惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

A
About on SuperTechFans
量子位
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 聂微东
V
Visual Studio Blog
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 司徒正美
V
V2EX
The GitHub Blog
The GitHub Blog
博客园_首页
月光博客
月光博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MyScale Blog
MyScale Blog
博客园 - 叶小钗
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
GbyAI
GbyAI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
B
Blog
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அந்தரன்: திரைப் பார்வை - விருந்து படைத்ததா ‘காதல்’ த்ரில்...
ஆர்.சி.ஜெயந்தன் · 2026-06-29 · via hindutamil

Updated on: 

நம் கண்கள் தடுக்கி விழுந்தால் தமிழ் சினிமாவில் ‘மர்டர் மிஸ்டரி’, ‘இன்வெஸ்டிகேட்டிவ் க்ரைம் த்ரில்லர்’, ‘சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர்’ வகைப் படங்களின் மீதுதான் விழுந்தாக வேண்டும். அந்த அளவுக்கு ஆண்டுக்கு 280 படங்கள் வெளியானால் அவற்றில் 200 படங்கள் இந்த மூன்று வகையைச் சேர்ந்தவைதான். ஆனால், இந்த 200 படங்களில் 20 படங்கள் கூட கதை சொல்லலில் நம்மைக் கட்டிப்போடும் படங்களாக இருப்பதில்லை. ஆனால், முற்றிலும் விதிவிலக்காக வந்திருக்கிறது ‘அந்தரன்’.

சசியின் ‘டிஸ்யூம்’ (2006) படத்தில் ‘சந்தியா’வை மணம் முடிக்கவிருக்கும் மாப்பிள்ளையாக ஒரு காட்சியில் வந்து அடக்கமாகவும் அமைதியாகவும் அழகாகவும் நடித்து அறிமுகமானவர்தான் பிரஜின். திறமையும் அர்ப்பணிப்பும் மிகுந்த தமிழ் நடிகர். அவரது 20 ஆண்டுகள் திரைப் பயணத்தில் ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ உள்ளிட்ட பல நல்ல கதைக் களங்களும் கதாபாத்திரங்களும் அமைந்தாலும் அவரை கம்பீரமாகக் கைதூக்கி விட்டிருக்கிறது இந்த ‘அந்தரன்’.

இந்தப் பெயர்ச் சொல்லுக்கான பொருள் ‘மறைந்திருந்து தாக்கும் வேடன்’. தலைப்புக்கு மட்டுமல்ல; தேர்ந்துகொண்ட கதைக் களத்துக்கு மிக நேர்மையான பிடிமானத்துடன் நகரும் திரைக்கதையும் அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர்களின் அட்டகாசமான நடிப்பும் இந்தப் படத்தை முதல் காட்சியில் தொடங்கி கடைசிக் காட்சி வரை எங்கும் தலையையும் கண்களையும் திருப்பிவிட முடியாதவாறு தன்னுடைய ‘கிராஃப்ட்’ திறமையைக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராவணன். 

தமிழ் சினிமாவுக்குச் சினிமாவை அணுவணுவாகப் புரிந்துகொண்ட ரசனையான இயக்குநர் கிடைத்திருக்கிறார். இவரைப் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அடையாளம் கண்டு, அவரது ‘மேக்கிங்’ திறமைக்குத் தேவையான பட்ஜெட்டை கொடுத்திருப்பதுடன் படத்தில் நாயகியின் மிக அப்பாவாக வெகு இயல்பாக நடிக்கவும் செய்திருக்கும் எம்.கே.சாம்பசிவம் பாராட்டுக்குத் தகுதியான அறிமுகத் தயாரிப்பாளர்.

இனி விமர்சனத்துக்குள் நுழைவோம். கல்லூரிப் படிப்பை முடித்துப் பணி புரிந்துவரும் கார்த்திகாவுக்கு (இவானா வருண்) திருமணம் பேசி முடிக்கிறார்கள். திருமணம் நிச்சயம் முடிந்த கையோடு லாரி மோதி இறக்கிறான் மணமகன். இவனை மட்டுமல்ல, இதற்கு முன்பு இதேபோல் கார்த்திகாவுக்கு நிச்சயமானதும் அந்த மாப்பிள்ளை கொல்லப்படுவான். இதனால் திருமணம் என்றாலே வேண்டவே வேண்டாம், என்னால் இனியொரு உயிர் போகக் கூடாது என்று பயத்தோடு வாழ்கிறாள் கார்த்திகா. 

ஆனால், கார்த்திகாவுடன் கரம் பற்ற முடிவாகும் இளைஞர்களுக்கு முடிவு கட்டுவது யார் என்பது மட்டும் காவல் துறைக்குப் புரியாத புதிர். இந்தச் சூழ்நிலையில்தான் கார்த்திகாவின் மாப்பிள்ளைகள் மரணிக்கும் பின்னணியைப் புலனாய்வு செய்ய வருகிறார் காவல் அதிகாரி செழியன் (பிரஜின்). பயந்து கிடக்கும் கார்த்திகா மீது அக்கறை காட்டி, அவளுடன் நெருங்கிப் பழகி, அவளது உதவியுடன் எப்படி அந்தக் கொலையாளியை செழியன் நெருங்குகிறார் என்பது கதை.  

திருமண வயதில் முதிர்ந்து நிற்கும் ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் விசித்திரமான ஹாரர் மரணங்களை மையமாகக் கொண்டு ஒரு காட்சி கூட உபரியானது, உப்புச் சப்பில்லாது என்று சொல்லமுடியாதபடி திரைக்கதையும் காட்சிகளையும் வெகு சுவாரசியமாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர். 

செழியன் கைக்கு வழக்கு வந்ததுமே வேகமெடுக்கும் திரைக்கதை, இயல்பான, தர்க்கம் சிதையாத திருப்பங்களைக் கொண்டு சரியான கால அளவில் உண்மையை நோக்கிய புதிர்களை விடுவிக்கிறது. மிக மிக முக்கியமாகக் கதையோடும் கதாபாத்திரங்களோடும் ஒன்ற வைக்கும் மாயத்தைத் திரைக்கதை இறுதிவரை சாத்தியப்படுத்துவதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கிறது. 

எங்காவது ஒரு இடத்திலாவது ஒரு சிறு ஓட்டையை இயக்குநர் தவறவிட்டிருப்பார் என்று தேடினால், அதற்கு அவர் வாய்ப்பே கொடுக்கவில்லை. நல்வரவு சந்தோஷ் ராவணன்.

காவல் அதிகாரி செழியனாக வரும் பிரஜின் கட்டுக்கோப்பான உடல்  தோற்றம், அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். தனது ‘கேரக்டர் ஆர்க்’கிறகு உணர்ச்சிகரமான ஆழத்தைத் தந்துள்ளார். இவரை ஒருபடி மிஞ்சும் விதமாக கார்த்திகாவாக நடித்திருக்கும் இவானா கேரக்டராக வாழ்ந்திருக்கிறார். 

வருண், அதிரன், அனுபமா குமார், செந்தில் குமாரி உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள் மர்மத்தை உற்சாகத்துடன் துரத்தும் இக்கதைக்கு நம்பகத்தன்மையையும் முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு ஆழத்தையும் கூட்டியிருக்கிறார்கள்.

புரொடெக்‌ஷன் டிசைன் தொடங்கி தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்து விளங்கும் இப்படத்துக்கு கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும், மிகக் கச்சிதமான வெட்டுகளைக் கொடுத்துள்ள அஸ்வின் - சதீஷ் இணையின் படத்தொகுப்பும் படத்தை அழகான சீரான ஓட்டத்துக்குப் பெரும் பங்களித்திருக்கின்றன. தரமான ‘த்ரில்லர்’ திரையரங்க அனுபவம் விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம்.