惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
B
Blog
Jina AI
Jina AI
N
Netflix TechBlog - Medium
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园_首页
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
美团技术团队
Google DeepMind News
Google DeepMind News
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志
U
Unit 42
The Cloudflare Blog
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
小众软件
小众软件
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
GbyAI
GbyAI
腾讯CDC
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக ஆட்சி அமைக்க விஜய்க்கு கிடைக்குமா மேஜிக் எண் 118? - ...
2026-05-05 · via hindutamil
வீரமணி சுந்தரசோழன்

Updated on

2 min read

தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான ‘மேஜிக் எண் 118’-ஐ பெற தவெக முயற்சித்து வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவளிக்க கட்சிகள் போடும் ‘கணக்கு’கள் குறித்து பார்ப்போம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 108 இடங்களை கைவசம் வைத்துள்ள தவெகவுக்கு, கூடுதலாக 10 முதல் 11 இடங்கள் தேவை.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக தவிர்த்து காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் ஆகியவை தலா 2 தொகுதிகள், தேமுதிக, அமமுக தலா 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளில் சிலவற்றை தனது கூட்டணிக்கு கொண்டுவர தவெக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விஜய் தனது பிரச்சாரத்தில் அரசியல் எதிரி என திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதேபோல பாஜகவை கொள்கை எதிரி எனவும் தொடக்கத்தில் விமர்சித்தார். இதனால், இந்த இரு கட்சிகளோடு விஜய் கூட்டணியமைக்க வாய்ப்பில்லை. அதிமுகவையும் தனது பிரச்சாரத்தில் அவ்வப்போது மறைமுகமாக விஜய் விமர்சித்து வந்தார். எனவே, 47 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள அதிமுக, விஜய்க்கு ஆதரவளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக எதிர்ப்பு என்ற ஒரே நோக்கத்தோடு ஒருவேளை விஜய்க்கு அதிமுக ஆதரவளித்தால், பின்னர் தேர்தல் களம் தவெக – திமுக என முற்றிலுமாக மாறிவிடும். இதனால் அதிமுக நிரந்தரமாக 3-வது கட்சியாக மாறும் சூழல் உருவாகிவிடும்.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து விஜய் மற்றும் திமுகவுக்கு மாற்று என்று அரசியல் செய்தால் மட்டுமே அடுத்தடுத்த தேர்தல்களில் முதன்மைக் கட்சியாக அதிமுக தேர்தலை எதிர்கொள்ளலாம். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க வாய்ப்பில்லை என்றே அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சி கிட்டத்திட்ட தவெகவுக்கு ஆதரவளிக்கும் மனநிலைக்கு சென்றுவிட்டது. விஜய்க்கு ராகுல் காந்தியிடம் உள்ள தொடர்பு இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல ஆட்சியில் பங்கு என்ற அடிப்படையில் சில அமைச்சர் பதவிகளை பெறலாம் என்ற கனவோடு காங்கிரஸார், இப்போதே தவெகவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இதன் காரணமாக 5 உறுப்பினர்களின் ஆதரவு விஜய்க்கு உறுதியாகவிட்டதாகவே பேசப்படுகிறது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ‘விஜய்யை எங்கள் எதிரியாக நாங்கள் பார்க்கவில்லை; பாஜக - அதிமுகவே எதிரி’ என்றார். எனவே அவரும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் விஜய்க்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உண்டு. விசிகவின் வழியில் இடதுசாரிகளும் விஜய்க்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது என்றே சொல்லப்படுகிறது.

இருப்பினும், இந்த முடிவு திமுகவுக்கு நெருடலை உருவாக்கலாம். ஆனாலும், பாஜகவின் கைங்கர்யத்தை தடுக்க விஜய்க்கு ஆதரவளிக்கிறோம் என்று அவர்கள் ‘கோரஸ்’ ஆக சொல்ல தயாராகிவிட்டதாக விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர். இதே கணக்கோடு ஐயுஎம்எல் கட்சியும் விஜய்க்கு ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிடமும் தவெக தரப்பு ஆதரவு கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. முதல் முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் கனவோடு பாமகவும் தவெகவுக்கு ஆதரவளிக்க முன்வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தலா ஓர் இடத்தில் வென்றுள்ள அமமுக மற்றும் தேமுதிகவின் ஆதரவை நாடவும் விஜய் தரப்பு முயற்சித்து வருகிறது.

‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ என்று விஜய் தனது முதல் மாநில மாநாட்டிலேயே அறிவித்துவிட்டதால், தவெகவிடம் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளுக்கும் எந்தச் சிக்கலும் இருக்காது. அதே நேரத்தில், தவெகவுடனான கூட்டணியை தொடர்ந்தால், அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல்களிலும் கணிசமான இடங்களை கைப்பற்றலாம் என்ற கணக்கும் அக்கட்சிகளிடம் உள்ளது.

இதில் இன்னொரு முக்கிய சிக்கலும் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக, காங்கிரஸ் உள்ள கூட்டணியில் இடம்பெறுமா என்பது கேள்விக்குறி. அதுபோல பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக, இடதுசாரிகள் இடம்பெறுமா என்பதும் சந்தேகமே. இதனையெல்லாம் தாண்டி 118 என்ற மேஜிக் எண்ணை தொடுவதில்தான் விஜய்யின் சாமர்த்தியம் உள்ளது.

கூட்டணிக் கட்சிகளை நம்பியபடி ஆட்சி நடத்தும் ‘மைனாரிட்டி அரசு’ என்பது மதில் மேல் பூனை நிலைதான் என்றாலும், அதனை லாவகமாக விஜய் கையாளுவார் என தவெகவினர் நம்புகின்றனர்.

அதேபோல தவெகவின் எழுச்சியை இனியும் புறந்தள்ள முடியாது என அரசியல் கட்சிகளும் இப்போது உணர்ந்திருக்கும். இதனால் பெரும்பான்மைக்கு தேவையான ‘மேஜிக் எண் 118’ எளிதாக கிடைக்கும் என்ற உறுதியோடு உள்ளது தவெக.