惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 聂微东
博客园 - 叶小钗
爱范儿
爱范儿
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
美团技术团队
T
Tailwind CSS Blog
博客园 - 司徒正美
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The Cloudflare Blog
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
博客园 - 【当耐特】
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கொலை செய...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

புலந்த்சாஹர்: பிறந்த நாள் கொண்​டாட்​டத்​தின்போது முகத்​தில் கேக் பூசி​ய​தால் ஏற்​பட்ட தகராறில் 3 பேரை கொலை செய்​தவர் போலீஸ் என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொலை செய்​யப்​பட்​டார்.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்​சாஹர் நகரின் குர்ஜா நகர் பகுதியில் கடந்த சனிக்​கிழமை இரவு ஜீத்து சைனி என்​பவரின் பிறந்த நாள் கொண்​டாட்​டம் நடை​பெற்​றது. அப்​போது ஜீத்து சைனி என்பவரின் முகத்​தில் அவரது நண்​பர்​கள் சிலர் கேக் பூசியதாகக் கூறப்​படு​கிறது. அப்​போது இரு தரப்​பினர் இடையேகடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது. பின்​னர் ஒரு​வர் துப்பாக்​கி​யால் சுட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதில் 3 இளைஞர்​கள் கொல்​லப்​பட்​டனர்.

இதையடுத்து ஜீத்து சைனி உள்​ளிட்​டோர் தப்​பியோடினர். தப்பி ஓடிய குற்​ற​வாளி​களைக் கைது செய்ய 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. ஜீத்து சைனி குறித்து தகவல் கொடுப்​போருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி வழங்​கப்​படும் என்​றும் போலீ​ஸார் அறிவித்​திருந்​தனர். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு, புலந்த்​சாஹர் அருகே தராவு பகு​தி​யில் போலீ​ஸார் வாக​னச் சோதனையில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது அந்த வழியே 2 பேர் ஸ்கூட்​டரில் வந்​தனர். அவர்​களை நிறுத்​து​மாறு போலீ​ஸார் கூறியபோது அவர்​கள் வாக​னத்தை திருப்பி தப்​பியோட முயன்​றனர். அவர்​களை துரத்​திச் சென்ற போலீ​ஸார் ஜஜ்ஜார் சாலைப் பகு​தி​யில் அவர்​களை மடக்​கினர். அப்​போது ஸ்கூட்​டரில் வந்த நபர்​கள் போலீ​ஸாரை நோக்கி துப்​பாக்​கி​யால் சுட்​டனர். பதி​லுக்கு போலீ​ஸாரும் துப்​பாக்​கி​யால் சுட்டனர். இந்த துப்​பாக்​கிச் சண்டை சில நிமிடங்​களுக்கு நீடித்தது. இதில் ஒரு​வர் துப்​பாக்கி குண்டு பட்டு கீழே விழுந்​தார். மற்​றொரு​வர் தப்​பியோடி​விட்​டார்.

இதையடுத்து கீழே கிடந்த இளைஞரை மருத்​து​வ​மனைக்கு போலீஸார் தூக்​கிச் சென்​றனர். ஆனால் அவர் ஏற்​கெனவே உயிரிழந்​து​விட்​ட​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். விசா​ரணை​யில் அவர் ஜீத்து சைனி என்​பது தெரிய வந்​தது. இதையடுத்து சம்பவ இடத்​தில் பிஸ்​டல், துப்​பாக்கி குண்​டு​கள், நம்​பர் பிளேட் இல்​லாத ஸ்கூட்​டர் ஆகிய​வற்றை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். இந்த வழக்​கில் ஏற்​கெனவே 6 பேரை போலீஸார்​ கைது செய்​துள்​ளனர்​.