惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
博客园 - Franky
L
LangChain Blog
GbyAI
GbyAI
A
About on SuperTechFans
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 叶小钗
N
Netflix TechBlog - Medium
D
DataBreaches.Net
Martin Fowler
Martin Fowler
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
爱范儿
爱范儿
罗磊的独立博客
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - முழு விவரம்
2026-05-22 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தமிழகம் முழுவதும் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வணிக வரி, பதிவு, அறநிலையத் துறை செயலராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக (டிட்கோ) தலைவராக இருந்த சந்தியா வேணுகோபால் சர்மா இப்போது திட்டம், வளர்ச்சித் துறைக்கும், சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் ஜெ.குமரகுருபரன் இப்போது வணிகவரி, பதிவு, அறநிலையங்கள் துறைக்கும், அறநிலையத் துறை செயலராக உள்ள எஸ்.ஸ்வர்ணா இப்போது சுற்றுலா, கலாச்சாரம், சிறப்பு முயற்சிகள் துறைக்கும் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி இப்போது தொழில் துறை சிறப்பு செயலராகவும், சிஎம்டிஏ முன்னாள் உறுப்பினர் செயலர் ஜி.பிரகாஷ் இப்போது வருவாய் நிர்வாக ஆணையரக கூடுதல் ஆணையராகவும், எழுதுபொருள் அச்சகத் துறை ஆணையர் வி.ஷோபனா இப்போது துணி நூல் துறை ஆணையராகவும், வணிக வரி, பதிவுத் துறை செயலராக உள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ் இப்போது தொழிலாளர் ஆணையராகவும், போக்குவரத்து துறை ஆணையர் கிரன் குராலா, நகர ஊரமைப்பு ஆணையராகவும், விடுப்பில் இருந்து திரும்பிய கே.விஜயகார்த்திகேயன் இப்போது மீனவள இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கைத்தறித் துறை இயக்குநர் மகேஷ்வரி ரவிகுமார் இப்போது சமூக நல இயக்குநராகவும், சிப்காட் மேலாண் இயக்குநர் கே.செந்தில்ராஜ் இப்போது ஆதிதிராவிடர் நல இயக்குநராகவும், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்ட இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன் இப்போது போக்குவரத்து துறை இயக்குநராகவும், விடுப்பில் இருந்து திரும்பியுள்ள டி.சாருஸ்ரீ இப்போது கருவூலம், கணக்குத் துறை இயக்குநராகவும், கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜி.ரவிக்குமார் இப்போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆஷா அஜித் இப்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற இயக்குநராகவும், டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர் டி,கிறிஸ்துராஜ் இப்போது நில அளவைத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் செயலர் டி.கார்த்திகேயன் இப்போது டிட்கோ தலைவராகவும், சென்னை குடிநீர் வாரிய முன்னாள் மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் இப்போது தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண் இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த எஸ்.அனீஷ் சேகர் இப்போது தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக முன்னாள் மேலாண் இயக்குநர் ஆர்.வி.சஜீவனா இப்போது தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்ட இயக்குநராகவும், தொழிலாளர் ஆணையராக இருந்த எஸ்.ஏ.ராமன் இப்போது சிப்காட் மேலாண் இயக்குநராகவும், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் ஆணையர் லலித் ஆதித்யா நீலம் இப்போது சேலம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.