惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 司徒正美
M
MIT News - Artificial intelligence
博客园_首页
IT之家
IT之家
L
LangChain Blog
D
DataBreaches.Net
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Google DeepMind News
Google DeepMind News
Blog — PlanetScale
Blog — PlanetScale
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
量子位
G
Google Developers Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 【当耐特】
博客园 - 叶小钗
S
SegmentFault 最新的问题
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog
T
Tailwind CSS Blog
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வணிக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மே 7-ல் ஆர்ப்பாட்டம்...
2026-05-03 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: வணிக சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் 29 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்படுவதை கண்டித்து வரும் மே 7 அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஐ(எம் - எல்) மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய அரசு வணிக சிலிண்டர் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது. கடந்த 120 நாட்களில் 1,518 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று 1,739 ரூபாயாக இருந்த ஒரு சிலிண்டரின் விலை தற்போது 3,257 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இதேபோன்று புலம்பெயர் தொழிலாளர்களும், தெருவோர வியாபாரிகளும், சிறு குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படும் வகையில் அவர்கள் பயன்படுத்தும் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 261 உயர்த்தியுள்ளார்கள்.

இதற்கு சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி. விலை உயர்வு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசாங்கம் கடந்த நான்காண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் மூன்றில் ஒரு பகுதி குறைந்த போதும் அதன் பலனை சாதாரண மக்களுக்கு வழங்க முன்வரவில்லை. கடந்த நான்காண்டுகளாக பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலைகளை ஒருபோதும் குறைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது வணிக சமையல் எரிவாயு விலையை உயர்த்தியிருப்பது அப்பட்டமான கொள்ளையாகும். பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி, வரிக்குறைப்பு, ஊக்கத் திட்டங்கள் என்று வாரி வழங்கும் பாஜக அரசாங்கம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது சுமை ஏற்றுவதற்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல் சூறையாடுகிறது என்பதற்கு உதாரணமாக இது இருக்கிறது.

மேலும், 2026 ஏப்ரல் 24-ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள ரயில்வே துறையின் சுற்றறிக்கையின் படி ரயில்வேயில் மொத்தமுள்ள பணியிடங்களில் ஆண்டுக்கு 2 சதவிகிதத்தை குறைக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 28 ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் இப்படி குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 29 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை குறைப்பதற்கு இந்த சுற்றறிக்கை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக ரயில்வேயில் 1906 பணியிடங்களை இந்த ஆண்டில் குறைக்க வேண்டும் என்று வழிகாட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்கிற முழக்கத்தோடு மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வழங்கிக் கொண்டிருக்கும் ரயில்வேயில் அனுமதிக்கப்பட்ட 14 லட்சம் பணியிடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளதோடு மேலும் அதை குறைப்பதற்கு திட்டமிடுகிறது.

ஒன்றிய அரசுப் பணிகளில் 10 லட்சம் பணியிடங்களை காலியாக வைத்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது இருந்த 13 லட்சம் நிரந்தர பணியிடங்களில் தற்போது 9 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இருக்கும் வேலைகளையும் பறிக்கும் முயற்சி இளைஞர்களின் வாழ்வில் மண் அள்ளிப்போடும் செயலாகும்.

எனவே, அநியாயமான, நியாயமற்ற வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், ரயில்வேயில் உத்தேசிக்கப்பட்டுள்ள 29 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிட வெட்டுக்களை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் மே 7, 2026 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் நாசகரமான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டுமெனவும், இந்த கண்டன இயக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.