惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
A
About on SuperTechFans
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
Recent Announcements
Recent Announcements
云风的 BLOG
云风的 BLOG
B
Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
U
Unit 42
Martin Fowler
Martin Fowler
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 叶小钗
Vercel News
Vercel News
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
腾讯CDC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
爱范儿
爱范儿
V
V2EX
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி நீடிப்பது ஏன்? - ஒரு தெளிவுப...
போத்தி ராஜ்.க · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது, இந்தியச் சந்தையில் எதிரொலித்தாலும், தாக்கம் ஓரளவே இருக்கிறது. இன்னும் சவரன் விலை ஒரு லட்சத்துக்கு கீழாக இறங்கவில்லை என்பது எளிய குடும்பத்தினருக்கு ஏக்கத்துக்குரியதாகவே இருந்து வருகிறது.

7 மாதங்களில் முதல் முறை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து, ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) 4,000 டாலருக்கும் கீழ் சரிந்தது. கடந்த நவம்பர் மாதத்துக்குப் பின் தங்கம் விலை இந்த அளவு குறைந்தது இதுதான் முதல் முறையாகும். அதேபோல வெள்ளி விலையும் வெகுவாக குறைந்திருக்கிறது.

சென்னையில் இன்று (ஜூன் 25) சில்லரை வர்த்தகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120-க்கு விற்பனை ஆகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,000-க்கும் மேலாக குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் கணக்கில் மதிப்பிடப்படுகிறது. ஒரு அவுன்ஸ் என்பது இந்தியாவின் எடை மதிப்பில் 28.34 கிராமாகும். தோரயமாக 3.50 சவரன் ஆகும்.

28% விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வந்தது. புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 டாலருக்கும் கீழ் சரிந்து, 3,999.33 டாலராக இருந்தது.

கடந்த ஜனவரி 29-ம் தேதி வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,594.82 டாலராக உயர்ந்தது. அதிலில் இருந்து தற்போது 28 சதவீதம் தங்கம் விலை சரிந்து கடந்த 7 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தங்கம் விலை ஜூன் மாதம் வரையிலான 2-வது காலாண்டில், 12 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 2016 டிசம்பர் மாதத்துக்குப் பின் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.

அதேபோல வெள்ளியின் விலையும் 17.6% வரை குறைந்துள்ளது, இது 2022 ஜூன் மாதத்துக்குப் பின் ஏற்பட்ட பெரிய விலை வீழ்ச்சியாகும். கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை தங்கத்தின் விலை 10 சதவீதம் அதிகரித்தது. 2025-ம் ஆண்டில் 65 சதவீதமும், 2024-ம் ஆண்டில் 28 சதவீதமும் உயர்ந்தது.

பாதாளத்தில் பாய்ந்த வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் கடந்த இரு வாரங்களாகவே குறைந்து வந்தது. இந்த வாரத்தில் மட்டும் வெள்ளி விலை 14% சரிந்து கடந்த 7 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்தது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 56.99 டாலராக சரிந்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் உச்சகட்டமாக ஒரு அவுன்ஸ் வெள்ளி 121.78 டாலராக இருந்த நிலையில், அதில் பாதியளவு குறைந்து, 56.99 டாலராக வீழ்ச்சியடைந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்த உச்சத்தில் இருந்து தற்போது 53% விலை வீழ்ச்சியை வெள்ளி சந்தித்தது.

அதேசமயம், வெள்ளியின் விலை 2026 ஜனவரி முதல் மார்ச் வரை 28 சதவீதம் அதிகரித்தது. 2025-ல் 148 சதவீதமும், 2024-ல் 22% மட்டுமே விலை உயர்ந்தது. கடந்த ஜனவரியில் ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கிலோ ரூ.2.14 லட்சமாக சரிந்திருக்கிறது. குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரியும்போது, அதன் எதிரொலியாக வெள்ளியும் குறையும். பெரும்பாலான நேரங்களில் ஒரு உலோகத்தின் விலை மற்றொரு உலோகத்தின் விலையை பாதிக்கும். சில நேரங்களில் மட்டுமே இந்த தாக்கம் இருக்காது. ஆதலால், வெள்ளியின் இந்த பாதாள வீழ்ச்சிக்கு தங்கத்தின் விலை சரிவும் காரணங்களில் ஒன்று என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். வெள்ளி கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் வரை சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது.

தங்கம் விலை உயர்ந்ததும் சரிவதும் ஏன்?

கடந்த ஜனவரி மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவாக தங்கம் ஒரு அவுன்ஸ் 5,600 டாலராக இருந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரஷ்யா, ஈரான், நாடுகள் மீது விதித்த வரிகள், சர்வதேச பதற்றம், ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றம், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தது ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதினர். இதனால் டாலர் மீதான முதலீட்டைக் குறைத்து, தங்கத்தின் மீது முதலீடு செய்தும், தங்கத்தை அதிகளவு வாங்கியதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எகிறியது.

ஜனவரியில் இருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. அதிலும் ஈரான - அமெரிக்கா இடையிலான போர் பிப்ரவரி மாதம் தொடங்கியபின் தங்கத்தின் மீதான முதலீட்டு மோகம் அதிகரித்தது தொடர்ந்து உயர்ந்து வந்தது.

ஆனால், ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியானது முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. சர்வதேச சூழலில் இருந்த பதற்ற நிலை மாறியது, மத்திய கிழக்கில் இருந்த போர் மேகம் விலகியதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் கடந்த வாரம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என்றபோதிலும், எதிர்காலத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் சூழல் இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் குறைக்கும் வகையில் எடுக்கப்படும் கட்டுப்பாடுகளால் டாலர் மதிப்பு வலிமை பெறத் தொடங்கியது. எதிர்காலத்தில் ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பால் தங்கத்தின் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் டாலர் பக்கமும், அமெரிக்கச் சந்தை பக்கமும் திரும்பினர். அமெரிக்க கடன் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியதால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறையத் தொடங்கியது.

மேலும், ஈரான் - அமெரிக்கா போரின்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் பங்குகள் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தினர். ஆனால், ஹார்முஸ் நீரிணை தற்போது திறக்கப்பட்டு, சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கியதால், கச்சா எண்ணெய் விலையும் சீரடைந்துள்ளது. இதுவும் தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெள்ளியை சாய்த்த சீனா?

எஸ்எம்சி குலோபல் செக்யூரிட்டின் நிறுவனத்தின் தலைமை சந்தை ஆராய்ச்சியாளர் வந்தனா பாரதி கூறுகையில் “வெள்ளி விலை சரிவுக்கு பொருளாதாரத்தில் ‘டோமினோ விளைவு’ என்று சொல்லப்படுகிறது. அதாவது, சங்கிலித் தொடர் போன்று, ஒரு சம்பவத்தின் தாக்கம் மற்றொன்றில் ஏற்பட்டு அடுத்தடுத்து பாதிக்கப்படுவதாகும். அதுதான் சர்வதேச சந்தையில் நடந்துள்ளது. மிகப் பெரிய அளவில் வெள்ளி விற்பனைக்கு வரும்போது விலை குறையத்தானே செய்யும்.

இந்த விலை குறைவுக்கு பின்னணியில் சீனா இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், சீனாவில் உள்ள வங்கிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கடுமையான இடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் வெள்ளி மீதான ஊக வணிகம் செய்வது குறைந்தது. வெள்ளியை அதிகமாக வாங்கும் நாடு என்ற நிலையில் இருந்து சீனா ஏற்றுமதியாளராக மாறியது. சந்தையில் வெள்ளியின் சப்ளையை அதிகரித்து, தேவையின் அளவை குறைத்து, விலை சரிவுக்கு காரணமாகியது” எனத் தெரிவித்தார்