惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
G
Google Developers Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
P
Proofpoint News Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
月光博客
月光博客
Stack Overflow Blog
Stack Overflow Blog
美团技术团队
Jina AI
Jina AI
T
Tailwind CSS Blog
Google DeepMind News
Google DeepMind News
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத் பிஜு ஜனதா தளம் கட்சி...
மோகன் கணபதி · 2026-06-25 · via hindutamil

Updated on: 

புவனேஸ்வர்: தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத், பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தபோது அவரது தனிச் செயலாளராகப் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐஏஎஸ்-ன் மனைவி சுஜாதா ராவத் ஐஏஎஸ் இன்று பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான ஷங்கா பவனில் நடைபெற்ற எளிய நிகழ்வில் சுஜாதா ராவத் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டை அணிவித்து நவீன் பட்நாயக் வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா ராவ், நீண்ட நிர்வாக அனுபவம் கொண்டவர். பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டவர். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். அவரை பிஜு ஜனதா தளம் கட்சிக்கு வரவேற்கிறேன். எளிய உறுப்பினராக அவர் இணைந்துள்ளார். தனது இந்த புதிய பொறுப்பில் தனது அனுபவத்தின் மூலம், மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு உதவுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்தார்.

சுஜாதா ராவத்தின் வருகை காரணமாக கட்சித் தலைமையில் உடனடி மாற்றம் நிகழாது என்பதை நவீன் பட்நாயக் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அவர், “அடுத்த தேர்தலுக்கு கட்சியை நான் வழிநடத்துவேன். இதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா ராவத், “கடந்த 24 ஆண்டுகளாக நவீன் பட்நாயக்கின் தலைமையின் கீழ் பணியாற்றி, ஒடிசா மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை பெற்றேன். தற்போதும் அவரது தலைமையின் கீழ் மாநிலத்தின் நலனுக்காகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். ஜெகன்னாதர் அருளாளும், ஒடிசா மக்களின் ஆசியாலும் ஒடிசாவுக்காகவும் அதன் மக்களுக்காகவும் முழு அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.