惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
M
MIT News - Artificial intelligence
Engineering at Meta
Engineering at Meta
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 叶小钗
Jina AI
Jina AI
Last Week in AI
Last Week in AI
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
Stack Overflow Blog
Stack Overflow Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
博客园_首页
I
InfoQ
G
Google Developers Blog
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
H
Help Net Security
U
Unit 42
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலப் பணிகளை நிறுத்தி...
வெற்றி மயிலோன் · 2026-05-28 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் பின்னணியில் நடந்த ஊழல்கள், அதன் பின்னணியில் இருந்த திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்தி, ஊழல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கான மதிப்பில் 50% அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில், அதன் கட்டுமானப் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திருவான்மியூர் - உத்தண்டி இடையே உயர்மட்டப் பாலம் அமைக்க கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய போதே அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இந்தப் பணிக்கான ஒப்பந்தம் பெற்ற ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் பணிகளைத் தொடங்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பணிகள் தொடங்கப்படவில்லை.

தேர்தலுக்குப் பிறகு தூய்மையான நிர்வாகத்தை வழங்குவதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, முந்தைய திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்ததைப் போல இந்த ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைக்கும் என்று பா.ம.க. எதிர்பார்த்தது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ள கிழக்குக் கடற்கரை சாலையில் மண் ஆய்வு உள்ளிட்ட பணிகளை கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, இந்த உயர்மட்ட பாலம் கட்டுவதற்குத் தேவையான கர்டர்களை தயாரிப்பதற்காக சென்னை திருவிடந்தையில் வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகரால் நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு கொடையாக வழங்கப்பட்ட நூறு ஏக்கருக்கும் கூடுதலான நிலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு முந்தைய திமுக அரசு துணை போன நிலையில், அதை த.வெ.க. அரசு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப் பட்டதில் நடைபெற்ற ஊழல்களை ஒட்டுமொத்த தமிழ்நாடும் அறியும். உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.2100 கோடி செலவாகும் என கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது ரூ.700 கோடி குறைவாக ரூ.1400 கோடியில் அப்பணியை முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தது.

ஆனால், அதிக தொகையை குறிப்பிட்டிருந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த அளிக்க வேண்டும் என்பதற்காக திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை எந்தக் காரணமும் கூறாமல் திமுக அரசு நிராகரித்து விட்டது. பின்னர் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து திலிப் பில்ட்காப் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான பணி ஆணை வழங்கத் தடை விதித்தது. இத்தடையை நீக்க திமுக அரசு பலமுறை முயன்றும் கூட அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் வழக்குத் தொடர்ந்த நிறுவனத்தையே திமுக அரசு விலைக்கு வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதனால், உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வலிமையான வாதங்களை முன்வைக்காத நிலையில், ஒப்பந்தம் தொடர்பான அரசின் முடிவை எதிர்த்து திலிப் பில்ட்காப் 5 நாள்களில் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதன் மீது அடுத்த 10 நாள்களில் அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், முந்தைய ஆட்சியாளர்கள் சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திமுக அரசின் முடிவை மத்தியப் பிரதேச கட்டுமான நிறுவனம் எதிர்க்காமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பயனாகத் தான் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர்-உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் முறைப்படி வழங்கப்பட்டிருந்தால், அரசுக்கு ரூ.700 கோடி மிச்சமாகியிருந்திருக்கும். ஆனால், திமுக அரசின் ஊழல் வேட்கையால் ரூ.1400 கோடிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒப்பந்தம் ரூ.2100 கோடிக்கு வழங்கப்பட்டது. இதனால் மக்களின் வரிப்பணம் ரூ.700 கோடி வீணாகியுள்ளது. எனவே, திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த ஆணையிட வேண்டும்; அதுமட்டுமின்றி, இந்தப் பணிக்காக கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

மேலும் திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதன் பின்னணியில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள், அதன் பின்னணியில் இருந்த திமுக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’ எனத்தெரிவித்துள்ளார்.