惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
雷峰网
雷峰网
博客园 - 聂微东
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园_首页
博客园 - 司徒正美
博客园 - 叶小钗
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
博客园 - 【当耐特】
宝玉的分享
宝玉的分享
有赞技术团队
有赞技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
Tailwind CSS Blog
V
V2EX
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழப்பு
செய்திப்பிரிவு · 2026-05-07 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: மேற்கு ஆப்​பிரிக்​கக் கடற்​கரை​யில் சுமார் 150 பயணி​களு​டன் நிறுத்​தப்​பட்​டுள்ள சொகுசுக் கப்​பல் ஒன்​றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்​பட்​டுள்​ளது. இதன் பாதிப்​பால் 3 பயணி​கள் உயி​ரிழந்​தனர்.

மேலும் பலர் உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இந்த வைரஸ் மனிதர்​களிடையே பரவக்​கூடிய தன்​மை​யைக் கொண்​டிருக்​கலாம் என்ற தகவல் சர்​வ​தேச அளவில் அச்​சத்தை அதி​கரித்​துள்​ளது. இந்த ஹன்டா வைரஸ் எலிகள் மற்​றும் பெருச்சாளி​கள் மூலம் மனிதர்​களுக்​குப் பரவு​கிறது.

அவற்​றின் எச்​சில், சிறுநீர் அல்​லது கழி​வு​களு​டன் நேரடித் தொடர்பு ஏற்​படும்​போது பாதிப்பு உண்​டாகிறது. ஆனால், இந்த வைரஸால் எலிகளுக்​குப் பாதிப்பு ஏற்​படு​வ​தில்​லை. எலிக் கழி​வு​கள் படிந்த இடங்​களைச் சுத்​தம் செய்​யும்​போது, அந்த நுண்துகள்கள் காற்​றில் கலந்​து, அவற்றை சுவாசிப்​ப​தன் மூலம் பெரும்​பாலானோர் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

பொது​வாக ஹன்டா வைரஸ் மனிதர்​களிடையே பரவுவது மிக அரிது. இருப்​பினும், தென் அமெரிக்​கா​வில் காணப்​படும் ‘ஆண்டீஸ்’ வகை வைரஸ் மட்​டும் நெருங்​கிய தொடர்​பு​கள் மூலம் மனிதர்​களிடையே பரவ வாய்ப்​புள்​ளது. தற்​போது கப்​பலில் ஏற்பட்​டுள்ள பாதிப்​பும் இவ்​வகை​யாக இருக்​கலாம் என சந்தேகிக்கப்​படு​கிறது. ஆனால், உலகின் வெவ்​வேறு பகு​தி​களில் இவ்​வைரஸ் வெவ்​வேறு வித​மாகச் செயல்​படு​கிறது.

சில வகைகள் நுரை​யீரலைப் பாதிக்​கும்; சில வகைகள் சிறுநீரகம் மற்​றும் ரத்த நாளங்​களைப் பாதிப்​பவை​யாக உள்​ளன. காய்ச்​சல், தசை வலி மற்​றும் வயிற்று உபாதைகள் ஹன்டா வைரஸ் பாதிப்பின் ஆரம்​பகட்ட அறிகுறிகளாகும். இவை ஒரு வாரம் முதல் எட்டு வாரங்​களுக்​குள் வெளிப்​படும். ஆரம்​பத்​தில் இது சாதா​ரணக் காய்ச்​சல் போன்றே தோன்​றும்.

அமெரிக்​கக் கண்​டங்​களில் பரவும் ஹன்டா வைரஸ், நுரை​யீரலில் நீர் கோர்த்​துக் கொள்​ளும் நிலையை உரு​வாக்​கி, உயிருக்​கும் உலை வைக்​கும். உலக சுகா​தார அமைப்​பின் கூற்​றுப்​படி, நுரையீரல் பாதிப்பு ஏற்​படும்​போது இறப்பு விகிதம் 50% வரை இருக்​கலாம் என்று தெரிவிக்​கப்​படு​கிறது. ஆனால், ஐரோப்பா மற்றும் ஆசி​யா​வில் இதன் பாதிப்பு 1 முதல் 15% ஆக மட்​டுமே உள்ளது. ஹன்டா வைரஸைக் குணப்​படுத்​தத் தடுப்​பூசிகளோ அல்​லது நேரடி மருந்​துகளோ இல்​லை.

காய்ச்​சலைக் குறைத்​தல், உடலில் நீர்ச்​சத்​தைப் பராமரித்​தல் மற்றும் செயற்கை சுவாசக் கருவி​களின் மூலமே சிகிச்சை அளிக்கப்​படு​கிறது. எலிகளு​டன் தொடர்பு கொள்​வதைத் தவிர்ப்​பதே மிகச் சிறந்த பாது​காப்​பாகும். சுற்​றுப்​புறத்​தைத் தூய்மையாக வைத்​திருப்​ப​தன் மூலம் ஆபத்​தைக் குறைக்​கலாம்.

கப்​பலில் நிலைமை கவலைக்​கிட​மாக இருந்​தா​லும், நிலப்​பகுதியில் உள்ள பொது​மக்​களுக்கு உடனடி ஆபத்து ஏது​மில்லை என்று சுகா​தார நிபுணர்​கள் தெரி​வித்​துள்​ளனர். ‘எம்​.​வி. ஹோண்டியஸ்’ கப்​பலில் உள்ள நிலைமை மிக​வும் கவலைக்குரியதாக இருப்​ப​தாகப் பயணி ஜேக் ரோஸ்​மேரின் தெரி​வித்​துள்​ளார்.