惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
G
Google Developers Blog
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
H
Help Net Security
WordPress大学
WordPress大学
博客园_首页
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
罗磊的独立博客
I
InfoQ
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
J
Java Code Geeks
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி: 5-வது முறைய...
செ. ஞானபிரகாஷ் · 2026-05-04 · via hindutamil

Updated on: 

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ ஆட்சி அமைகிறது. ஐந்தாவது முறையாக ரங்கசாமி முதல்வராகிறார். இக்கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி (லஜக) தலா ஒரு இடம் என 18 இடங்களை கைப்பற்றினர்.

ஐந்து இடங்களை வென்ற திமுக எதிர்க்கட்சியாகிறது. தவெக மற்றும் கூட்டணி கட்சிகள் 3 இடங்களை வென்றுள்ளன. புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நிலவியது.

என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையே ஏற்பட்ட மோதலால் இக்கூட்டணியே குழப்பத்துடன் தேர்தலை சந்தித்தது. திமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அத்துடன் இடதுசாரிகள் தனித்து போட்டியிட்டனர். அவர்களும் பிரச்சாரம் செய்யவில்லை. விசிகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் காங்கிரஸ், இடதுசாரிகள் போட்டியிட்டனர். கடும் குழப்பத்துடன் இண்டியா கூட்டணி இத்தேர்தலை புதுச்சேரியில் சந்தித்தது.

ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 4) நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்தது.

புதுச்சேரியில் 4 பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை பனி காலை தொடங்கியது முதல் என்டிஏ கூட்டணியே முன்னிலை பெற்றது. என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 என 18 தொகுதிகளில் இக்கூட்டணி வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. என்டிஏ தலைவரான ரங்கசாமி மீண்டும் 5 வது முறையாக முதல்வராகிறார்.

திமுக 5 தொகுதிகள் வென்று எதிர்க்கட்சியாகிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. தவெக 2 இடங்களிலும், தவெக கூட்டணிக்கட்சி நேயன் மக்கள் கழகம் 1 தொகுதியிலும் வென்றுள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் வென்றுள்ளனர். அதில் இருவர் என்டிஏ தரப்புக்கு நெருக்கமானவர்கள். அதனால் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது.

முதல்வர் ரங்கசாமி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வென்றுள்ளார். அதனால் தட்டாஞ்சாவடி தொகுதியை அவர் ராஜிநாமா செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்.ஆர்.காங்கிரஸை விட சரிந்த கட்சிகள்: கடந்த முறை 10 இடங்களை வென்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் இம்முறை 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் கடந்த முறை ஆறு இடங்களில் வென்ற பாஜக 4 இடங்களிலும், ஆறு இடங்களில் வென்ற திமுக 5 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. இரு இடங்களில் கடந்த முறை வென்ற காங்கிரஸ் இன்னும் சறுக்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.

கடந்த முறை அனைத்து இடங்களிலும் தோற்ற அதிமுக இம்முறை ஒரு இடத்தில் வென்றுள்ளது. புதிதாக போட்டியிட்ட தவெக இரு இடங்களிலும், லஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரங்கசாமி கூறியதுஎன்ன?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் வெற்றி சான்றிதழ்களை பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“விஜய் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. புதுச்சேரியில் இரு தொகுதிகளில் தவெக வென்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில சிறப்பாக என்டிஏ அரசு ஆட்சி புரிந்தது. பல நலத் திட்டங்கள் செய்தோம். முதியோர், விதவைகளுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் செய்ததை தேர்தல் மூலம் அங்கீகரித்துள்ளனர். அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். நன்றியோடு வாக்களித்துள்ளனர்.

என்டிஏ அரசு அமைய தேவையான இடங்கள் தந்துள்ளனர். வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. பிரதமர் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். மாநில அந்தஸ்தை தர தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. விஜய் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தமிழக மக்களுக்கு சிறந்த முறையில் விஜய் பணியாற்ற வேண்டும். எம்பி வைத்திலிங்கம் நான்காவது இடம் தள்ளப்பட்டதை கேட்கிறீர்கள். அவரை எம்பியாக்கி மக்கள் அனுப்பிய நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வந்திருக்கக் கூடாது. அதற்கு தகுந்த பாடம் தந்துள்ளனர்.

நிச்சயமாக இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும். பதவியேற்பு தேதி பின்னர் தெரிவிக்கப்படும். ஆட்சி அமைப்பது தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.