惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
G
Google Developers Blog
The GitHub Blog
The GitHub Blog
Jina AI
Jina AI
A
About on SuperTechFans
MongoDB | Blog
MongoDB | Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园_首页
Blog — PlanetScale
Blog — PlanetScale
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
B
Blog RSS Feed
大猫的无限游戏
大猫的无限游戏
美团技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
腾讯CDC
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
H
Help Net Security
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டு வழங்கியதில்...
2026-05-16 · via hindutamil

Updated on

1 min read

ராமேசுவரம்: ​ராமேசுவரம் ராம​நாதசு​வாமி கோயி​லில் பிர​சாத லட்​டு​கள் வழங்​கிய​தில் ரூ.3 கோடியே 40 லட்​சத்து 65 ஆயிரம் வரை மோசடி நடந்​துள்​ளது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து ஊழியர்​கள் 6 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

ராமேசுவரம் ராம​நாத​சுவாமி கோயிலுக்கு நாட்​டின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்​தும் தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​கின்​றனர்.

கடந்த 2023-24 நிதி​யாண்​டில் சட்​டப்​பேரவை மானியக் கோரிக்​கை​யில் பக்​தர்​களுக்கு தின​மும் இலவச லட்டு பிர​சாதம் வழங்​கத் திட்​டம் கொண்​டு​வரப்​பட்டு தற்​போது வரை ராமேசுவரம் கோயி​லில் நடை​முறை​யில் இருந்து வரு​கிறது.

இந்​நிலை​யில், இலவச லட்டு வழங்​கிய​தில் பெரும் மோசடி நடந்​துள்​ள​தாகப் புகார் எழுந்​தது. இது தொடர்​பாக கோயில் இணை ஆணை​யர் செல்​லத்​துரை தலை​மை​யில் கடந்த சில நாட்​களாக தீவிர விசா​ரணை நடந்​தது.

முறைகேடாக விற்பனை

இதில், கோயில் பிர​சாத தயாரிப்பு மற்​றும் விற்​பனைக்​குப் பொறுப்பு அதி​காரி​யாக இருந்த இளநிலை உதவி​யாளர் கே.பஞ்​சமூர்த்தி (பேஷ்​கார்) தினசரி பக்​தர்​களுக்கு இலவச​மாக வழங்​கப்​படும் லட்​டு​களின் எண்​ணிக்​கை​யைக் குறைத்து அதை முறை​கே​டாக விற்​பனை ஸ்டால்​களில் பக்​தர்​களிடம் விற்​பனை செய்​துள்​ளார்.

இதன் மூலம் சட்​ட​விரோத​மாக பணம் ஈட்​டியதும் தெரிய வந்​தது. மேலும், வெளி​யில் இருந்து தயாரிப்பு மூலப் பொருட்​களை மொத்​த​மாக கொள்​முதல் செய்து முறை​கே​டாக லட்டு தயாரித்து கவுன்ட்​டரில் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது.

2023 முதல் 2026 பிப்​ர​வரி வரையி​லான கால​கட்​டத்​தில் 11 லட்​சத்து 40 ஆயிரம் லட்​டு​கள் முறை​கே​டாக தயாரித்து கவுன்ட்​டரில் பக்​தர்​களிடம் பணத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால், ரூ.3 கோடியே 40 லட்​சத்து 65 ஆயிரம் மோசடி​யாக விற்​பனை நடந்​ததுள்​ள​தாக ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

இந்த மோசடி​யில் ஈடு​பட்ட ஊழியர்​களான இளநிலை உதவி​யாளர்​கள் (பேஷ்​கார்) பஞ்​சமூர்த்​தி, லாவண்​யா, அம்​பி​கா, டிக்​கெட் விற்​பனை​யாளர் செல்​வி, பணிப்​பெண் சிவனேஸ்​வரி, தூர்வை பணி​யாளர் விக்​ரம் உள்​ளிட்ட 6 பேர் தற்​காலிகப் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

பக்தர்கள் அதிர்ச்சி

மேலும், தற்​காலிகப் பணி​யாளர்​களான பிரபு ரவி, நித்​தி​யானந்​தம், பாலாஜி ஆகிய 3 பேரை பணி நீக்​கம் செய்து கோயில் இணை ஆணை​யர் செல்​லத்​துரை உத்​தர​விட்​டார். ராம​நாதசு​வாமி கோயி​லில் பிர​சாத லட்​டு​வில் கோடிக்​கணக்​கான ரூபாய் மோசடி நடந்​திருப்​பது பக்​தர்​கள்​ மத்​தி​யில்​ அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தி​யுள்​ளது.