惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
G
Google Developers Blog
L
LangChain Blog
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
WordPress大学
WordPress大学
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - Franky
V
Visual Studio Blog
小众软件
小众软件
月光博客
月光博客
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
The Blog of Author Tim Ferriss
有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
博客园 - 【当耐特】
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MongoDB | Blog
MongoDB | Blog
Jina AI
Jina AI
美团技术团队
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருச்செந்தூர் கோயிலில் அபிஷேக சிறப்பு தரிசனம் உள்ளிட்ட க...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கட்டண சேவை​கள் மற்​றும் அபிஷேக சிறப்பு தரிசன கட்​ட​ணத்தை உயர்த்த, கோயில் நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இதுகுறித்​து, ஜூலை 7 வரை ஆட்​சேபனை​களை தெரிவிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​களும், விடு​முறை நாட்​களில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​களும், விழாக்​காலங்​களில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​களும் வந்து செல்​கின்​றனர். இந்​நிலை​யில், தரிசன மற்​றும் அபிஷேக கட்​ட​ணத்தை உயர்த்​தி, கோயில் நிர்​வாகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறி​விப்பு வரு​மாறு: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில், தற்​போதுள்ள கட்டண சேவை​கள் மற்​றும் அபிஷேக சிறப்பு தரிசன கட்​ட​ணத்தை உயர்ந்த உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, தங்​கத்​தேர் இழுக்க தற்​போதைய கட்​ட​ணம் ரூ.2,500 என்​பதை ரூ.5 ஆயிர​மாக​வும், நிரந்தர வைப்பு நிதி ரூ.50 ஆயிரம் என்​பதை ரூ.1 லட்​ச​மாக​வும், சண்​மு​கார்ச்​சனைக்கு ரூ.5 ஆயிரம் என்​பதை ரூ.30 ஆயிர​மாக​வும், நிரந்தர வைப்பு நிதி கட்​ட​ணம் ரூ.72 ஆயிரம் என்​பதை ரூ.4.32 லட்​ச​மாக​வும், மூல​வர் அபிஷேகத்​துக்கு ரூ.1,500 என்​பதை ரூ.10 ஆயிர​மாக​வும், ஒன்​பது கால பூஜைக்கு ரூ.1,500 என்​பதை ரூ.6,500 ஆகவும், நிரந்தர வைப்பு நிதி கட்​ட​ணம் ரூ.20 ஆயிரம் என்​பதை ரூ.90 ஆயிர​மாக​வும் உயர்த்த உத்​தேசிக்​கப்​பட்​டுள்ளது.

மேலும், சந்​தனக்​காப்​புக்கு தற்​போதைய கட்​ட​ணம் ரூ.100 என்​பதை ரூ.1,000 ஆகவும், அபிஷேக சிறப்பு தரிசன கட்​ட​ணம் சாதாரண நாட்​களில் ரூ.500 என்​பதை ரூ.2,500 ஆகவும், திரு​விழா மற்​றம் விசேஷ நாட்​களில் ரூ.2 ஆயிரம் என்​பதை ரூ.2,500 ஆகவும் உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கட்டண உயர்வு குறித்து ஆட்​சேபனை​கள் இருந்​தால், எழுத்து மூல​மாக ஜூலை 7-ம் தேதி மாலை 5.45 மணிக்​குள், கோயில் இணை ஆணை​யரிடம் வழங்​கலாம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பக்​தர்​கள் அதிர்ச்சி: பக்​தர்​கள் மத்​தி​யில் இந்த கட்டண உயர்வு கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவர்​கள் கூறுகை​யில், ‘திருச்​செந்​தூர் கோயிலுக்கு பக்​தர்​கள் அளிக்​கும் உண்​டியல் காணிக்​கை, மாதந்​தோறும் கோடிக்​கணக்​கில் வரு​கிறது. எனவே, கட்​ட​ணத்தை உயர்த்​தும் முடிவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். கடவுள் முன்பு அனை​வரும் சமம். ஏழை, பணக்காரன் என்ற பாகு​பாடு கூடாது. இதனை நீதி​மன்​றங்​கள் பலமுறை சுட்​டிக்​காட்​டி​யுள்​ளன. கட்டண உயர்​வால் சாதாரண பக்​தர்​கள் பாதிக்​கப்​படு​வார்​கள்.

கட்டண உயர்வை ஏற்​றுக் கொள்ள முடி​யாது என்​றனர். மேலும், ஏற்​கெனவே அதிக பணம் கொடுத்​து​தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்​டிய நிலை இருக்​கிறது. கட்​ட​ணத்தை பல மடங்கு உயர்த்​தி​னால் சாமானிய மக்​கள் சுவாமி கும்​பிடமுடி​யாத நிலை ஏற்​படும். கட்டண உயர்வை கைவிட வேண்​டும். வசூல் நோக்​கத்​தில் இது​போன்ற முடிவை எடுப்​பது ஏற்​புடையதல்ல.

அனைத்துக் கோயில்​களி​லும் பக்​தர்​கள் இறைவனை எளி​தில் தரிசிக்க தகுந்த ஏற்​பாடு​களை செய்​திட வேண்​டும். கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்கு தேவை​யான அடிப்​படை வசதி​களை செய்து கொடுக்க வேண்​டும் என கருத்து தெவித்​தனர்.