惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
H
Help Net Security
B
Blog RSS Feed
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
N
Netflix TechBlog - Medium
S
SegmentFault 最新的问题
The Cloudflare Blog
I
InfoQ
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
MyScale Blog
MyScale Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
L
LangChain Blog
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக ஆட்சிக்கு ஆதரவு, திமுக உறவு இனி..? - இந்திய கம்யூ., ...
2026-05-08 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: “தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம். இது கூட்டணி அல்ல. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் திமுகவுடன் இணைந்து பயணிப்போம்” என இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, “தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு அமைய வேண்டும் என்பதே அவசியம்.

அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்கவே திமுகவுடன் கூட்டணி வைத்தோம். தற்போது அது நடந்துள்ளது. பாஜக ஓர் இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. ஆளுநர் ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு கொடுக்கிறோம். திருமாவளவன் மற்றொரு கூட்டத்தில் இருக்கிறார். நாங்கள் எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

10-ஆம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிடில் சிக்கல் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்; வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம்.

கொல்லைப்புறமாக பாஜக ஆட்சி நடத்துவதை அனுமதிக்க கூடாது என்ற அடிப்படையில்தான் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னெடுப்பது, மாநில உரிமைகளை பாதுகாப்பது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என திமுக நிறைவேற்றியுள்ள திட்டங்களை, நாங்களும் திமுகவும் இணைந்துதான் நிறைவேற்றியுள்ளோம்.

அந்த வகையில் மதவெறி சக்திகளுக்கு எதிராக, ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்கிறபோது, திமுகவுடன் இணைந்து மாநில உரிமைகளை பாதுகாப்பது, மதவெறிக்கு எதிராக போராடும் போராட்டம் தொடரும். அதோடு திமுகவுடனான உறவு தொடரும்.

உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம். தவெக ஆட்சி அமைக்க கூடாது என ஸ்டாலின் கூறவில்லை. தவெக ஆட்சி அமைக்கட்டும்; நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றுதான் சொன்னார். எங்களின் முடிவுக்கு திமுகவின் ஒப்புதல் தேவை இல்லை; நாங்கள் தன்னிச்சையான கட்சிகள். மதச்சார்பற்ற ஓர் அரசை அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் எங்களிடம் ஆதரவு கோரியுள்ளார்” என்றார் பெ.சண்முகம்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறும்போது, “மக்கள் முன்மொழிந்ததை நாங்கள் வழிமொழிந்துள்ளோம். இனி வருங்காலங்களில் விஜய் மாநில உரிமை, மதச்சார்பின்மை ஆகியவை குறித்து குரலெழுப்ப வேண்டும். மக்கள் விஜய்க்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அது இடதுசாரிகளால் தடைபட்டுவிடக் கூடாது. அமித் ஷா ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு தருகிறோம். மாநில உரிமை பறிபோனால் உரத்த குரல் எழுப்புவோம்; போராடுவோம்” என்றார்.