惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
量子位
腾讯CDC
A
About on SuperTechFans
小众软件
小众软件
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
T
Tailwind CSS Blog
V
V2EX
B
Blog RSS Feed
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
GbyAI
GbyAI
Recent Announcements
Recent Announcements
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 叶小钗
罗磊的独立博客
宝玉的分享
宝玉的分享
WordPress大学
WordPress大学
大猫的无限游戏
大猫的无限游戏
IT之家
IT之家
V
Visual Studio Blog
D
DataBreaches.Net
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சனாதனம் ஒழிக என்று உதயநிதி கூறியது சரி!” - காங். எம்.பி....
2026-05-14 · via hindutamil

Updated on

1 min read

திருச்சி: சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான மனநிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது உரையில் 'சனாதனம் ஒழிக' என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் எம்.பி. எம்.கிறிஸ்டோபர் திலக் கூறினார்.

திருச்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமான எம். கிறிஸ்டோபர் திலக், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. திமுக- அதிமுகவை மையப்படுத்தியே குதிரை பேரம் நடந்துள்ளதாக சி.வி. சண்முகத்தின் கருத்தில் இருந்து தெரிகிறது. அரசியலில் குழப்பமான சூழல் நிலவும்போது எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது நடக்கத்தான் செய்யும்.

தவெக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் அமைச்சரவையில் நிச்சயம் இடம் வழங்கும். சில இழுபறிகள் இருக்கத்தான் செய்யும். அவை விரைவில் சரியாகும். காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இண்டியா கூட்டணி என்பது பாஜக எதிர்ப்பை மையப்படுத்தியதுதான். அந்த வகையில் பாஜகவை எதிர்க்கும் திமுக, இண்டியா கூட்டணியில்தான் உள்ளது.

தேர்தல் முடிந்த இந்த நேரத்தில் சில நெருடல்கள் இருக்கின்றன. வரும் காலத்தில் அவை சரியாகும். சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான மனநிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது உரையில் ‘சனாதனம் ஒழிக’ என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

கேரளாவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும். மாநில அரசை ஆதரிக்கும் கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறாவிட்டாலும் கூட, அக்கட்சியினரை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்து, அதில் கலந்தாலோசனை செய்து, அதன் அடிப்படையில் தமிழக அரசை வழிநடத்த தவெக முன்வர வேண்டும்,” என்றார்.