惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
Google DeepMind News
Google DeepMind News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
P
Proofpoint News Feed
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
aimingoo的专栏
aimingoo的专栏
月光博客
月光博客
量子位
A
About on SuperTechFans
Engineering at Meta
Engineering at Meta
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
博客园 - Franky
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
人人都是产品经理
人人都是产品经理
D
DataBreaches.Net
博客园_首页
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சீரிய வெற்றி யாருக்கு?
2026-04-20 · via hindutamil

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்.

Updated on

3 min read

தூத்துக்குடி: வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதி. தொகுதியின் நடுவே பாய்ந்து ஓடும் தாமிரபரணி நதியால், இத்தொகுதி முழுவதும் விவசாய பூமியாக விளங்குகிறது. பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலிலில் ஈடுபட்டுள்ளனர்.

நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நவ கைலாயங்கள், நவதிருப்பதி கோயில்கள் என வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களையும் கொண்டது இத்தொகுதி. ஏ.பி.சி.வீரபாகு, சி.பா. ஆதித்தனார் போன்ற முக்கிய தலைவர்கள் வென்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெரும்பான்மையாக நாடார் சமுதாய மக்கள் சதவீதம், தேவர் 15 சதவீதம், தேவேந்திரகுல வேளாளர் 14 சதவீதம் பேர் உள்ளனர்.

1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி ஒரு இடைத்தேர்தல் உள்பட இதுவரை 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 8 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

2021-ம் ஆண்டு தேர்தல்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் 76,843 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் 59,471 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுப்பையா பாண்டியன் 12,706 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் ஏரல் ரமேஷ் 10,203 வாக்குகளையும் பெற்றனர்.

மக்களிடம் ஆதரவு திரட்டும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன்.

மக்களிடம் ஆதரவு திரட்டும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன்.

15 பேர் போட்டி

2026 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக இருக்கிறார். இவருக்கு எதிராக தொகுதியில் ஆங்காங்கே சில அதிருப்திகள் நிலவுகின்றன. மேலும் சொந்த கட்சிக்கு உள்ளேயே இவருக்கு எதிர்ப்பு இருக்கிறது.

தொகுதி மக்கள் மட்டுமின்றி கட்சிகாரர்களே இவரை எளிதாக தொடர்பு கொள்ள முடியாது என்பது தான் இவர் மீதான பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் உள்ளது.

அதேநேரத்தில் தொகுதியை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு தனது பொறியியல் கல்லூரியில் ஆண்டு தோறும் இலவசமாக படிக்க வாய்ப்பு, இலவச அகடாமி மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி போன்றவற்றை இவரது முக்கிய பணிகளாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளர் வி.ஜி.சரவணன்.

கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளர் வி.ஜி.சரவணன்.

மேலும், கூட்டணி பலம் இவருக்கு வலுவாக உள்ளது. தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகள் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும், அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் கூடுதல் மாணவர்களுக்கு இலவச கல்விக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதிகளை அளித்தும் இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக வேட்பாளர்

ஊர்வசி அமிர்தராஜை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக எஸ்.பி.சண்முகநாதன் 6-வது முறையாக போட்டியிடுகிறார். ஏற்கெனவே 2001, 2011, 2016 தேர்தல்களில் வென்ற சண்முகநாதன், ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை அமைச்சர்களாக பதவி வகித்துள்ளார். 2006 மற்றும் 2021 தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

எளிமையானவர், உள்ளூர்வாசி, எப்போதும் அணுகலாம் என்பது அவருக்கு சாதகமான அம்சங்கள். மேலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கணிசமாக உள்ள பாஜக மற்றும் அமமுக வாக்குகள் அவருக்கு கைகொடுக்கும் என அதிமுகவினர் உறுதியாக நம்புகின்றனர்.

வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கும்  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.சண்முகசுந்தரம்.

வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.சண்முகசுந்தரம்.

தான் அமைச்சராக இருந்த போது தொகுதிக்கு செய்த பணிகள், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறியும், மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் நிறைய திட்டங்களை கொண்டு வரலாம் என கூறியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த முறை புதிதாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக சார்பில் வி.ஜி.சரவணன் போட்டியிடுகிறார். இவர் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறியும், தொகுதியில் நெல், வாழை, முருங்கை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும், இளைஞர்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறி ஆதரவு திரட்டி வருகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடு்ம் எஸ்.சண்முகசுந்தரம் தாமிரபரணி நதி மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். கல்குவாரி, மணல் கொள்ளை போன்ற இயற்கை வளங்களை சுரண்டும் நடவடிக்கைகளை தடுத்து இயற்கை வளங்களை பாதுகாப்போம் என கூறி மக்கள் மத்தியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் யாரை மக்கள் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்

நவதிருப்பதி கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். தாமிரபரணி ஆற்றில் உள்ள மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை, 53 பாசனக்குளங்களை தூர்வார வேண்டும். மழைக்காலங்களில் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பொருட்கள் சேமிப்பு கிட்டங்கி அமைக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், குறிப்பாக வாழை, முருங்கை சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். 2023 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்டவை தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.

வாக்காளர்கள் விவரம்

• ஆண்கள்: 1,05,728

• பெண்கள்: 1,08,535

• இதரர்: 5

• மொத்தம்: 2,14,268