惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
量子位
博客园 - 司徒正美
IT之家
IT之家
V
Visual Studio Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园_首页
Google DeepMind News
Google DeepMind News
Last Week in AI
Last Week in AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏
GbyAI
GbyAI
Vercel News
Vercel News
B
Blog
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
小众软件
小众软件
罗磊的独立博客
博客园 - 叶小钗
雷峰网
雷峰网
Martin Fowler
Martin Fowler
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் - முதல்வர் வி...
வேட்டையன் · 2026-06-26 · via hindutamil

சென்னையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய்

Updated on: 

சென்னை: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார்.

சென்னை - காமராஜர் சாலையில் இந்த ஓட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அரசின் உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், தடகள ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்த ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு வாசகத்தை முதல்வர் விஜய் எழுதினர். தொடர்ந்து போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் எடுத்துக் கொண்டனர். அதனை முதல்வர் விஜய் வாசித்தார்.

“போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்துக்கு ஆளாகமாட்டேன்; மேலும், எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்; போதைப் பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையின் மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்; மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த ஓட்டத்தை கொடியசைத்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, ஓட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல் துறையினர், விளையாட்டு வீரர்கள் என இந்த ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர்.

முதல்வர் பதக்கம் அறிவிப்பு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகளுக்கு, ‘போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், முதல்வர் விஜய், 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை 14 காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.