惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
Tailwind CSS Blog
Engineering at Meta
Engineering at Meta
MongoDB | Blog
MongoDB | Blog
爱范儿
爱范儿
小众软件
小众软件
MyScale Blog
MyScale Blog
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
V2EX
量子位
云风的 BLOG
云风的 BLOG
A
About on SuperTechFans
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
Martin Fowler
Martin Fowler
C
Check Point Blog
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆபரேஷன் சிந்தூர் ஒரு தொடக்கம்தான்: முதலாம் ஆண்டு நிறைவில்...
2026-05-07 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை என்றும், இது ஒரு தொடக்கம்தான் என்றும் தெரிவித்துள்ள இந்திய ராணுவம், பஹல்காம் பயங்கரவாத சம்பவம் போன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்திய அரசு எடுத்தது. இதில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு உயர்மட்ட ராணுவத் தலைவர்கள் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜுபில் ஏ. மின்வல்லா, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், ஏர் மார்ஷல் அவ்தேஷ் குமார் பாரதி, வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், “பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் இடைவிடாமல் தொடரும் என்பதை 'ஆபரேஷன் சிந்தூர்' நிரூபித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் 100-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது, அதே நேரத்தில் இந்தியாவால் குறிவைக்கப்பட்ட ஒன்பது பயங்கரவாத முகாம்களில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரச்சாரத்திலும், கதை உருவாக்கத்திலும் முதலீடு செய்ததைப் போல, தனது போர்த் திறன்களை வலுப்படுத்துவதிலும் முதலீடு செய்திருந்தால், அதன் செயல்திறன் ஒருவேளை மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

பாகிஸ்தானில் இனி எந்தப் பயங்கரவாதத் தளமும் பாதுகாப்பாக இல்லை என்பதை ‘ஆபரேஷன் சிந்தூர்’ உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடரும், மேலும் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும். ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை; இது வெறும் தொடக்கம்தான். சத்தம் எழுப்புவது மட்டும் எங்கள் நோக்கமல்ல; சூழ்நிலையை மாற்றுவதே எங்கள் நோக்கம்” என தெரிவித்தார்.

முன்னதாக, ஆபரேஷன் சிந்துரின் ஓராண்டு நிறைவையொட்டி ஆயுதப் படைகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் பதிவில், “ஓராண்டுக்கு முன், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நமது ஆயுதப் படைகள் ஈடு இணையற்ற துணிச்சலையும், துல்லியத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தின. பஹல்காமில் அப்பாவி இந்தியர்களைத் தாக்கத் துணிந்தவர்களுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். நமது படையினரின் வீரத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் வணக்கம் செலுத்துகிறது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியையும், தேசியப் பாதுகாப்பைப் பேணுவதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது. அது நமது ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறன், தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த வலிமையையும் எடுத்துக்காட்டியது. இன்று, ஓராண்டுக்குப் பிறகும், பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, அதற்குத் துணைபுரியும் சூழலை அழிப்பதற்கான எங்கள் உறுதியில் முன்பைப் போலவே உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.