惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
Tailwind CSS Blog
The GitHub Blog
The GitHub Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
P
Proofpoint News Feed
博客园_首页
Y
Y Combinator Blog
I
InfoQ
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
Visual Studio Blog
H
Help Net Security
U
Unit 42
GbyAI
GbyAI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 司徒正美
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs
罗磊的独立博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம்...
செ. ஞானபிரகாஷ் · 2026-06-17 · via hindutamil

புதிதாக பொறுப்பேற்ற 3 அமைச்சர்களுடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி

Updated on: 

புதுச்சேரி அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு 3 புதிய அமைச்சர்கள் பழைய ராஜ்நிவாஸில் பதவியேற்றனர். விரைவில் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது.

இதையடுத்து கடந்த மாதம் 13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், என்ஆர்.காங்கிரஸை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 18-ம் தேதி தற்காலிக பேரவைத் தலைவராக அன்பழகன் பதவியேற்றார். 20-ம் தேதி அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் பதவியேற்று கொண்டனர். இதன்பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

கடந்த 3-ம் தேதி பாஜகவைச் சேர்ந்த ஜி.என்.எஸ்.ராஜசேகர், என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த சிவக்கொழுந்து, ராஜவேலு ஆகியோரை அமைச்சர்களாக பரிந்துரை செய்து அதற்கான கோப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இந்த கோப்பு மத்திய உள்துறை மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கடந்த 8-ம் தேதி குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து பாரதி பூங்கா அருகே உள்ள பழைய துணைநிலை ஆளுநர் மாளிகையில்  இன்று (ஜூன் 17) காலை 3 அமைச்சர்களின் பதவியேற்பு விழா  நடந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 42 நாட்களுக்கு பிறகு இந்த அமைச்சரவை விரிவாக்கம் நடந்துள்ளது.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவை வந்து அமைச்சர்கள் தங்கள் அறைகளில் பொறுப்பேற்றனர். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

ஏற்கெனவே பதவியேற்ற 2 அமைச்சர்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. அனைத்து இலாகாக்களையும் முதல்வர் கவனித்து வருகிறார்.

பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்களை இருக்கையில் அமர வைத்தபின்பு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. அனைத்து அமைச்சர்களும் பொறுப்பேற்று செயல்படவுள்ளனர். நல்ல முறையில் இந்த அமைச்சரவை முழுமையாக செயல்பட்டு மக்களின் நலன் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். விரைவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும். பேரவைத்தலைவர் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். பேரவைத்தலைவர் பதவி பாஜகவுக்கு தரப்படுமா என்பது அதைக் கொடுக்கும்போது தெரியும்,” என்றார்.