惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
A
About on SuperTechFans
G
Google Developers Blog
B
Blog RSS Feed
F
Fortinet All Blogs
WordPress大学
WordPress大学
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
Jina AI
Jina AI
IT之家
IT之家
P
Proofpoint News Feed
美团技术团队
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
有赞技术团队
有赞技术团队
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு 2 விமானங்கள...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

பூகம்பத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள வெனிசுலாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின்கீழ், 9 மருத்துவ அதிகாரிகள் உட்பட 41 பேர் கொண்ட ராணுவக் குழுவை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.படம்: பிடிஐ

Updated on: 

புதுடெல்லி / கராகஸ்: வெனிசுலா பூகம்​பத்​தில் இது​வரை 589 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 49,500-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை. பூகம்​பத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு உதவ ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் 2 விமானங்​களில் 35 டன் நிவாரணப் பொருட்​களை வெனிசுலா​வுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

தென்​அமெரிக்க நாடான வெனிசுலா​வின் யாராகுய் மாகாணத்​தின் சான்​பெலிப், யுமரே நகரங்​களை மைய​மாகக் கொண்டு நேற்று முன்​தினம் சக்தி ​வாய்ந்த 2 பூகம்​பங்​கள் ஏற்​பட்​டன. இவை ரிக்​டர் அலகில் 7.2 மற்​றும் 7.5 ஆகப் பதி​வானது.

இதன்​காரண​மாக யாராகுய், லா குய்ரா உட்பட 7 மாகாணங்​கள் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டுள்​ளன. தலைநகர் கராகஸில் நூற்​றுக்​கணக்​கான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் வெனிசுலா ராணுவம் உட்பட அனைத்து பாது​காப்பு படைப் பிரிவு​களும் மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு உள்​ளன. அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​கள், தென்​அமெரிக்க நாடு​களின் ராணுவ வீரர்​களும் மீட்​புப் பணி​யில் இணைந்​துள்​ளனர்.

இது​வரை 589 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்டுள்​ளன. 4,300-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யங்​களு​டன் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறுகின்​றனர். பூகம்​பம் நேரிட்ட பகு​தி​களில் காணா​மல் போனவர்​கள் குறித்த விவரங்​களை பதிவு செய்ய வெனிசுலா அரசு சார்​பில் சிறப்பு இணை​யதளம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இந்த இணை​யத்​தில் 49,500-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்லை என்று பதி​விடப்​பட்டு உள்​ளது. அவர்​கள் கட்​டிட இடி​பாடு​களில் சிக்​கி​யிருக்​கலாம் என்று மீட்​புப் படை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

வெனிசுலாவின் மொத்த மக்கள் தொகை 2.86 கோடி. இதில் சுமார் 70 லட்சம் பேர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கராகஸில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்​தி​யா​வின் ‘ஆபரேஷன் அமிஸ்​டாட்’ - இந்நிலையில், பூகம்​பத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு உதவுவதற்​காக இந்​தி​யா​ சார்​பில் ‘ஆபரேஷன் அமிஸ்​டாட்’ தொடங்​கப்​பட்டு உள்​ளது. (‘அமிஸ்டாட்’ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘நட்பு’). இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், ‘இந்​திய விமானப் படை​யின் சி17 ரக சரக்கு விமானங்​கள் மூலம் மருந்​துகள், மருத்​துவ உபகரணங்​கள் உட்பட 35 டன் நிவாரணப் பொருட்​கள் வெனிசுலா​வுக்கு அனுப்​பப்​பட்டுள்​ளன’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இந்திய ராணுவத்தை சேர்ந்த 9 மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உட்பட 41 மருத்துவப் பணியாளர்களும் வெனிசுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சைகளை அளிப்பார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​க்கின் ஸ்டார்​லிங்க் நிறு​வனம் சார்​பில் வெனிசுலா​வில் இலவச​மாக இணைய இணைப்பு வழங்​கப்​பட்டுள்​ளது. இதன்​மூலம் அந்த நாட்​டின் தகவல் தொடர்பு சீரடைந்​திருக்​கிறது. ஆனால் மின் விநி​யோகம், குடிநீர் விநி​யோகம், சமையல் காஸ் விநி​யோகம் முழு​மை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது.

பூகம்ப பாதிப்​பு​கள் குறித்து மீட்​புப் படை வீரர்​கள் கூறிய​தாவது: அடுத்​தடுத்து ஏற்​பட்ட 2 பூகம்​பங்​களால் லா குய்​ரா​வின் மலைப் பகு​தி​களில் கட்​டப்​பட்​டிருந்த அனைத்து அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களும் நொறுங்கி சரிந்​துள்​ளன. தலைநகர் கராகஸிலும் நூற்​றுக்​கணக்​கான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் இடிந்​துள்​ளன.

வெனிசுலா பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்​கும் மேற்பட்ட வீரர்​கள் மீட்​புப் பணி​களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா உட்பட 25 நாடு​களைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்டு வீரர்​களும் மீட்​புப் பணி​களில் உதவி வரு​கின்​றனர். இடி​பாடு​களில் சிக்​கி​யுள்​ளோரை மோப்ப நாய்​களின் உதவி​யுடன் அதிதீ​விர​மாக தேடி வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​கள்​ ​கூறினர்​.

‘பீஷ்ம் க்யூப்’ அவசரகால மருத்துவமனைகள்: நிவாரணப் பொருட்களுடன் 2 ‘பீஷ்ம் க்யூப்’ அவசரகால நடமாடும் மருத்துவமனைகளையும் வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. ‘BHISHM' (இந்திய சுகாதார முன்னெடுப்பு - நட்பு உதவி) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பீஷ்ம் க்யூபில் 1,000 மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய மருந்துகள் இருக்கும். இதன்மூலம் போர் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு நாளில் 200 பேர் வரை சிகிச்சை அளிக்க முடியும். ஒரு நாளில் 20 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். ஒரு பீஷ்ம் கியூபில் உள்ள கூடாரம் மூலம் 12 நிமிடங்களில் தற்காலிக மருத்துவமனையை உருவாக்க முடியும்.

இதில் உள்ள உபகரணங்கள் மூலம் மின்சாரம், ஆக்ஸிஜனையும் உடனடியாக உற்பத்தி செய்யலாம். 180 மொழிகளில் நோயாளிகளிடம் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் பிரத்யேக செயலியும் இதில் உள்ளது. உக்ரைன், மாலத்தீவு, ஜமைக்கா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ‘பீஷ்ம் க்யூப்’ அவசரகால தற்காலிக மருத்துவமனைகள் தற்போது மனிதாபிமான அடிப்படையில் வெனிசுலாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.