惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
Engineering at Meta
Engineering at Meta
腾讯CDC
宝玉的分享
宝玉的分享
H
Help Net Security
I
InfoQ
博客园 - Franky
The GitHub Blog
The GitHub Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Microsoft Security Blog
Microsoft Security Blog
M
MIT News - Artificial intelligence
博客园_首页
美团技术团队
Recent Announcements
Recent Announcements
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
The Cloudflare Blog
博客园 - 司徒正美
Vercel News
Vercel News
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீ...
2026-05-23 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கர்நாடகாவில் வசிக்கும் குருபா சமுதாய மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (பிசி) சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், பிசி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கர்நாடக மின் வாரிய துறையின் இளநிலை பொறியாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவரது பிசி சாதிச் சான்றிதழ் ஏற்கப்படவில்லை.

இளநிலை பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞரின் தாய், தந்தை இருவரும் அரசுப் பணியில் உள்ளனர். இருவரும் ஆண்டுக்கு ரூ.19.48 லட்சம் ஊதியம் பெறுகின்றனர். எனவே கிரிமிலேயர் வரம்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞர் இடஒதுக்கீடு அடிப்படையில் இளநிலை பொறியாளர் பணியில் சேர முடியாது என்று கர்நாடக மின் வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக இளைஞரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “அரசுப் பணியில் குரூப் ஏ, குரூப் பி பிரிவில் உள்ள அதிகாரிகளின் பிள்ளைகள் மட்டுமே இடஒதுக்கீடு கோர முடியாது. இதர பிரிவு அரசு ஊழியர்கள் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற முடியும்’’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சம்பந்தப்பட்ட இளைஞரின் தந்தை அடிப்படை ஊதியமாக ரூ.53,900-ம், தாய் ரூ.52,650-ம் பெறுகின்றனர். அவர்களின் இதர படிகளையும் சேர்த்தால் இருவரும் நிறைவான ஊதியத்தைப் பெறுகின்றனர். சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒருவேளை பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் அவர்களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்?

சம்பந்தப்பட்ட இளைஞரின் பெற்றோர் நல்ல அரசு பணியில் உள்ளனர். அதிக வருவாயை ஈட்டுகின்றனர். அவர்கள் இடஒதுக்கீடு கோருவது நியாயமற்றது. இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அவர்கள் பதில் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.