惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
爱范儿
爱范儿
The Cloudflare Blog
Y
Y Combinator Blog
B
Blog RSS Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 叶小钗
G
Google Developers Blog
J
Java Code Geeks
P
Proofpoint News Feed
美团技术团队
Engineering at Meta
Engineering at Meta
腾讯CDC
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园_首页
WordPress大学
WordPress大学
博客园 - 聂微东
雷峰网
雷峰网
有赞技术团队
有赞技术团队
L
LangChain Blog
N
Netflix TechBlog - Medium
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு: 11 நாட்களில்...
செய்திப்பிரிவு · 2026-05-27 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: ஆட்​டோ, கார்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் சிஎன்ஜி எரி​வாயு விலை நேற்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்​தப்​பட்​டுள்​ளது. கடந்த 11 நாட்​களில் இதன் விலை நான்​காவது முறை​யாக உயர்ந்துள்​ள​தால் பொது​மக்​கள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

அமெரிக்கா - ஈரான் இடையி​லான போர் காரண​மாக ஈரான் எல்லையை ஒட்​டி​யுள்ள ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டு, வளைகுடா நாடு​களில் இருந்து கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி முடங்கி​யுள்​ளது. இதனால் சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலை உயர்ந்து வரு​கிறது. இதனால் இந்​திய எண்​ணெய் நிறுவனங்​களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு​செய்ய கடந்த 15ம் தேதி பெட்​ரோல், டீசல் விலை லிட்​டருக்கு ரூ.3 உயர்த்​தப்​பட்​டது. அதன் பிறகு பெட்​ரோல், டீசல் விலை 4 முறை உயர்த்​தப்​பட்​டது.

இது​போல் ஆட்டோ மற்​றும் கார்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் சிஎன்ஜி எரி​வாயு விலை கடந்த 15-ம் தேதி டெல்லி தலைநகரப் பிராந்​தி​யத்​தில் கிலோவுக்கு ரூ.2 உயர்த்​தப்​பட்​டது. இதையடுத்து 22ம் தேதி 1 ரூபா​யும் 24-ம் தேதி 1 ரூபா​யும் உயர்த்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில் சிஎன்ஜி எரி​வாயு விலை நேற்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்​தப்​பட்​டுள்​ளது. நேற்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை மாற்​றத்​தின்​படி, டெல்​லி​யில் தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.83.09 ஆக உள்​ளது.

கடந்த 11 நாட்​களில் சிஎன்ஜி விலை உயர்த்​தப்​படு​வது இது 4-வது முறை​யாகும். இதன் மூலம் 11 நாட்​களில் மொத்​தம் ரூ.7 விலை உயர்ந்​துள்​ளது. இருப்​பினும், வீடு​களுக்கு விநி​யோகிக்​கப்​படும் குழாய் வழி இயற்கை எரி​வாயு அல்​லது வீட்டு உபயோக எல்​பிஜி சிலிண்​டர்​களின் விலை​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை.

எனினும் பெட்​ரோல், டீசல் மற்​றும் சிஎன்ஜி எரி​வாயு விலை தொடர்ந்து உயர்ந்து வரு​வது தினசரி வாக​னங்​களை பயன்படுத்து​வோரை அதிர்ச்சி அடையச் செய்​துள்​ளது. மேலும் இந்த விலை உயர்வு அத்​தி​யா​வசி​யப் பொருட்​களின் விலை உயர்வுக்​கும் வழி​வகுப்​ப​தால்​ பொது​மக்​களை கவலை அடையச்​ செய்​துள்​ளது.