惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
Engineering at Meta
Engineering at Meta
Stack Overflow Blog
Stack Overflow Blog
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
aimingoo的专栏
aimingoo的专栏
I
InfoQ
B
Blog
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
小众软件
小众软件
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
阮一峰的网络日志
阮一峰的网络日志
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
C
Check Point Blog
月光博客
月光博客
L
LangChain Blog
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” - திம...
2026-05-14 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: “இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். தமிழக நலன்களைப் பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது” என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “கட்சியின் தலைவர் என்ற முறையில், நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் ஆட்சியை அமைத்திருக்கிறது. நமது கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடுதான் ஆட்சி அமைந்திருக்கிறது.

நமக்கு பெரும்பான்மை கிடைக்வில்லையே தவிர, கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்திருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வந்தால் வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத்தான் அதிகம். இதுதான், அண்ணா மற்றும் கருணாநிதி நமக்கு கற்றுக் கொடுத்தப் பக்குவம்.

கட்சியின் தலைவர் என்ற முறையில், நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதுதான் நிதர்சனம். தோல்வியின்போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான். ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது. ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது.

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்றேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது. தமிழ்நாட்டு மக்களை இதில் இருந்து, எப்படி மீட்டெடுக்கப் போகிறோம் என்பதைப் பற்றி யோசியுங்கள். எங்கு கோளாறு நடந்தது? எங்க மெத்தனம் ஏற்பட்டிருக்கிறது? என்பதுதான் முக்கியம். இதை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கிறது. இவைகளைப் பரிசிலீத்து, ஆய்வு செய்ய வேண்டும்.

இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, நாம் மீண்டெழ முடியாத தோல்வி அல்ல. இனி கவனத்துடன், ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அதற்கு முன்னர் நாம் நம்மை, சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியாக, நமது அனைத்து மட்ட நிர்வாகிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். அதற்காக தலைமை சார்பில் கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போகிறேன். அவர்கள் தமிழ்நாடு முழுவதும், தொகுதி வாரியாக, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்தித்து பேசி அடுத்த 20 நாட்களுக்குள் எனக்கு அறிக்கை தருவார்கள்.

தொண்டர்கள் வெளிப்படையாக தகவல் கூற தனி ’வெப்சைட்’ நாளையே அறிவிக்கப்படும். தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு, வெப்சைட் மூலமாக கட்சியின் தொண்டர்கள் மற்றும் நம் மேல் அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லும் ஆலோசனைகளையும் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வர இருக்கேன். அந்த மாற்றம்தான், நம் கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்க போகிறது.

இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள் - பொதுக் கூட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டிய களமாக சமூக வலைத்தளங்கள் உருவெடுத்திருக்கிறது. இதை நான் கடந்த ஐந்தாண்டுகளில் பல முறை வலியுறுத்தியுள்ளேன். சட்டமன்றத்தில் முறையான - திறமையான - கட்சியாக நாம் செயல்பட வேண்டும். நமது அரசியல் எப்படி இருக்க வேண்டுமென்றால், கடந்த ஐந்தாண்டுகளில் நாம் உருவாக்கிய திட்டங்களை தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும்.

அனைத்து நிர்வாகிகளிடமும் நான் வலியுறுத்தி பேசுவது, நிர்வாகிகள் ஒற்றுமைதான். கோஷ்டி அரசியலை விட்டுட்டு, எல்லாரையும் அரவணைத்துப் போக வேண்டும். நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லையென்றால், வெற்றி என்பது சாத்தியம் இல்லை.

மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கவில்லை. அதற்காக மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம் என ஆகிவிடக் கூடாது. எல்லாருமே முக்கியம்தான். ஒருவேளை யாராவது, “என்னால செயல்பட முடியாது” என நினைத்தால், மனப்பூர்வமாக முன் வந்து விலகிக் கொள்ளலாம். இந்த தோல்வியை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். நாம் பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரர்கள். நமது இந்த தோல்வி தற்காலிகம்தான்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.