惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
GbyAI
GbyAI
M
MIT News - Artificial intelligence
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
腾讯CDC
F
Fortinet All Blogs
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Last Week in AI
Last Week in AI
Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
D
DataBreaches.Net
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
H
Help Net Security
V
Visual Studio Blog
小众软件
小众软件
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதிமுக முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 150 பேர் திமுகவ...
வெற்றி மயிலோன் · 2026-06-28 · via hindutamil

Updated on: 

சென்னை: மதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதுகுறித்து திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (28.06.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில், ம.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளான சிவகங்கை மாவட்டச் செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான புலவர் செ.செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், கொள்கை பரப்பு செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான திருப்பரங்குன்றம் பொடா அழகுசுந்தரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சேகர், மாநில தேர்தல் பணி துணைச் செயலாளர் தஞ்சாவூர் விடுதலைவேந்தன், தலைமைச் செயற்குகுழு முன்னாள் உறுப்பினர் டி.ஆர்.ஆர்.மதியழகன்;

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆர்.எஸ்.கோவிந்தராஜன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ம.ராஜகோபால், சாமளாபுரம் பேரூர்ச் செயலாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், பல்லடம் நகர்மன்ற துணைத் தலைவருமான நர்மதா இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சாமிநாதன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கார்த்திக், பல்லடம் நகர துணைச் செயலாளர் ஜெகநாதன், பல்லடம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வெங்கடேஷ்;

மற்றும் முன்னாள் நிர்வாகிகளான மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் புதுக்கோட்டை சதாசிவம், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் சிவகாசி மு.செல்வராஜ், திருப்பூர் ஆர்.எஸ்.கோவிந்தராஜன், நகரச் செயலாளர் எஸ்.கே.ரவிச்சந்திரன், ஆர்.எம்.எஸ்.சேகர், விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் பாரதமணி, மதுரை மாவட்ட பொறியாளர் அணி சி.எல்.ராஜா.

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட அவைத்தலைவர் எம்.ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்களான என்.ராமச்சந்திரன், ஏ.சி.முத்து, பி.சதாசிவம், இளைஞர் அணி வி.அருள்செல்வம், பி.கந்தசாமி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட பொறியாளர் அணி கே.ரகுராமகிருஷ்ணன், பொன்னேரி பேரூர்ச் செயலாளர் மதிவாணன், மோகன், ஞானவேல்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஆகாஷ்ராஜ், அத்துடன் பொடா அழகுசுந்தரம் ஏற்பாட்டில் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மாணவர்கள் ஏ.அன்பரசன் தலைமையில் 40 பேர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், பல்லடம் முத்துரத்தினம், தாராபுரம் கவின் நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.