惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
爱范儿
爱范儿
Vercel News
Vercel News
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Martin Fowler
Martin Fowler
博客园 - 司徒正美
大猫的无限游戏
大猫的无限游戏
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
Tailwind CSS Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
F
Fortinet All Blogs
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky
T
The Blog of Author Tim Ferriss
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Google DeepMind News
Google DeepMind News
H
Help Net Security
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒரு மன்னர் தனது சிம்மாசனத்தை திரும்பப் பெற வருகிறார்: சூர...
2026-04-27 · via hindutamil

Updated on

2 min read

ஒரு மன்னர் தனது சிம்மாசனத்தை திரும்பப் பெற வருகிறார் என்று சூர்யா குறித்து ’கருப்பு’ இசை வெளியீட்டு விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசியுள்ளார்.

‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் த்ரிஷா தவிர்த்து இதர படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் பாடல்களை நேரலையில் சாய் அபயங்கர் தனது குழுவினருடன் பாடினார். இந்த விழாவில் பின்பு படக்குழுவினர் அனைவருமே ‘கருப்பு’ படம் குறித்து பேசினார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “2 ஆண்டுகளுக்கு முன்பு கருப்புசாமி கோவிலுக்கு வந்திருந்தேன். அப்போதே, ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டேன். இப்படம் முழுவதும் கருப்புசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் பயணித்துள்ளார். அதுவே, இப்போது மிகப்பெரிய பலம் என நம்புகிறேன்.

இப்படத்துக்காக சாய் அபயங்கரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தபோது, அவருக்கு இது முதல் படம். ஆனால், இப்போது பல படங்களுக்கு ஒப்பந்தமாகிவிட்டார். சில சமயங்களில் அவருடைய பாடல் வெளியாகும்போது, மக்கள் அவரை திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், அப்பாடல் வெளியான 15 நிமிடங்களில் அப்பாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். த்ரிஷாவால் இன்று வர இயலவில்லை.

ஆனால், அவருக்கு மனமார்ந்த நன்றி. த்ரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது சாதாரண விஷயமல்ல. சமீபத்தில் அவர் நடித்த படங்களிலேயே, இதில் அவருக்கு சிறந்த கதாபாத்திரமாக அமையும். ஒரு பெரிய படத்தையும், நடிகரையும் எப்படிக் கையாள்வது என்பது குறித்த புரிதல் எனக்கு இல்லை. நான் அது குறித்து யோசித்தபோது, ஒரு மனிதர் என் கையைப் பிடித்துக் கொண்டு என்னை வழிநடத்திச் சென்றார்.

அவர் தான் ஜி.கே. விஷ்ணு. ஒரு நாயகனை எப்படி சிறப்பாகவும், மாஸாகவும் திரையில் காட்டுவது என்பது அவருக்கு தெரியும். ’வலிமை’ படத்தின் அப்டேட்டிற்குப் பிறகு, ‘கருப்பு’ படத்தின் அப்டேட்டை தான் ரசிகர்கள் அதிகம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள், தாக்குதல்களையும் எதிர்கொண்டவர் எஸ்.ஆர்.பிரபு தான்.

ரசிகர்கள் அவரைத் தான் குறிவைக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகள் பயணம் மிகவும் சவாலாக இருந்தது. ஆனால், எனக்கு தயாரிப்பாளர்கள் துணையாக இருந்தனர். பல எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்தன. அவர்கள் இப்படத்தில் பல கோடிகளை முதலீடு செய்து, தேவையான அனைத்தையும் வழங்கினார்கள். நானும் இப்படத்துக்காக 100% அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். தயாரிப்பாளர்களுடன் பல முறை சண்டையிட்டுள்ளேன். ஆனால், இப்போது நாங்கள் இணக்கமான சூழலில் தான் இருக்கிறோம். ‘கருப்பு’ படத்தின் மூலம் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்திருக்கிறது.

’கருப்பு’ படத்தின் கதைக்காக 32 மாதங்கள் செலவழித்துள்ளேன். இவை அனைத்துமே சூர்யா சார் என்ற ஒரு மனிதரால் மட்டுமே சாத்தியமானது. அவரிடம் 45 நிமிடங்கள் மட்டுமே கதை சொன்னேன். அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். சூர்யா சார் உன் படத்துல நடிக்கிறாரா என்று என் மனைவியே ஆச்சரியப்பட்டுப் போனார். திரையில் சூர்யா சாருடைய நடிப்பை முழுமையாக ரசித்து, கலகப்பாக, மாஸ் ஹீரோவாக காட்சிப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டேன். வழக்கமாக நாயகனை மையப்படுத்திய படங்களில், நாயகன் அனைத்து காட்சிகளிலும் இடம்பெறுவார்.

ஆனால், ‘கருப்பு’ படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள், கதையோட்டங்கள் உள்ளன. ஆனால், அவர் அதற்கு முழுமனதுடன் ஒப்புக் கொண்டு நடித்துள்ளார். திரையில் அவருடைய கண்கள் மட்டுமே பல விஷயங்களைப் பேசுகின்றன. இப்படத்தின் முதல் பாதி முழுக்க கமர்ஷியலாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இறுதியாக ஒரு மன்னர் தனது சிம்மாசனத்தை திரும்பப் பெற வருகிறார்” என்று பேசியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.