惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
美团技术团队
V
Visual Studio Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
GbyAI
GbyAI
宝玉的分享
宝玉的分享
腾讯CDC
M
MIT News - Artificial intelligence
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
月光博客
月光博客
MyScale Blog
MyScale Blog
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
Recent Announcements
Recent Announcements
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அன்டே புடிமிரின் அற்புத கோலால் பனாமாவை வீழ்த்தியது குரோஷி...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

டொரண்டோ: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் எல் பிரிவு ஆட்டத்தில் பனாமாவை, குரோஷியா அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் குரோஷிய வீரர் அன்டே புடிமிர் அற்புதமான கோலை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

டொரண்டோவின் பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்தில் இந்த லீக் ஆட்டம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. குரோஷியா தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நிலையில் களமிறங்கியது. இது முக்கியமான ஆட்டம் என்பதால் குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். முதல் பாதியில் இரு அணியினரும் விட்டுக்கொடுக்காமல் அதிரடியாக விளையாடியபோதும் கோல் ஏதும் விழவில்லை.

முதல் பாதியின் 23-வது நிமிடத்தில் கோலடிக்கும் வாய்ப்பு பனாமா அணியினருக்குக் கிடைத்தது. கார்னர் பகுதியிலிருந்து கிடைத்த கிராஸ் மூலம் பந்தை தலையால் முட்டி கோலாக்க லூயிஸ் ரோட்ரிக்ஸ் முயன்றார். ஆனால் அந்த வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் லிவாகோவிச் தடுத்துவிட்டார். இதனால் பந்து கோல் கம்பத்தில் மோதி வெளியே ஓடியது.

2-வது பாதி தொடக்கத்தின்போது குரோஷிய வீரர் பீட்டர் முஸா களத்துக்கு வெளியே அனுப்பப்பட்டு அன்டே புடிமிர் கொண்டு வரப்பட்டார். அவரது வருகையால் குரோஷிய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 54-வது நிமிடத்தில் குரோஷிய அணி முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை கண்டது.

கோல் கம்பத்தின் வலதுபுறத்தில் இருந்து பந்தைக் கொண்டு வந்த குரோஷிய வீரர் ஜோசப் ஸ்டானிசிக் பாக்ஸ் பகுதிக்குள் அனுப்பினார். அதைச் சரியாக கவனித்து அன்டே புடிமிர் தூரத்திலிருந்தே பந்தை வலுவாக உதைத்தார்.

இந்த பந்தை கோல் வலையைத் துளைத்தது. இதைத் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை குரோஷிய வீரர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் குரோஷியா வெற்றி கண்டது. குரோஷியா இந்த வெற்றியின் மூலம் குரூப் எல் புள்ளிப் பட்டியலில் 3 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து, கானா ஆகிய அணிகள் தலா நான்கு புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுள்ள குரோஷியா அணி, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. முதல் 2 லீக் போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள பனாமா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

நாளைய ஆட்டங்கள்

குராசாவோ vs ஐவரி கோஸ்ட் - அதிகாலை 1.30

ஈக்வடார் vs ஜெர்மனி - அதிகாலை 1.30

துனிசியா vs நெதர்லாந்து - அதிகாலை 4.30

ஜப்பான் vs ஸ்வீடன் - காலை 4.30

துருக்கி vs அமெரிக்கா - காலை 7.30

பராகுவே vs ஆஸ்திரேலியா - காலை 7.30