惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
Y
Y Combinator Blog
N
Netflix TechBlog - Medium
M
MIT News - Artificial intelligence
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
C
Check Point Blog
The GitHub Blog
The GitHub Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
P
Proofpoint News Feed
Martin Fowler
Martin Fowler
大猫的无限游戏
大猫的无限游戏
GbyAI
GbyAI
博客园_首页
A
About on SuperTechFans
Blog — PlanetScale
Blog — PlanetScale
人人都是产品经理
人人都是产品经理
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏
T
The Blog of Author Tim Ferriss
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“எங்கள் தலைவா தலைமை ஏற்க வா...” - கோவையில் அண்ணாமலை ஆதரவா...
இரா.கார்த்திகேயன் · 2026-06-01 · via hindutamil

Updated on: 

கோவை: தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, "எங்கள் தலைவா தலைமை ஏற்க வா...!" என்ற அதிரடி வாசகங்களுடன் கோவையின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் வரும் 4-ம் தேதி வருகிறது. மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு அண்ணாமலையின் வரும் பிறந்தநாளை கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்களும், பாஜக தொண்டர்களும் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாஜக-வின் முன்னாள் கோவை மாநகர் தலைவரான உத்தம பாலாஜி ராமசாமி, தனது ‘உத்தம் பவுண்டேஷன்’ அமைப்பின் சார்பில், கோவை மாநகர் முழுவதும் அண்ணாமலையை வாழ்த்திப் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி உள்ளார்.

சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உள்ளிட்ட மாநகரின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. குறிப்பாக அவிநாசி சாலை ஜிடி நாயுடு மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள தூண்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில், “எங்கள் தலைவா தலைமை ஏற்க வா....!” என்ற கம்பீரமான வாசகங்கள் அச்சிடப்பட்டு, அண்ணாமலையின் பிரம்மாண்ட படங்களுடன் ஒட்டப்பட்டு உள்ளது.

“தமிழக அரசியலில் அண்ணாமலை மீண்டும் முழு வீச்சில் தனது தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்த வேண்டும்” என்ற தொண்டர்களின் நீண்ட நாள் ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த வாசகங்கள் அமைந்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டது முதலே கோவை மாவட்ட தொண்டர்களுக்கும் அவருக்குமான பிணைப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வரும் 4-ம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி கோவையில் ஒட்டப்பட்டுள்ள இந்த ‘தலைமை ஏற்க வா’ போஸ்டர்கள், சமூக வலைதளங்களிலும் அண்ணாமலையின் ஆதரவாளர்களால் ‘டிரெண்ட்’ ஆக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள் சிலர் கூறும்போது, “சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் என பலரது வாக்குகளும், தேர்தலில் தவெக வெற்றி பெற கைகொடுத்தது.

தமிழகத் தேர்தலில் பாஜக நிலைமை கவலைக்கிடமானது. அண்ணாமலைக்கு பிறகு பாஜக தமிழ்நாட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதாக பலரும் வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது இளைஞர்களை கருத்தியல் ரீதியாக ஈர்க்க அண்ணாமலை போன்ற தலைவர்களின் தலைமை நிச்சயம் தமிழக பாஜகவுக்கு தேவை.

தமிழ்நாட்டு அரசியலில் இனி அரசியல் கட்சிகள் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கக்கூடும். பாஜக இனிவரும் தேர்தல்களில் பெருவாரியான வாக்குகளை பெற நினைத்தால், தமிழக பாஜக தாமதம் இன்றி அதிரடி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அண்ணாமலை ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது,” என்றனர்.