惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
L
LangChain Blog
B
Blog
博客园 - 三生石上(FineUI控件)
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
U
Unit 42
Last Week in AI
Last Week in AI
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
Microsoft Security Blog
Microsoft Security Blog
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿
小众软件
小众软件
I
InfoQ
G
Google Developers Blog
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் 4 மாதத்தில் ரூ.1 கோடி ஈட்டிய ...
2026-04-27 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: ஸ்​டார்ட் அப் நிறு​வனம் மூலம் 4 மாதத்​தில் ரூ.1 கோடி ஈட்​டிய 24 வயது இளைஞர் குறித்த செய்​தி​கள் இணையத்தில் வைரலாகி​யுள்​ளன. அவரது அடுத்த இலக்கு ரூ.10 கோடி என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

உ.பி. மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த உஜ்வல் நர்​கோட்ரா என்ற 24 வயது இளைஞர், கடந்த சில மாதங்​களுக்கு முன்பு லிங்க் ​பிளீஸ் என்ற ஸ்டார்ட்​-அப் நிறு​வனத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். இதைத் தொடங்​கிய 4 மாதங்​களி​லேயே ரூ.1 கோடியை அவர் ஈட்டியுள்ளார். இது தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் அவர் ஒரு வீடியோவை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இதற்கு முன்பு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்​தேன். பின்​னர் அதை விட்​டு​விட்டு இந்த ஸ்டார்ட் அப் நிறு​வனத்​தைத் தொடங்​கினேன். என்னுடைய வளர்ச்சிக்​குப் பின்​னால் 3 கட்ட செயல் திட்​டம் உள்ளது.

படைப்பாளி​கள் (கன்டென்ட் கிரியேட்டர்ஸ்) உயர்​ தர​மான உள்​ளடக்​கத்தை உருவாக்கினாலும், அதிக அளவி​லான நேரடிச் செய்​தி​களை (டி.எம்) நிர்வகிப்​ப​தில் சிரமப்படுகின்​றனர். அவர்​களுக்​குத் தேவை​யான சேவை​களை வழங்​கு​வது​தான் எங்​களது நிறு​வனத்​தின் பணியாகும்.

படைப்​பாளி​கள் சிறந்த உள்​ளடக்​கத்தை வெளி​யிட்​டாலும், அதைத் தொடர்ந்து வரும் நேரடிச் செய்​தி​கள் மற்​றும் அதிக அளவி​லான கருத்​துகளை கட்​டுப்​படுத்த முடி​யாமல் சிரமப்படுகின்​றனர். அந்த இடைவெளி​தான் அவர்​களின் வளர்ச்சிக்​குத் தடை​யாக உள்​ளது. அதைத் தீர்க்​கவே இந்த ஸ்டார்ட் அப் நிறு​வனத்​தைத் தொடங்கினோம்.

தொடக்கத்தில் எங்களது தளத்தின் பயன்பாட்டை கட்டணமின்றி படைப்பாளிகளுக்கு வழங்கினோம். எங்களது நோக்கம் அதுவாகவே இருந்தது. அது எங்களை மிக எளிதாக எல்லோரையும் அணுக உதவியது. குறைவான செலவில் ஆற்றல்மிக்க ஆட்டோமேஷன் இன்ஜினை வடிவமைத்தோம். அந்த முதல் பதிப்பை வி1 அறிமுகம் செய்தோம்.

அதன் மூலம் படைப்பாளிகளிடம் இருந்து எங்கள் தளத்தின் பயன்பாடு சார்ந்து பல்வேறு பின்னூட்டங்களை பெற்றோம். இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களது தளத்தின் சேவையை ஆரம்ப நிலையிலேயே படைப்பாளிகள் பலர் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொண்டோம்.

இதன்​ மூலம் ரூ.1 கோடியை 4 மாதங்​களில் ஈட்​டி​யுள்​ளேன். எனது அடுத்த இலக்கு ரூ.10 கோடி​யாகும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்​.

“நிதி ஆதார உதவி ஏதுமின்றி நான்கு மாதத்தில் ரூ.1 கோடியை ஈட்டியுள்ளோம். இதன் பின்னணியில் குழு எதுவும் இல்லை. எங்களது நோக்கத்துக்கு செயல் வடிவம் மட்டுமே கொடுத்தோம். படைப்பாளிகள் எதிர்கொண்ட சிக்கலுக்கு விரைந்து தீர்வு கண்டோம். இப்போது அதற்கான பலனை வெகுமதியாக சந்தை எங்களுக்கு வழங்கியுள்ளது. இது ஆரம்பம் மட்டும்தான்” என தான் பகிர்ந்த வீடியோவுக்கு கேப்ஷன் உஜ்வல் கொடுத்துள்ளார்.

இணையவாசிகள் ரியாக்‌ஷன் என்ன? - உஜ்வலின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதே நேரத்தில் இதற்கு கலவையான கமெண்ட்கள் வந்துள்ளன. அவரது இந்த ஸ்டார்ட் அப் முயற்சியை பலரும் பாராட்டி உள்ளனர். சிலரோ அவரது ரூ.10 கோடி டார்கெட்டை அடைவதற்கான யோசனையை முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.