惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
J
Java Code Geeks
雷峰网
雷峰网
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
腾讯CDC
博客园 - 司徒正美
B
Blog RSS Feed
博客园 - 三生石上(FineUI控件)
I
InfoQ
N
Netflix TechBlog - Medium
L
LangChain Blog
博客园_首页
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
T
Tailwind CSS Blog
MyScale Blog
MyScale Blog
美团技术团队
The Cloudflare Blog
爱范儿
爱范儿
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
H
Help Net Security
Martin Fowler
Martin Fowler
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் மயோனைஸ் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு விதிக்கப்பட்ட தடையை, மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மயோனைஸ் தயாரித்தல், பதப்படுத்துதல், பேக்கேஜிங் செய்தல், விநியோகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த தடை பொருந்தும்.

தற்போது வழங்கப்பட்டுள்ள நீட்டிப்பின் மூலம், 2027 ஏப்ரல் மாதம் வரை தடை அமலில் இருக்கும். விதிகளை மீறி பச்சை முட்டை மயோனைஸை தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டையின் வெள்ளை கருவுடன், தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் மயோனைஸ், ஒரு அரை திட உணவுப் பொருளாகும். இது பொதுவாக ஷவர்மா, கிரில் மற்றும் தந்தூரி போன்ற சிக்கன் உணவுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

இதில், பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் எளிதில் பாக்டீரியாத் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய அதிக ஆபத்துள்ளதால், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அதற்கு தமிழக அரசு ஓராண்டு தடை விதித்தது.

முறையற்ற தயாரிப்பு மற்றும் சேமிப்பு முறைகளால் பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸில், சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் பச்சை முட்டை அடிப்படையிலான மயோனைஸ் பயன்படுத்த இந்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையை மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.