惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
Blog — PlanetScale
Blog — PlanetScale
B
Blog RSS Feed
L
LangChain Blog
Jina AI
Jina AI
爱范儿
爱范儿
C
Check Point Blog
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
GbyAI
GbyAI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
V2EX
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
The GitHub Blog
The GitHub Blog
博客园 - Franky
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Google DeepMind News
Google DeepMind News
博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மகளிர் சக்தியின் பங்கேற்பு விமானப் படையை மேலும் வலுவாக்க...
மோகன் கணபதி · 2026-06-13 · via hindutamil

Updated on: 

ஹைதராபாத்: தேசிய பாதுகாப்பு அகாடமியின் முதல் தொகுதி (first batch) பெண்கள் உட்பட 231 விமானப் பயிற்சி மாணவர்கள் விமானப் படையில் இன்று அதிகாரிகளாகப் பதவியேற்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகளிர் சக்தியின் பங்கேற்பு விமானப் படையை மேலும் வலிமையானதாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின், துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு அகாடமியின் முதல் தொகுதி பெண்கள் உட்பட மொத்தம் 231 விமானப் பயிற்சி மாணவர்கள் (194 ஆண்கள், 37 பெண்கள்) விமானப்படையில் இன்று அதிகாரிகளாகப் பதவியேற்றனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 217-வது பயிற்சிப் பிரிவின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகளுக்கும், இந்திய கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கும், வியட்நாம் சோசலிச குடியரசைச் சேர்ந்த 2 அதிகாரிகளுக்கும் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “விமானப் படை தேசத்திற்கு கேடயமாகவும் வாளாகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. புதிய சவால்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். சூழ்நிலைக்கேற்ப தங்கள் நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.

நவீன போரில், எதிரியோ அல்லது பயன்படுத்தப்படும் ஆயுதமோ பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. ரேடார்கள், செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள், சென்சார்கள், ரோபோடிக்ஸ் போன்ற அமைப்புகள், போரிடும் தரப்பினரையோ அல்லது அவர்களின் இயந்திரங்களையோ கண்டறிவதை சாத்தியமற்றதாக்குகின்றன. நிச்சயமற்ற தன்மைகளையும் எதிர்பாராத சவால்களையும் எதிர்கொள்ள பயிற்சித் திட்டங்களும் பயிற்சிகளும் நமது வீரர்களை நன்கு தயார்படுத்தியுள்ளன.

நமது வீரர்கள், எதிர்காலப் போர் முறைகளையும் உத்திகளையும் புரிந்துகொண்டு, அவற்றுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு, அவற்றை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். பெண் அதிகாரிகளுக்குச் சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகளிர் சக்தியின் அதிகரித்து வரும் பங்களிப்பு விமானப்படையை மேலும் வலுப்படுத்தி, அதனை மேலும் வலிமையானதாக மாற்றும்” என்று தெரிவித்தார்.