惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
S
SegmentFault 最新的问题
博客园_首页
雷峰网
雷峰网
量子位
有赞技术团队
有赞技术团队
博客园 - 叶小钗
博客园 - 聂微东
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 司徒正美
小众软件
小众软件
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னையில் தினமும் 400 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

Updated on: 

சென்னை: ​மாநக​ராட்​சி​யில் தின​மும் 400 நாய்​களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்​கொள்ள வேண்​டும் என்று அதி​காரி​களுக்​கு, நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி அறிவுறுத்தி​யுள்​ளார்.

சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில், 1.80 லட்​சம் தெரு நாய்​கள் உள்​ள​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. மாநக​ராட்சி சார்​பில், வெறி​நாய்க் கடி தடுப்​பூசி செலுத்​தும் தீவிர சிறப்பு முகாம் வாயி​லாக, இது​வரை 1.68 லட்​சம் தெரு​நாய்​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி செலுத்தப்பட்டுள்ளது. 71,388 செல்​லப் பிராணி​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி செலுத்​தி, மைக்​ரோசிப் பொருத்​தப்​பட்டு உரிமம் வழங்கப்​பட்​டுள்​ளது.

தெரு நாய்​களை கட்​டுப்​படுத்​து​வதற்​காக புளியந்​தோப்​பு, லாய்ட்ஸ் காலனி, கண்​ணம்மா பேட்டை உள்​ளிட்ட 10 இடங்​களில் நாய்​கள் இனக் கட்​டுப்​பாடு மையங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

மேலும், 4 இடங்​களில் நாய்​கள் இனக்​கட்​டுப்​பாடு மைய பணி நடை​பெற்று வரு​கின்​றன. பெருங்​குடி​யில் உள்ள நாய்​கள் இனக் கட்​டுப்​பாடு மையம் தற்​காலிக​மாக நோய்​களால் பாதிக்​கப்​பட்ட நாய்​களுக்​கான காப்​பக​மாக செயல்​பட்டு வரு​கிறது. மணலி மற்றும் பெருங்​குடி​யில் நோயால் பாதிக்​கப்​பட்ட தலா 250 நாய்களுக்​கான காப்​பகம் அமைக்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

திரு.​வி.க.நகர், நுங்​கம்​பாக்​கம் உள்​ளிட்ட 6 இடங்​களில் செல்​லப் பிராணி​களுக்​கான சிகிச்சை மைய​மும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதனிடையே, புளியந்​தோப்பு பகு​தி​யில் உள்ள நாய்​கள் இனக்கட்டுப்​பாடு மையத்தை நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி நேற்று நேரில் ஆய்வு செய்​தார். அப்​போது, அங்கு நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை நடவடிக்​கைகளை​யும், செல்​லப் பிராணி​களுக்கு வழங்கப்​படும் சிகிச்​சைகளை​யும் பார்​வை​யிட்​டார்.

பின்​னர், ககன்​தீப் சிங் பேடி, அதி​காரி​களுக்கு அறிவுறுத்தியதாவது: தற்​போது மாநக​ராட்​சி​யில் நாளொன்​றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்​படு​கிறது. தெரு நாய்​களை கட்​டுப்​படுத்த நாளொன்​றுக்கு சராசரி​யாக 350 முதல் 400 தெரு நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை மேற்​கொள்ள வேண்​டும். அனைத்து தெரு நாய்​களுக்​கும், செல்​லப் பிராணி​களுக்​கும் வெறி ​நாய்க்​கடி தடுப்​பூசி செலுத்தி 100 சதவீதம் வெறி​நாய்க்​கடி நோய் தடுப்​பூசி செலுத்​தப்​பட்​டுள்​ளதை உறுதி செய்ய வேண்​டும்.

முதல்​வர் விஜய் உத்​தர​வின்​படி மாநக​ராட்​சிப் பகு​தி​களில் தெரு நாய்​களை கட்​டுப்​படுத்தி மக்​களைப் பாது​காக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் அறி​வுறுத்​தி​னார். இந்த ஆய்​வின் போது, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன், இணை ஆணை​யர்​கள் வீ.ப.ஜெயசீலன் (சு​கா​தா​ரம்), செ.சரவணன் (பணி​கள்), மத்​திய வட்​டார துணை ஆணை​யர் எச்.ஆர்​.க​வுஷிக், தலைமை கால்​நடை மருத்​துவ அலு​வலர்​ கமால்​ உசேன்​ உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்.