惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
M
MIT News - Artificial intelligence
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Engineering at Meta
Engineering at Meta
Martin Fowler
Martin Fowler
H
Help Net Security
B
Blog
Y
Y Combinator Blog
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
I
InfoQ
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
Docker
博客园 - 【当耐特】
J
Java Code Geeks
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.400 கோடி ஊழல்...
2026-05-15 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: “மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது. இதில் நிறைய விசாரிக்கப்படாமல் உள்ளது. இது அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்தார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தவெக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முதல்வர் விஜய் செய்து வருகிறார். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது முதல், பெண்களை பாதுகாக்கும் சிங்கப்பெண் திட்டம் வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்கள் என்ன எதிர்பார்த்து எங்களுக்கு வாக்களித்தார்களோ அது அனைத்தும் நிறைவேற்றப்படும்.

போதைப்பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் கடும் நடவடிக்கைகளை முடுக்கிவிடுவார். பழைய திட்டங்கள் என்னென்ன உள்ளதோ அவையெல்லாம் தொடரும் என சொன்னதன் அடிப்படையில், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தவித தடைகளும் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்.

மதுரை மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் வசதி அடிப்படை தேவையாக உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம். வரப்போகும் பட்ஜெட்டில் நிதி ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்து மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்.

நாங்கள் 120 பேரின் ஆதரவை ஆளுநரிடம் முதலில் அளித்தோம். அதன் பின்னர் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து எங்களுக்கு பலரும் ஆதரவளித்தனர். இதனால் 144 எம்எல்ஏக்கள் எங்கள் அரசுக்கு ஆதரவளித்தனர். மக்கள் அளித்த ஆதரவை யாரும் எதுவும் செய்ய முடியாது.

மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது. இதில் நிறைய விசாரிக்கப்படாமல் உள்ளது. இது அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். ஊழல் இல்லாமல் தடுக்கும் முன்னெடுப்பை எங்கள் முதல்வர் எடுத்துள்ளார். எனவே ஊழலை தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

நீட் தேர்வு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு தேர்வைக் கூட அவர்களால் ஒழுங்காக நடத்த முடியவில்லை. இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.

நீட் தேர்வு மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, ஏழை எளிய மக்களுக்கு எட்டாத தேர்வாக உள்ளது. நீட் தேர்வு முறை வேண்டாம் என்பதே எங்கள் நோக்கம். நீட் தேர்வால் எந்தப் பயனும் இல்லை. நீட்டில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் மேனேஜ்மெண்ட் கோட்டா மூலம் சீட் வாங்குகிறார்கள். தகுதியானவர்களை தேர்வு செய்யவே நீட் என்றார்கள், அது நடக்கவில்லை.

டாஸ்மாக் நேரம் குறைக்கப்படுமா என்பதை முதல்வர்தான் முடிவு செய்வார்.

அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அது குறித்து பேச எங்களுக்கு உரிமை இல்லை. திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமியின் மகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து முயற்சி செய்தனர் என்று முன்னாள் அமைச்சர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இதற்கான முயற்சி 100 சதவீதம் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

அதிமுகவில் இருந்து சில முக்கிய தலைவர்கள் எங்கள் தலைவரை சந்திக்க விரும்பினர். அவர்களை முதல்வர் சந்தித்ததில் தவறு இல்லை. எடப்பாடி பழனிசாமியை இப்போது சந்தித்தால், அது சரியாக இருக்காது என்பதால், அந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யவில்லை” என்றார் அமைச்சர் நிர்மல் குமார்.