
G
Google Developers Blog
V
Visual Studio Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆளுநர், பாஜக, திமுக ஒன்றாக இருப்பதாக அமைச்சர் நிர்மல் கும...
வெற்றி மயிலோன் · 2026-06-18 · via hindutamil

Updated on: 

சென்னை: “பாஜகவுக்கும், திமுகவுக்கும் தான் மிக நெருக்கமான உறவு உள்ளது. அமலாக்கத் துறை சார்பில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார்கள், அந்த கோப்புகள் கடந்த வாரம் கையெழுத்தானது. ஆனால், ஆளுநர் அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அப்படியானால் யார் யாருடன் இணக்கமாக இருக்கிறார்கள்? ஆளுநரும், பாஜகவும், திமுகவும் ஒன்றாக இருக்கிறார்கள்” என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் உரைக்கு பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “பாஜகவுக்கும், திமுகவுக்கும் தான் மிக நெருக்கமான உறவு உள்ளது. அமலாக்கத் துறை சார்பில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டிருந்தார்கள், அந்த கோப்புகள் கடந்த வாரம் கையெழுத்தானது. ஆனால், ஆளுநர் அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அப்படியானால் யார் யாருக்கு இணக்கமாக இருக்கிறார்கள். ஆளுநரும், பாஜகவும், திமுகவும் ஒன்றாக இருக்கிறார்கள்.

பாஜகவின் மறைமுக முகமாக திமுக இருக்கிறது. திமுகவை பின்னாலிருந்து இயக்குவதே பாஜகதான். செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான கோப்புகள் மீது ஆளுநர் கையெழுத்து போடாதது ஏன்?. இதற்கு பாஜகவும், திமுகவும் பதில் சொல்ல வேண்டும்.

சட்டப்பேரவையில் முதல்வர் பேச வேண்டும் என திமுக உறுப்பினர்கள் பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். துணை முதல்வராக இருந்த உதயநிதிக்கு சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து கூட தெரியவில்லை. இன்று ஆளுநர் உரை, எனவே ஆளுநர் மட்டும் தான் பேசுவார். பதிலுரையின் போதுதான் முதல்வர் பேசுவார்.

தமிழகத்தில் ஏற்படும் மின் வெட்டுகள் உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் மின்வெட்டு இருந்தது, அதனை எவ்வளவு நேரத்தில் சரிசெய்தோம் என்ற விவரங்களை அடுத்தநாள் தினமும் வெளியிடுகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் சம்பவங்கள் நடக்கும்போது, அனைத்தும் மறைக்கப்பட்டதையே பார்த்தோம். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஒரு வாரம் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகப்பேர் சிறுமி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

கடந்த ஆட்சியில் குற்றச் சம்பவங்களை மறைக்கும் வேலையை செய்தார்கள். எங்கும் ஒழுங்காக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இப்போது யார் குற்றம் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கண்டிப்பாக சொல்லியுள்ளார். தவறுகள் நடந்த எல்லா இடங்களிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்களை தடுக்க அதிகாரிகளை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அரசைப் போல இந்த அரசு எதையும் மூடி மறைக்கவில்லை.

பெண்கள் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சிங்கப்பெண் திட்டத்தை விரிவாக்குவதே முதல்வரின் நோக்கம். சமூக ரீதியாக நடக்கும் குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கும். தனிப்பட்ட முறையில் நடக்கும் குற்றங்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கப்பெண் படைக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது, கூடுதல் அதிகாரமும் வழங்கப்படும்.

தமிழக அரசின் நிதி நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. மின் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டவை எவ்வளவு கடனில் உள்ளது என பார்த்தோம். இதனை மீட்டெடுக்கும் வேலையை செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு லாபத்தில் இயங்கிய மின் துறை, போக்குவரத்துத் துறை இப்போது நலிவடைந்துள்ளது. ஆனால் கூடுதல் வருவாயை பெருக்க கடந்த அரசு எதையும் செய்யவில்லை. ரூ.30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் மட்டுமே திருடிவிட்டது என முன்னாள் நிதியமைச்சர் ஒருவரின் ஆடியோ வெளியானது.

லஞ்ச, லாவண்யத்தை குறைத்தாலே நம்மால் போதுமான அளவு நிதியை சேமிக்க முடியும். நிதி ஆதாரத்தை பெருக்க முதல்வர் பாடுபட்டு வருகிறார். இப்போது இருக்கும் பிரச்சினை என்னவென்று மக்களுக்கு சொல்லிவிட்டோம். மின்சாரத் துறை சார்பாக அடுத்த வாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்.

கூடுதல் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒரு அரசு பல்கலைக்கழகமாவது லாபத்தில் இயங்குகிறதா?. திமுக முன்னாள் அமைச்சர்கள் பல்கலைக்கழகங்கள் வைத்துள்ளனர். அவை அனைத்தும் 5 நட்சத்திர ஹோட்டல் அளவு வளர்ந்துள்ளன. ஆனால், அரசின் பல்கலைக்கழகங்கள் என்ன நிலையில் உள்ளது?. இதுதான் அவர்களின் சாதனை.

அரசுத்துறை நிறுவனங்கள் வளரவேண்டும். வருவாயைப் பெருக்க புதிய நிறுவனங்கள் தொடங்க வேண்டும். ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து ஆய்வு செய்து முதல்வர் முடிவை அறிவிப்பார்.

கடந்த ஆட்சியில் நடந்த மிகப்பெரிய தவறு எஃப்எல்2 பார் எனப்படும் மனமகிழ் மன்றங்கள். டாஸ்மாக் எண்ணிக்கையில் 20 முதல் 30 சதவீதம் வரை எஃப்எல்2 பார்களை திறந்தார்கள். விதிமுறைகளுக்கு மாறாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 முதல் 4 மடங்கு எஃப்எல்2 பார்கள் திறக்கப்பட்டன. இதில் விதிமீறல்கள் நடந்ததா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.