惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
博客园_首页
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
G
Google Developers Blog
Jina AI
Jina AI
C
Check Point Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
GbyAI
GbyAI
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
The Cloudflare Blog
M
MIT News - Artificial intelligence
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
J
Java Code Geeks
WordPress大学
WordPress大学
博客园 - 聂微东
月光博客
月光博客
博客园 - 司徒正美
T
The Blog of Author Tim Ferriss
大猫的无限游戏
大猫的无限游戏
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்புகள் வலியுறு...
ஆர்.ஷபிமுன்னா · 2026-05-26 · via hindutamil

ராஜஸ்தானின் பிகானிரில் பசுக்கள் மீது மலர்களைத் தூவி வழிபடும் இந்துக்கள் | கோப்புப் படம்

Updated on: 

புதுடெல்லி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில், இந்த கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை மே.28-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இச்சூழலில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஜாமியத் உலமா-இ-ஹிந்த் (அர்ஷத் மதானி பிரிவு) அமைப்பின் தலைவரான மவுலானா அர்ஷத் மதானி, பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கைக்கு பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இது போன்ற கோரிக்கைகள் இதுவரை இந்து அமைப்புகளிடமிருந்தே வந்துள்ள நிலையில், முஸ்லிம் அமைப்புகள் முன்வைக்கும் இக்கோரிக்கை தனித்துவமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

'அகில இந்திய முஸ்லிம் ஜமாத்' அமைப்பின் தேசியத் தலைவரான மவுலானா ஷஹாபுதீன் ரிஸ்வி, பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க வேண்டும் என்ற மதானியின் கோரிக்கைக்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளார். பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திடம் பேசிய ரிஸ்வி, “இக்கோரிக்கை தொடர்பாகப் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதே முதன்மையான நோக்கம். அந்த நோக்கத்தை முன்னிறுத்தி, முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறவுள்ளது.

அக்கூட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய ஒரு கூட்டு மனு தயாரிக்கப்பட்டு, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இக்கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய ஷியா தனிச் சட்ட வாரியத்தின் தேசியப் பொதுச்செயலாளர் மவுலானா யாசூப் அப்பாஸ், “பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. அக்கோரிக்கையின் மீது முழு மனதுடன் செயல்படுவது அரசின் பொறுப்பு.

சில மாநிலங்களில் பசுக்கள் மீதான தடைகள் எதுவும் இன்றி உண்ணப்படுகிறது. அதே வேளையில், வேறு சில மாநிலங்களில் பசுவின் பெயரால் உயிர்கள் பறிக்கப்படும் முரண்பாடான சூழல் நிலவுகிறது. இதை தடுக்க, பசுக்கள் குறித்த அரசின் நோக்கம், அதன் கொள்கைகளில் தெளிவாகப் பிரதிபலிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு சீரான அணுகுமுறை உறுதி செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் துணைத்தலைவர் கவுசர் ஹயாத் கான், “இக்கோரிக்கை தொழில்நுட்ப ரீதியாகச் சரியானதே. அதனை அரசு முழுமையான நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்த வேண்டி முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் ஒரே மேடையில் திரண்டால் மட்டுமே பலன் கிடைக்கும்.

கோவா, அசாம் மற்றும் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி இன்றும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உண்ணப்படுகிறது. உபி, உத்தராகண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பசுவதை அரசியல்மயமாக்கப்படுகிறது. இத்தனைக்கும் இம்மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியில் உள்ளது” என விமர்சித்தார்.

சன்னி பிரிவு முஸ்லிம்களின் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் மூத்த நிர்வாக உறுப்பினரான மவுலானா காலித் ரஷீத் பிரங்கி மெஹாலி, “நமது இந்து சகோதரர்கள் பசு மீது மதரீதியான உணர்வுகளைக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பசுவதை தொடர்பான சட்டங்களில் ஒருமைப்பாடு இருக்க வேண்டும். இதற்காக, பசுவதைக்கு எதிரான ஒரே சீரான சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் 'குரேஷி' சமூகத்தினரின் முக்கிய அமைப்பான 'அகில இந்திய குரேஷி ஜமாத்' தலைவர் சிராஜ் குரேஷி, “மேற்கு வங்கத்தில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகளே இதற்கு காரணமாகி விட்டது. பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க தேவைப்படும் பட்சத்தில், பிரதமரைச் சந்தித்துப் பேச எனது அமைப்பு முயற்சிக்கும். ஏனெனில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

பசு வதை தொடர்பாக நடைபெறும் அரசியல் ஆதாய முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலும், கும்பல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலும் இத்தகைய முயற்சிகளை இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த முஸ்லிம் அமைப்புகள் தம் சமூகத்தினர் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்கப் முயல்கின்றனர்.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வட மாநிலங்களின் முதல்வர்களை நேரில் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட, முஸ்லிம்கள் அதிகமாக உள்ள உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை முதலில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என முஸ்லிம்கள் கோருவது புதிதல்ல. கடந்த 2014 இல் மும்பையில் நடைபெற்ற அனைத்து மத மாநாட்டில் அர்ஷத் மதானி இதே கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதேபோல், 2017 இல் உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யா நாத், பசு வதையைத் தீவிரமாகக் கட்டுப்படுத்த முனைப்பு காட்டியது. அனைத்து சட்டவிரோத இறைச்சிக் கூடங்களும் மூடப்பட்டன. எனினும், எருமை இறைச்சி வர்த்தகத்திற்கு, விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டன.