惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 【当耐特】
博客园_首页
The GitHub Blog
The GitHub Blog
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 三生石上(FineUI控件)
D
Docker
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
雷峰网
雷峰网
小众软件
小众软件
I
InfoQ
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதுரையில் தேர்தல் களத்தில் எதிரொலிக்காத உள்ளூர் பிரச்சின...
2026-04-25 · via hindutamil

Updated on

2 min read

மதுரை: மதுரை விமானநிலைய விரிவாக்கம், எய்ம்ஸ், தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைப்பு, போக்குவரத்து நெரிசல் போன்ற மக்களை அதிகம் பாதித்த பிரச்சினைகளை பற்றி பேசாத வேட்பாளர்கள், ஒருவர் மீது ஒருவர் தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்ததால் அவர்களது பிரச் சாரம் மக்களிடம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

இதனால், பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் அதிமுக 8, திமுக 7 தொகுதிகளில் போட்டியிட்டன.

காங்கிரஸ் 2, பாஜக, மதிமுக, புதிய நீதி கட்சி ஆகியன தலா ஒரு தொகுதியிலும், நாம் தமிழர், தவெக ஆகிய கட்சிகள் தலா 10 தொகுதிகளிலும், சசிகலா கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

போட்டியிட்ட ஒரு சில வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைவருமே தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கடந்த 5 ஆண்டுகள் நிலவிய முக்கியப் பிரச்சினைகள், தொலைநோக்குத் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பற்றி பேசாமல், வெறும் அரசியல், தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுத்தனர்.

மதுரை மத்தியில் திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், நிறை வேற்றப்போகும் தொலைநோக்கு திட்டங்களைப் பற்றி பேசவில்லை.

மாறாக, அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி.யை படிக்காதவர், சினிமா சங்கி, அறிவில்லாதவர், அவரது மனைவி குஷ்பு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை போல் பல கட்சிகளுக்குத் தாவியவர் போன்ற தனிப்பட்ட விமர்சனங்களை முன் வைத்தார்.

அதற்கு சுந்தர் சி-யும், அவரது மனைவி குஷ்புவும் பதிலுக்கு பழனிவேல் தியாகராஜன் மீது அவரது வளர்ப்பு பற்றியும், தலைக்கனம் பிடித்தவர், அவர் எதற்காக நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அவரது தனிப்பட்ட அரசியல் சரிவைப் பற்றியும் பேசினர்.

தெருவிளக்கு, சாக்கடை, குப்பை உள்ளிட்ட சாதாரணப் பிரச்சினையை மையப்படுத்தி பேசிய சுந்தர்.சி, மக்களுக்கான எதிர்காலத் திட்டங்கள், கடந்த 5 ஆண்டுகளில் பழனிவேல் தியாகராஜன் எதுவுமே செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறினார்.

பழனிவேல் தியாராஜன், அவரது தொகுதிக்கு நிறைவேற்ற மறந்த திட்டங்களை பற்றி பேசவில்லை. மீனாட்சியம்மன் கோயிலை, வாராணசியுடன் ஒப்பிட்டு அவர் பேசிய பிரச்சாரம் மக்களிடம் ஓரளவு எடுபட்டது. மற்றபடி இருவரது தனிப்பட்ட தாக்குதல்கள் மக்களைக் கவரவில்லை.

ஆனால், சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி சுந்தர் சி-க்கு நல்ல விளம்பரத்தை மட்டுமே தேடி தந்தது. அவர் வெற்றிபெறுவதற்கு அது உதவுமா? என்பது தெரியவில்லை. மாறாக இரு வேட்பாளர்களைப் பற்றிய தவறான எண்ணத்தைத்தான் மக்களிடம் ஏற்படுத்தியது.

தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைத்ததை எதித்தும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சிஐடியு, விசிக தொழிற்சங்கம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர்.

ஆனால், திமுக கூட்டணியுடன் சேர்ந்து அவர்கள் இந்தத் தேர்தலைச் சந்தித்ததால் மறந்தும்கூட மக்கள் பிரச்சினை பற்றி பிரச்சாரத்தில் அவர்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆண்டு முழுவதும் போராட்டம் நடத்தியவர்களே தேர்தல் நேரத் தில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தைக் கையில் எடுத்துப் பிரச்சாரம் செய்யவில்லை.

மதுரை விமானநிலைய விரிவாக்கம், வைகை ஆற்றை கைவிட்ட பொதுப்பணித்துறை, எய்ம்ஸ், ஐடி நிறுவனங்கள், சுற்றுலா மேம்பாடு, மின் கட்டண உயர்வு, விலைவாசி ஏற்றம், பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்ற மக்களை அதிகம் பாதித்த பிரச்சினைகளைப் பற்றி எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஆழமாகப் பேசவில்லை.

சில இடங்களில் மேலோட்டமாகச் சொல்லிச் சென்றனர் தவிர, அவற்றை கையில் எடுத்தால் மத்திய, மாநில அரசுகளைப் பகைத்துக்கொள்ள நேரிடும் என்று கடந்து சென்றனர். ஆளும்கட்சியினர், எதிர்க் கட்சியினர், பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதிலும், சமுதாய வாக்குகளை வளைப் பதிலுமே கவனம் செலுத்தியதால் அவர்களின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை.

புதிதாக தேர்தல் களத்தில் குதித்த தவெக வேட்பாளர்கள் பிரச்சாரமும், மதுரை மாவட்டத்தில் மக்களை ஈர்க்கவில்லை. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மட்டுமே ஓரளவு மக்கள் நலன் சார்ந்தும், அவர்கள் பிரச்சினைகளைப் பற்றியும் பிரச்சாரம் செய்தனர். அதனால், மாவட்டத்தில் ஒரு சில தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி, சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.