惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Security Blog
Microsoft Security Blog
Vercel News
Vercel News
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
U
Unit 42
IT之家
IT之家
D
DataBreaches.Net
Y
Y Combinator Blog
B
Blog RSS Feed
F
Fortinet All Blogs
GbyAI
GbyAI
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
Google DeepMind News
Google DeepMind News
美团技术团队
L
LangChain Blog
N
Netflix TechBlog - Medium
G
Google Developers Blog
Recent Announcements
Recent Announcements
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
7 வயதில் கோடிங்... 16 வயதில் ரூ.100 கோடி AI நிறுவனம்... -...
க.ஆனந்தன் · 2026-06-22 · via hindutamil

Updated on: 

கடந்த 2022-ம் ஆண்டு, தொழில்நுட்ப உலகம் ஒரு புதிய புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம். உலகமே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நோக்கித் திரும்பியிருந்த வேளையில், 16 வயது சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர்தான் பிராஞ்சலி அவஸ்தி.

இன்று அவருக்கு 19 வயதாகிறது. தனது 16 வயதிலேயே, சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான ஒரு வெற்றிகரமான ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) உலகையே வியக்க வைத்துள்ளார். 7 வயதில் கோடிங் கற்கத் தொடங்கி, இன்று ஒரு அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் அவரது பயணம், இளம் சாதனையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாகும்.

யார் இந்த பிராஞ்சலி அவஸ்தி? - இந்​தி​யா​வில் பிறந்த பிராஞ்​சலி, சிறு வயதிலேயே தனது குடும்​பத்​துடன் அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணத்​துக்​குக் குடிபெயர்ந்​தார். ஒரு பொறி​யாள​ரான அவரது தந்​தையே அவருக்கு முதல் வழி​காட்​டி​யாக இருந்​தார். தந்​தை​யின் தூண்​டு​தலால், பிராஞ்​சலி தனது 7-வது வயதிலேயே கோடிங் (Coding) கற்​கத் தொடங்​கி​னார். நாளடை​வில், அவருக்​குச் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மற்​றும் மெஷின் லேர்​னிங் (Machine Learning) துறை​களில் அலாதி ஆர்​வம் ஏற்​பட்​டது.

சமூக ஊடக​மான எக்ஸ் தளத்​தில் வெளி​யான தகவலின்​படி, பிராஞ்​சலிக்கு 13 வயது இருக்​கும்​போதே, தனது பள்​ளிப் படிப்​புக்கு நடுவே ஒரு முக்​கிய ஆராய்ச்சி ஆய்​வகத்​தில் இன்​டர்ன்​ஷிப் (Research Internship) செய்​யும் வாய்ப்​பைப் பெற்​றார். அங்கு அவர் மெஷின் லேர்​னிங் திட்​டங்​களில் நேரடி​யாகப் பணி​யாற்​றி​னார். அந்த அனுபவத்​தின் போது​தான், ஆராய்ச்​சி​யாளர்​கள் இணை​யத்​தில் உள்ள கொட்​டிக்​கிடக்​கும் கோடிக்​கணக்​கான தரவு​களி​லிருந்து தங்​களுக்​குத் தேவை​யான சரி​யான தகவல்​களைத் தேடி எடுப்​ப​தற்கு எவ்​வளவு சிரமப்​படு​கிறார்​கள் என்​பதை அவர் நேரில் கண்​டறிந்​தார்.

16 வயதில் `டெல்வ்.ஏஐ' தொடக்கம்: ஆ​ராய்ச்​சி​யாளர்​களின் இந்​தத் துயரத்​துக்கு ஒரு முற்​றுப்​புள்ளி வைக்க நினைத்த பிராஞ்​சலி, ஜனவரி 2022-ல் `Delv.AI' என்ற தளத்​தைத் தொடங்​கி​னார். ஆராய்ச்​சி​யாளர்​கள் இணை​யத்​திலிருந்து தங்​களுக்​குத் தேவை​யான பயனுள்ள தகவல்​களை மிக எளி​தாக​வும், விரை​வாக​ தேட​வும், ஒழுங்​கமைக்​க​வும், சுருக்கி எடுக்​க​வும் உதவும் வகை​யில் இந்த தளம் வடிவ​மைக்​கப்​பட்​டது.

அவரது இந்த ஸ்டார்ட்​-அப் யோசனை மிக விரை​வில் அங்​கீ​காரம் பெற்​றது. மியாமியை தளமாகக் கொண்ட ஒரு முக்​கிய ஸ்டார்ட்​-அப் அக்​சிளரேட்​டர் திட்​டத்​தில் இணை​யும் வாய்ப்பு அவருக்​குக் கிடைத்​தது. இந்த வாய்ப்பு பிராஞ்​சலிக்​குச் சிறந்த வழி​காட்​டிகளை​யும், பெரிய முதலீட்​டாளர்​களை​யும் அடை​யாளம் காட்​டியது. இதன் விளை​வாக, On Deck மற்​றும் Village Global போன்ற முன்​னணி முதலீட்​டாளர்​களிட​மிருந்து சுமார் 4,50,000 டாலர் (சு​மார் ரூ.3.7 கோடி) நிதி​யுத​வியைப் பெற்​றார்.

ரூ.100 கோடி மதிப்​புள்ள நிறு​வனம்: அதன் பிறகு நிறு​வனத்​தின் வளர்ச்சி அசுர வேகத்​தில் இருந்​தது. மிகக் குறுகிய காலத்​தில் இந்​தத் தளம் பெற்ற பேராதரவு மற்​றும் வளர்ச்​சி​யின் காரண​மாக, பிராஞ்​சலி​யின் 'Delv.AI' நிறு​வனத்​தின் மதிப்பு தற்​போது சுமார் ரூ.100 கோடியை எட்​டி​யுள்​ளது. இதன் மூலம், மிக இளம் வயதிலேயே இவ்​வளவு பெரிய வெற்​றிகர​மான ஏஐ நிறு​வனத்தை உரு​வாக்​கிய இளம் நிறு​வனர்​களில் ஒரு​வ​ராக பிராஞ்​சலி அவஸ்தி உரு​வெடுத்​துள்​ளார்.

இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த தொழில்​முனை​வோ​ரான பிராஞ்​சலி அவஸ்​தி, அமெரிக்​கா​வின் புகழ்​பெற்ற ஜார்​ஜியா இன்​ஸ்​டிடியூட் ஆஃப் டெக்​னாலஜி​யில் கணினி அறி​வியல் பயின்​றார். மெஷின் லேர்​னிங் மற்​றும் கோடிங் மீது தனக்​கிருந்த தீராத ஆர்​வத்​தை, தனது 16 வயதிலேயே ஒரு பிரம்​மாண்​ட​மான வணிக வெற்​றி​யாக மாற்​றிக் காட்​டி​யுள்​ளார். வயது என்​பது வெறும் எண்​தான், திறமை​யும் சரி​யான இலக்​கும் இருந்​தால் எந்த வயதி​லும் உலகை மாற்​றும் சாதனையைப் படைக்​கலாம் என்​ப​தற்​கு பிராஞ்​சலி​யின்​ கதையே ஆகச்​சிறந்​த ​சான்​று!