惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog RSS Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
V
V2EX
aimingoo的专栏
aimingoo的专栏
爱范儿
爱范儿
博客园 - 聂微东
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Stack Overflow Blog
Stack Overflow Blog
罗磊的独立博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
MongoDB | Blog
MongoDB | Blog
Jina AI
Jina AI
T
The Blog of Author Tim Ferriss
月光博客
月光博客
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசியல் பயணத்தில் அடுத்து என்ன? - சி.வி.சண்முகம், சி.விஜய...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர், இலுப்பூரில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளிடம் நேற்று கருத்து கேட்டார்.

Updated on: 

விழுப்புரம் / புதுக்கோட்டை: தமிழக அரசியல் பயணத்தில் அடுத்த நிலைப்பாடு குறித்து தங்களின் ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின் றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், அதிமுகவில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையல்ல. அதிமுகவின் தொடர் தோல்விக்கு பொதுச் செயலாளர் பழனிசாமியின் அணுகுமுறைதான் காரணம் எனக் கூறி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.

மேலும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி, முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 25 பேரும் வாக்களித்தனர். இதனால் கட்சிக்குள் மோதல் முற்றியது. தவெக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சரவை யில் இடம் கிடைக்கவில்லை.

இதற்கிடையே 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி உட்பட 18 எம்எல்ஏக்கள் சந்தித்து, கட்சிக்குள் மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டனர். அதே நேரம் சி.வி.சண்முகம் இதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் அவர் அதிமுகவிலேயே தொடருவார் என்றும், மற்றொரு புறம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையப் போகிறார் என்றும் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இத்தகைய சூழலில், சென்னையில் கடந்த 3 வாரங்களாக முகாமிட்டிருந்த சி.வி.சண்முகம், திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அவரைச் சந்தித்து வருகின்றனர். அவர்களிடம், ‘நீங்கள் கலங்க வேண்டாம், எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சி.வி சண்முகத்திடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எனக்கு வாக்களித்த மயிலம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பது தான் முதல் கடமை” என்றார்.

விஜயபாஸ்கர் ஆலோசனை: அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கரும், தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது, சி.விஜயபாஸ்கரும் அவர்களுடன் செல்லவில்லை.

இந்நிலையில், விராலிமலை தொகுதி இலுப்பூரில் உள்ள தனது இல்லத்துக்கு நேற்று திரும்பினார். அங்கு தனது ஆதரவு நிர்வாகிகள், தொண்டர்களை வரவழைத்து அரசியலில் அடுத்து என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து அவர்களிடம் கருத்து கேட்டார். இதை தொடர்ந்து, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவில்தான் தொடர்கிறேன்.

62 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். தொகுதி மக்கள் என்னிடம் ஆதங்கத்துடன் பல்வேறு கருத்துகளைதெரிவித்தனர். அவற்றையெல்லாம் உள்வாங்கியுள்ளேன். அவர்களை பொறுமையுடன் இருக்குமாறு கூறியுள்ளேன். தவெகவுக்கு மாறப் போகிறேனா என்கிற யூகத்துக்கு பதில் அளிக்க முடியாது. மக்களிடம் கருத்து கேட்பது தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.