惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
量子位
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 司徒正美
博客园 - Franky
Google DeepMind News
Google DeepMind News
Recent Announcements
Recent Announcements
B
Blog RSS Feed
C
Check Point Blog
The Cloudflare Blog
M
MIT News - Artificial intelligence
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
F
Fortinet All Blogs
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗
V
Visual Studio Blog
V
V2EX
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 聂微东
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
போர்ச்சுகலுக்கு ஷாக் கொடுத்த காங்கோ: ரொனால்டோ ஏமாற்றம் | ...
வேட்டையன் · 2026-06-18 · via hindutamil

Updated on: 

நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்றில் காங்கோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் பதிவு செய்யவில்லை.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் 48 அணிகளும் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடி உள்ளன. பிரிவுக்கு 4 அணிகள் வீதம் மொத்தம் 12 பிரிவுகளாக குரூப் சுற்று நடைபெறுகிறது.

போர்ச்சுகல் vs காங்கோ: அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் காங்கோ அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்த படியே ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ஜோவா நெவாஸ், போர்ச்சுகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து கோல் கணக்கை போர்ச்சுகல் கூட்டும் என கருதப்பட்டது.

இந்த ஆட்டத்தில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடினார். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்ட நேரத்தில் சுமார் 75 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போர்ச்சுகல். அதன் மூலம் சுமார் 769 பாஸ்களை களத்தில் மேற்கொண்டது. இதில் மூன்று ஷாட்களை மட்டுமே ஆன் டார்கெட்டில் போர்ச்சுகல் அணி வைத்தது.

மறுபக்கம் காங்கோவின் தடுப்பாட்டம் அற்புதமாக இருந்தது. அதோடு கிடைக்கும் வாய்ப்பில் அட்டாக்கிங் கேமும் ஆடி அசத்தியது. முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் டைமில் காங்கோ அணி கோல் பதிவு செய்தது. காங்கோ அணிக்காக விஸ்ஸா அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். அதன் பின்னர் இரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

ரொனால்டோ: இந்த ஆட்டத்தில் பந்தை மொத்தம் 25 முறை டச் செய்திருந்தார் ரொனால்டோ. இதில் 19 பாஸ்களை போட்டிருந்தார். பந்தை ஆன் டார்கெட்டை நோக்கி ஒரு ஷாட் கூட அவர் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை.

41 வயதான அவருக்கு இது ஆறாவது உலகக் கோப்பை தொடராகும். மற்ற அணிகளில் உள்ள நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் ஆகியோர் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கோல் பதிவு செய்த நிலையில் ரொனால்டோ தனது கோல் கணக்கை தொடங்காமல் உள்ளார்.