惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
博客园 - 聂微东
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
云风的 BLOG
云风的 BLOG
D
DataBreaches.Net
B
Blog
L
LangChain Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
博客园 - 三生石上(FineUI控件)
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
H
Help Net Security
The Cloudflare Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அகமதாபாத்தில் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி: சாம்பியன் பட்ட...
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

Updated on: 

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்​கெட் திரு​விழா​வின் இறு​திப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி, 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ஆர்​சிபி அணி அதிரடி பாணியை பின்​பற்​றக்​கூடியது. அதேவேளை​யில் ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி நிதான​மாக செயல்​படும் திறன் கொண்​டது. இரு அணி​களும் 2-வது முறை​யாக கோப்​பையை வெல்​லும் கனவுடன் களமிறங்​கு​கின்​றன.

லீக் சுற்​றில் ஆர்​சிபி அணி முதலிடம் பிடித்து அசத்​தி​யிருந்​தது. தொடர்ந்து தகுதி சுற்று 1-ல் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 92 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இறு​திப் போட்​டிக்கு நேரடி​யாக தகுதி பெற்​றிருந்​தது. மறு​புறம் முதல் வாய்ப்பை தவற​விட்ட குஜ​ராத் அணி தகுதி சுற்று 2-ல் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறுதி போட்​டி​யில் நுழைந்​துள்​ளது.

புள்​ளி​விவரப்​படி நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி, 2022-ம் ஆண்டு கோப்​பையை வென்ற குஜ​ராத் அணிக்கு எதி​ராக வெற்றி பெற அதிக வாய்ப்​புள்ள அணி​யாகக் கருதப்​படு​கிறது. இதற்கு ஆர்​சிபி அணி இந்​தத் தொடரில் இது​வரை விளை​யாடி வரும் அதிரடி ஆட்​ட​முறையே முக்​கியக் காரண​மாகும்.

இந்த அதிரடி ஆட்​ட​முறை சில நேரங்​களில் அவர்​களுக்​குப் பின்​னடைவை ஏற்​படுத்​திய போதி​லும், விராட் கோலி, தேவ்​தத் படிக்​கல், டிம் டேவிட், கேப்​டன் ரஜத் படி​தார், பில் சால்ட், வெங்​கடேஷ் ஐயர் ஆகியோர் தங்​களது அதிவேக பேட்​டிங் மூலம் எதிரணி​களைத் தொடர்ந்து துவம்​சம் செய்து வந்​துள்​ளனர்.

ஆடு​களங்​களின் தன்​மை, எதிரணி​களின் பந்​து​வீச்சு உத்​தி​கள் எது​வுமே, இவர்​களின் அதிரடித் தாக்​குதல் ஆட்​ட​முறையை எந்த வகை​யிலும் பாதிக்​க​வில்​லை. மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் இவர்​களைப் போல வேறு எந்த ஒரு அணி​யும் அதிக அளவில் 200 ரன்​களுக்கு மேல் குவித்​தது இல்​லை.

கடந்த இரண்டு சீசன்​களாக ஆர்​சிபி ஒரு நிலை​யான அணி​யாக உரு​வெடுத்​திருப்​ப​தற்​கு, கேப்​ட​னாக ரஜத் படி​தா​ரின் நிதான​மான அணுகு​முறை​யும் ஒரு முக்​கியக் காரண​மாகும்.

முன்​னாள் கேப்​டன்​களான விராட் கோலி அல்​லது டு பிளெசிஸ் போன்று ரஜத் பட்​டி​தார் களத்​தில் உணர்ச்​சிகளை அதி​க​மாக வெளிப்​படுத்​தக்​கூடிய​வர் கிடை​யாது. அதேவேளை​யில் 32 வயதான அவரிடம் தனித்​து​வ​மான நிதான​மும் நம்​பிக்​கை​யும் உள்​ளது. இது அணி​யில் உள்ள சர்​வ​தேச சூப்​பர் ஸ்டார் வீரர்​கள் மற்​றும் இளம் வீரர்​கள் என இருதரப்​பினரை​யும் பதற்​றமின்​றி, நிம்​ம​தி​யாக வைத்​திருக்க உதவு​கிறது.

ஆர்​சிபி அணி பவர்​பிளே ஓவர்​கள் முதலே எதிரணி பேட்​டர்​களை ரன் குவிக்க விடா​மல் கட்​டுப்​படுத்​தும் பந்​து​வீச்​சுப் பட்​டாளத்​தை​யும் கொண்​டுள்​ளது. புவனேஷ்வர் குமார் தலை​மையி​லான இந்​தப் பந்​து​வீச்​சுப் படை, மிகச் சிறந்த ஃபார்​மில் இருக்​கும் குஜ​ராத் அணி​யின் டாப்​-ஆர்​டர் பேட்​டர்​களுக்கு எதி​ராக தங்​களது உயர்​மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்த வேண்​டி​யிருக்​கும்.

பேட்​டர்​கள் அனை​வரும் பவர்​பிளே ஓவர்​களைச் மிகச் சிறப்​பாகப் பயன்​படுத்தி ஓவருக்கு 11 அல்​லது 12 ரன்​களுக்கு மேல் குவித்து வந்த இந்​தத் தொடரில், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் தொடக்க வீரர்​களான கேப்​டன் ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் ஜோடியோ தங்​களது ரன் வேட்​டையை ஓவருக்கு 9 ரன்​களுக்கு சற்று மேலாக மட்​டுமே சேர்த்து வந்​துள்​ளனர்.

பவர்​பிளே ஓவர்​களில் நிதான​மான மற்​றும் படிப்​படி​யான ரன் குவிப்பு என்ற பழமை​யான ஆட்ட அணுகு​முறையை குஜ​ராத் அணி கையாண்டு வரு​கிறது. இதற்கு காரணம் என்​னவென்​றால், குஜ​ராத் அணி​யின் மிடில்​-ஆர்​டர் பேட்​டிங் சற்று பலவீன​மாக இருப்​பதே ஆகும். இதனால், முதல் மூன்று வரிசை வீரர்​களான ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன், ஜாஸ் பட்​லர் ஆகியோரே அணி​யின் ஒட்​டுமொத்​தப் பொறுப்​பை​யும் ஏற்று ரன் குவிக்க வேண்​டிய சூழ்​நிலை உள்​ளது.

இந்த வகை​யில், நடப்பு தொடரில் ஷுப்​மன் கில் 163 ஸ்டிரைக் ரேட்​டுடன் 722 ரன்​கள் குவித்​துள்​ளார். இதில் ஒரு சதம், 6 அரை சதங்​கள் அடங்​கும். சாய் சுதர்​சன் 159 ஸ்டிரைக் ரேட்​டுடன் 710 ரன்​களும் (ஒரு சதம், 8 அரை சதம்), ஜாஸ் பட்​லர் 157 ஸ்டிரைக் ரேட்​டுடன் 507 ரன்​களும் (4 அரை சதங்​கள்) குவித்​துள்​ளனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்​திறன் வெளிப்​படக்​கூடும்.

நடப்பு சீசனில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி தங்​களது சொந்த மைதானத்​தில் 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 5 வெற்​றிகளை பதிவு செய்​துள்​ளது. இது அந்த அணிக்கு கூடு​தல் நம்​பிக்​கையை கொடுக்​கக்​கூடும். எனினும் அது அவ்​வளவு எளி​தாக​வும் இருக்​காது. ஏனெனில் ஆர்​சிபி அணி​யில் நடப்பு சீசனில் 26 விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்ள புவனேஷ்வர் குமார் தனது அனுபவத்​தால் பவர்​பிளே​வில் விக்​கெட்​களை வீழ்த்தி அசத்தி வரு​கிறார்.

அவருக்கு ஜோஷ் ஹேசில்​வுட் (13 விக்​கெட்​டு​கள்), ரசிக் சலாம் (16 விக்​கெட்​டு​கள்), கிருணல் பாண்​டியா (13 விக்​கெட்​டு​கள்) ஆகியோர் உறு​துணை​யாக இருந்து வரு​கின்​றனர். இவர்​கள் ஒருங்​கிணைந்து பன்​முகத்​தன்மை கொண்ட பந்​து​வீச்​சுப் படையை உரு​வாக்​கி​யுள்​ளனர். இதில் கிருணல் பாண்​டியா பேட்​டிங்​கிலும் பயனுள்ள வகை​யில் பங்​களிப்பை வழங்கி வரு​கிறார்.

ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசை​யின் ஆழம் மற்​றும் மைதானத்​தின் அனைத்து பகு​தி​களுக்​கும் பந்​துகளைச் சிதறடிக்​கும் அதிரடி ஆட்​டக்​காரர்​கள் தொடக்​கம் முதல் இறுதி வரை நிறைந்​திருப்​பது, அவர்​களுக்கு சாதக​மாக உள்​ளது. ஆனால், அகம​தா​பாத் ஆடு​களம் பந்​து​வீச்​சுக்​குச் சாதக​மாக அமைந்​தால் ஆர்​சிபி அணி​யின் அதிரடி பேட்​டர்​களைக் கட்​டுப்​படுத்​து​வதற்​கான திறமை​யான பந்​து​வீச்​சாளர்​கள் குஜ​ராத் அணி​யில் உள்​ளனர்.

நடப்பு சீசனில் அதிக விக்​கெட்​கள் வீழ்த்தி உள்​ளவர்​களின் பட்​டியலில் 28 விக்​கெட்​டு​களு​டன் முதலிடத்​தில் இருக்​கும் காகிசோ ரபா​டாவுக்​கு, முகமது சிராஜ், ரஷித் கான், ஜேசன் ஹோல்​டர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பக்​கபல​மாக இருந்து வரு​கின்​றனர். ரபா​டா​வும் சிராஜும் இந்த சீசனில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய பந்​து​வீச்சு திறனை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர்.

இவர்​கள் முறையே 165 மற்​றும் 162 டாட் பால்​களை வீசி அதிக டாட் பால்​கள் வீசிய பந்​து​வீச்​சாளர்​களின் பட்​டியலில் டாப்​பில் உள்​ளனர். பேட்​டிங்​கிற்கு சாதக​மான தட்​டை​யான ஆடு​களங்​களில் கூட பேட்​டர்​களை இவர்​கள் கடும் சோதனைக்கு உட்​படுத்தி உள்​ளனர்.

இந்த ஜோடி ஹார்ட் லென்த் (பேட்​டர்​களுக்கு சற்று எட்​டாத​வாறு ஆடு​களத்​தில் பந்தை வேக​மாக குத்தி எறிவது) உத்​தியை மிகத் துல்​லிய​மாகப் பயன்​படுத்​திப் பலன் கண்​டுள்​ளது. இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு இவர்​கள் அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்​பிய​னாக இருந்து பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொண்ட பெரு​மையை சென்னை சூப்​பர் கிங்​ஸ், மும்பை இந்​தி​யன்​ஸ் ஆகிய இரு அணி​கள் மட்​டுமே தன்​வசம் வைத்​துள்​ளன. இன்​றைய இறு​திப்​ போட்​டி​யில்​ ஆர்​சிபி அணி வெற்​றி பெறும்​ பட்​சத்​தில்​ இந்​த வகை சாதனை​யில்​ அந்த அணி​யும்​ இணையும்​.

ரூ.20 கோடி பரிசுத் தொகை

ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பெறும் அணி ரூ.12.50 கோடியை பரிசாக பெறும்.

‘தொடரை வெல்ல சிறந்த பந்துவீச்சு தேவை’

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது: தொடரை வெல்ல விரும்பினால், உங்களுக்கு மிகச் சிறந்த பந்துவீச்சுப் படை தேவை. விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகவும் முக்கியம். ஏனெனில், 200 முதல் 220 ரன்கள் வரை எடுப்பது மிகவும் எளிது. ஆனால், அந்த ரன்களை எதிரணி அடிக்காமல் தடுத்து நிறுத்துவது மிகக் கடினம். எனவே, சிறந்த பந்துவீச்சு குழு இருக்க வேண்டியது அவசியம்.

புவனேஷ்வர் குமார் பிரமாதமாகப் பந்துவீசி வருகிறார். அவர், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர். மதிப்புமிக்க இந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவரிடம் ஆட்டத்தைப் பற்றிய மிகத் தெளிவான பார்வை இருக்கிறது. அவருடைய திட்டமிடல்களும் உத்திகளும் தெளிவாக உள்ளன.

புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் மற்ற பந்துவீச்சாளர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. அந்த வகையில், ரசிக் சலாம் திருப்புமுனைகளை ஏற்படுத்தி அணிக்கு உதவிய விதம் முக்கியமானது. ஏனெனில், வெறும் ஒன்றுஅல்லது இரண்டு பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தொடரை வெல்ல முடியாது.

பில் சால்ட் விளையாடுவது குறித்து நாங்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. தகுதி சுற்று 1 ஆட்டத்துக்கு பிறகு, எங்களுக்கு ஓய்வெடுப்பதற்கும் உடல்நலனை மீட்டெடுப்பதற்கும் போதுமான நேரம் கிடைத்தது. அதே நேரத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி சுற்று 2 போட்டியை முடித்துவிட்டு ஓய்வின்றி இறுதிப் போட்டியில் கலந்துகொள்கிறது. இந்த வகையில், எங்களுக்கு ஓரளவுக்குச் சாதகமான சூழல் இருக்கும், ஆனால் அது மிகப்பெரிய அளவில் இருக்காது. ஏனென்றால், இரண்டு அணிகளுமே மிகவும் பலமானவை, அதுமட்டுமின்றி மிகச் சிறந்த கிரிக்கெட்டையும் விளையாடி உள்ளோம். இவ்வாறு ரஜத் பட்டிதார் கூறினார்.

‘மன உறுதியே வெற்றி கொடுக்கும்’

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது: எதிர்பார்ப்புகளின் சுமையை நான் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. நாங்கள் அகமதாபாத்தில் விளையாடும்போது எங்களுக்கு சில நன்மைகளும், நன்கு பழகிய சூழலும் கிடைக்கின்றன. ஏனெனில், இங்கிருக்கும் ஆடுகளத்தைப் பற்றியும், மைதானத்தைப் பற்றியும் நாங்கள் நன்றாக அறிவோம். எனவே, போட்டியில் வெற்றி பெற இங்கு எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதும் எங்களுக்கு தெளிவாகத் தெரியும்.

அந்த வகையில் சொந்த மைதானத்தில் விளையாடுவதை சாதகமான அம்சமாகவே பார்க்கிறேன். தகுதி சுற்று 1 போட்டி நடைபெற்ற தரம்சாலா என்பது சென்றடைவதற்கும், பயணம் செய்வதற்கும் சற்று கடினமான இடம். அதனால் உடல் ரீதியாக ஆர்சிபி அணி சாதகமான நிலையை பெற்றிருக்கலாம். ஆனால் இறுதிப் போட்டி என்பது முழுக்க முழுக்க மன உறுதி சார்ந்தது. சவாலை எதிர்கொள்ள மனரீதியாக யார் மிக உறுதியாக இருக்கிறார்களோ, அந்த அணியே வெற்றி பெறும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், நாங்கள் ஒவ்வொரு ஓவரிலும் பவுன்சர்களை சிறப்பாகப் பயன்படுத்தினோம். நாங்கள் வீசிய பவுன்சர்களின் துல்லியத்தை இதற்கு முன்பு நான் டி20 போட்டியில் பார்த்தது இல்லை. நாங்கள் பயன்படுத்திய பவுன்சர்களின் எண்ணிக்கையும், அதன் மூலம் எங்களுக்குக் கிடைத்த வெற்றியும் உண்மையிலேயே அபாரமானது. இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.