惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
The GitHub Blog
The GitHub Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
Last Week in AI
Last Week in AI
V
V2EX
腾讯CDC
F
Fortinet All Blogs
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மக்கள் நலத்திட்டங்களை கூட சரியாக செயல்படுத்த தெரியவில்லை:...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: மக்கள் நலத்திட்டங்களை கூட தவெக அரசுக்கு சரியாக செயல்படுத்த தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்ணை தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் பின்தொடர்ந்து சென்ற உங்கள் கட்சி நிர்வாகி ஒருவர், அப்பெண்ணின் சாதியை சுட்டிக்காட்டி இழிவாக பேசியதுடன், அத்துமீறி தாக்கியதாக வெளியாகியுள்ள காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், கட்சிப் பெயரைப் பயன்படுத்தி, சாதி ரீதியாக வசைபாடுவதிலும், பெண்களிடம் அத்துமீறுவதிலும் திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு முதல்வரே. உங்கள் கட்சிக்காரர்களைக் கூட கட்டுக்குள் வைக்க முடியாத நீங்கள், தமிழகத்தில் உலாவும் கொடும் குற்றவாளிகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்?

‘அண்ணன், மாமன்’ என பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் அடைமொழிகளை உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்வது, சினிமாக்காரர்களை சந்தித்து சிரித்து மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என வெற்று விளம்பரங்களில் மூழ்கிக் கிடக்காமல், மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகள் மண்டிக் கிடக்கும் உங்கள் கட்சியை முதலில் தூர்வாரி சுத்தப்படுத்துங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 பள்ளி மாணவர்கள் உணவின்றித் தவித்து, அவர்களுக்குப் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியாகிய செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றிப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட சரியாகச் செயல்படுத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாக விஜய் அரசு செயல்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான விளக்கம் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப உணவின் அளவையும் அதிகரிக்கத் திட்டமிடாதது அரசு நிர்வாகத்தின் தவறே ஆகும்.

எனவே, தமிழக முதல்வர் விஜய், விளாத்திகுளம் பள்ளிச் சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இது போன்ற அவலநிலை ஏற்படக் கூடாது என விஜய் தலைமையிலான அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'’ என குறிப்பிட்டுள்ளார்.