惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
P
Proofpoint News Feed
L
LangChain Blog
C
Check Point Blog
F
Fortinet All Blogs
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Blog — PlanetScale
Blog — PlanetScale
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Jina AI
Jina AI
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
N
Netflix TechBlog - Medium
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
U
Unit 42
The Cloudflare Blog
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; எடப்பாடி பழனிசாமி நல்லா...
2026-05-08 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தருவார் என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை, இது தொடர்பாக கட்சி பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “ஏராளமான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இப்போது என்னால் எதையும் உறுதியாக சொல்ல இயலாது. அனைத்தும் உரிய நேரத்தில் நடக்கும். நல்லதே நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனது கட்சி, எனது தலைவர் மீண்டும் (ஆட்சிக்கு) வருவார்”

திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க இருக்கிறதா என்ற கேள்விக்கு, ”இல்லை, இல்லை. இப்போதைக்கு நான் என்ன சொல்ல முடியும் என்றால், மக்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவு அதிமுகவுக்கு இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்திக்கும்போதெல்லாம், அவர்கள் தங்கள் உணர்வுப்பூர்வ ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். எனவே, கடவுளின் அருளால் அது உரிய காலத்தில் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதிமுக-திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுவது உண்மையா என்ற கேள்விக்கு, அது குறித்து தலைவர்கள் சொல்வார்கள். தமிழகத்தில் நல்லாட்சி வரும். எங்கள் கழக பொதுச்செயலாளர் நல்ல ஒரு ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தம்பிதுரை சென்றுவிட்டார்.

அதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை... இதனிடையே, திமுக - அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “அதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், அது சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், தமிழக அரசியலில் திமுகவும் அதிமுகவும் மிகப் பெரிய எதிரிகள். திமுக - அதிமுகவுக்கு இடையில் சிலர் வருவார்கள், போவார்கள். எனவே, திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை” என தெரிவித்தார்.

நேற்றைய திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் எந்த ஒரு முடிவையும் எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “ஏனெனில் அவர்களால் அமைச்சரவையை அமைக்க முடியாது. ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் எவ்வாறு நாங்கள் செயல்பட வேண்டும், சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர் ஆலோசனை வழங்குவார். அவ்வளவுதான்” என தெரிவித்துள்ளார்.