惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

A
About on SuperTechFans
量子位
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 聂微东
V
Visual Studio Blog
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 司徒正美
V
V2EX
The GitHub Blog
The GitHub Blog
博客园_首页
月光博客
月光博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MyScale Blog
MyScale Blog
博客园 - 叶小钗
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
GbyAI
GbyAI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
B
Blog
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களுக்கு இழுத்தடிக்கப்படும்...
இரா.கார்த்திகேயன் · 2026-05-25 · via hindutamil

சோமனூர் பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடம்.

Updated on: 

கோவை: பல ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு விவகாரத்தால், விசைத்தறியாளர்கள் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி, சுமார் 4 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றன.

1990-ம் ஆண்டு முதல் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி ஒப்பந்தம் செய்து வந்தனர். ஆனால், தற்போது ஜவுளி உற்பத்தியாளர்களிடம் உரிய கூலி வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் போராடும் நிலைமை உள்ளது.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 90 சதவீதம் சாதா விசைத்தறிகள் மூலம் கூலி அடிப்படையில் நெசவு செய்து வருகிறோம். ஜவுளி உற்பத்தியாளர் களிடம் இருந்து பாவு நூல் பெற்று, கிரே காடா துணிகள் உற்பத்தி செய்கிறோம்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வை ஜவுளி உற் பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தி வருகிறோம். ஆனாலும், கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு எங்களுக்கு உரிய கூலி கிடைப்பதில்லை.

ஒப்பந்தப்படி கூலி உயர்த்தப்பட்டாலும், மார்க்கெட் நிலைமை சரியில்லை எனக் கூறி, பழைய கூலியே திரும்பத் திரும்ப வழங்கப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக உரிய கூலிக்கு போராடி வருகிறோம். ஒரு மீட்டர் துணி நெய்வதற்கு ரூ.4 முதல் ரூ.6 வரை ரகங்களுக்கு ஏற்ப விசைத்தறியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் இந்த கூலியில் மீட்டருக்கு 25 பைசா முதல் 50 பைசா வரை குறைத்து வழங்குவதால், பல லட்சம் மீட்டர் துணி உற்பத்தியில் ஈடுபடும் விசைத்தறியாளர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

எனவே, உரிய கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசு, மாவட்ட நிர்வாகங்கள் பெற்றுத்தந்தால் மட்டுமே இந்த தொழிலின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். ஜவுளி உற்பத்தியாளர்கள் நெசவு கூலியை குறைத்து வழங்கும்போது, அதன் முழு சுமையையும் விசைத்தறியாளர்களே ஏற்கும் நிலை உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்ட நெசவுக்கூலி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சில இடங்களில் மறுத்து வருகின்றனர். சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்தக் கூலியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விசைத்தறியாளர்கள் கூறும்போது, “தொழிலாளர்களின் சம்பள உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு, மின் கட்டணம், தொழிலாளர்களின் வீட்டு வாடகை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது.

இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், வேறு தொழிலுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். உரிய கூலியை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.